பொதுவாகவே சிலர் நரேந்த்ரமோடியினைப்
பற்றி அவதூறுகள் பரப்புதலையே நெட்டில் செய்துகொண்டு, தங்களின் நடுனிலைத் தன்மையினை
நிரூபிக்க முயல்கின்றனர். அதாவது அவரைப்பற்றி மனம்போனபடி எழுதிவிட்டால் அவர்கள்
ஞாயவாதிகள் என்று எடுத்துக்கொள்ளலாம், என்று அர்த்தமாம். கொள்ளை, கொள்ளை,
இதுவரையிலும் உலகமே கண்டிராத அளவுக்கு இந்தியப்பணத்தை மொத்தம் மொத்தமாய்க் கொள்ளையடித்து,
அவற்றை வெளிநாடுகளில் பதுக்கிகொண்டு இந்தியப் பொருளாதாரத்தையே நாசமாக்கிக்கொண்டு
இருக்கும் சோனியாவின் நல்லாசியுடனான மன்மோகனின் காங்க்ரஸ் அரசு, இவர்களுக்கு
ஒன்றுமில்லையாம். ஆனால் முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்டு ஆட்சி நடத்தி குஜராத்தை
இந்தியாவின் முதன்மை மாநிலமாகவும், உலகின் அனைத்து நாடுகளும் விழித்துக் கண்ணோக்க
வைத்திடும் அளவு வளர்ச்சியினை காட்டிய மாநிலமாகவும் மாற்றிக்காட்டிய மோடி,
இவர்களுக்கு அயோக்கியனும், மதவாதியுமாம். கொள்ளையடித்த
பணத்தையெல்லாம் மிக லாவகமாக பங்கிட்டு அனைத்து தோழமைக் கட்சிகளும் பலனடைந்து, அவர்களுக்குள்
ஜால்றா தட்டுவதில் அர்த்தம் இருக்கின்றது. இவர்களுக்கு என்ன வந்தது?
மோடி மதவாதி, நாட்டைக்
கூறுபோட்டுவிடுவார், எங்கிறார்கள். இவர்கள் இப்படிக் கூறுவதற்கு எந்த
முகாந்திரமும் இல்லை. 2002ல் நடந்த கலவரம் பற்றியே வாழ்நாள் முழுமைக்கும்
பேசிக்கொண்டிருக்கக் கூடாது. எல்லா மாநிலங்களிலும் ஏதாவதொரு வகையில் தீர்க்க
சிரம்மான பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அவைகளையே திரும்பத்திரும்ப சொல்லி
நோகடிக்கக்கூடாது. அதன்பின் ஏதாவதொரு வகையில் கலவரமோ அல்லது ஒரு ஒற்றுமையற்ற
நிலையோ குஜராத்தில் வந்ததுண்டா? எந்தப் பிரச்சனையாயினும் அவற்றை சிறந்தமுறையில்
மோடி, யாருக்கும் எந்த துன்பமும் வராவகையில் கையாண்டிருக்கின்றார். அதுதான் உண்மை.
சாதனைபுரிந்த ஒருவர், சாதிப்பார், நம்நாட்டையும் ஒரு தலைசிறந்த நாடாக
ஆக்கிக்காட்டுவார் என்று நம்புவதில் என்ன தவறு இருக்கமுடியும். ஒன்றுமட்டும்
நிச்சயம், இன்னொருமுறை காங்க்ரஸ் ஆட்சிக்குவந்தால், நம் இந்தியா, இத்தாலியின்
அடிமைநாடாகவும், ரூபாயின் மதிப்பு, டாலருக்கு 200 ரூபாய்வரைகூடவும் சென்றுவிடக்கூடும்.
ஸ்விஸ்வங்கிகளைப்போல உலகம் முழுமைக்கும் எல்லாநாடுகளும் வங்கிகள் துவக்கி நடந்துகொள்ளத்
துவங்கிவிடும். அழிவுப்பாதையில் செல்வதை முதலில் நிறுத்தியாக வேண்டும். மேலும்
பிஜெபி மட்டுமே நதிகள் இணைப்பை செயல்படுத்தும் திட்டத்தை முன்னிருத்தி வைத்திருக்கின்றார்கள்.
பிஜெபி, அன்னாஹஸாரே, ஆம்
ஆத்மி, கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் இதுபோன்ற ஒருங்கிணைந்த மனம் கொண்ட கட்சிகள்,
இந்தியாவினை முன்னேற்றத் துடிக்கும் எண்ணம்கொண்டவர்கள் கூட்டாக இணைந்து நாட்டைக் காப்பாற்றிட
முனையவேண்டும்.