Tuesday, 2 July 2013

நரேந்த்ரமோடி...


பொதுவாகவே சிலர் நரேந்த்ரமோடியினைப் பற்றி அவதூறுகள் பரப்புதலையே நெட்டில் செய்துகொண்டு, தங்களின் நடுனிலைத் தன்மையினை நிரூபிக்க முயல்கின்றனர். அதாவது அவரைப்பற்றி மனம்போனபடி எழுதிவிட்டால் அவர்கள் ஞாயவாதிகள் என்று எடுத்துக்கொள்ளலாம், என்று அர்த்தமாம். கொள்ளை, கொள்ளை, இதுவரையிலும் உலகமே கண்டிராத அளவுக்கு இந்தியப்பணத்தை மொத்தம் மொத்தமாய்க் கொள்ளையடித்து, அவற்றை வெளிநாடுகளில் பதுக்கிகொண்டு இந்தியப் பொருளாதாரத்தையே நாசமாக்கிக்கொண்டு இருக்கும் சோனியாவின் நல்லாசியுடனான மன்மோகனின் காங்க்ரஸ் அரசு, இவர்களுக்கு ஒன்றுமில்லையாம். ஆனால் முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்டு ஆட்சி நடத்தி குஜராத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாகவும், உலகின் அனைத்து நாடுகளும் விழித்துக் கண்ணோக்க வைத்திடும் அளவு வளர்ச்சியினை காட்டிய மாநிலமாகவும் மாற்றிக்காட்டிய மோடி, இவர்களுக்கு அயோக்கியனும், மதவாதியுமாம்.  கொள்ளையடித்த பணத்தையெல்லாம் மிக லாவகமாக பங்கிட்டு அனைத்து தோழமைக் கட்சிகளும் பலனடைந்து, அவர்களுக்குள் ஜால்றா தட்டுவதில் அர்த்தம் இருக்கின்றது. இவர்களுக்கு என்ன வந்தது?

மோடி மதவாதி, நாட்டைக் கூறுபோட்டுவிடுவார், எங்கிறார்கள். இவர்கள் இப்படிக் கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. 2002ல் நடந்த கலவரம் பற்றியே வாழ்நாள் முழுமைக்கும் பேசிக்கொண்டிருக்கக் கூடாது. எல்லா மாநிலங்களிலும் ஏதாவதொரு வகையில் தீர்க்க சிரம்மான பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அவைகளையே திரும்பத்திரும்ப சொல்லி நோகடிக்கக்கூடாது. அதன்பின் ஏதாவதொரு வகையில் கலவரமோ அல்லது ஒரு ஒற்றுமையற்ற நிலையோ குஜராத்தில் வந்ததுண்டா? எந்தப் பிரச்சனையாயினும் அவற்றை சிறந்தமுறையில் மோடி, யாருக்கும் எந்த துன்பமும் வராவகையில் கையாண்டிருக்கின்றார். அதுதான் உண்மை. சாதனைபுரிந்த ஒருவர், சாதிப்பார், நம்நாட்டையும் ஒரு தலைசிறந்த நாடாக ஆக்கிக்காட்டுவார் என்று நம்புவதில் என்ன தவறு இருக்கமுடியும். ஒன்றுமட்டும் நிச்சயம், இன்னொருமுறை காங்க்ரஸ் ஆட்சிக்குவந்தால், நம் இந்தியா, இத்தாலியின் அடிமைநாடாகவும், ரூபாயின் மதிப்பு, டாலருக்கு 200 ரூபாய்வரைகூடவும் சென்றுவிடக்கூடும். ஸ்விஸ்வங்கிகளைப்போல உலகம் முழுமைக்கும் எல்லாநாடுகளும் வங்கிகள் துவக்கி நடந்துகொள்ளத் துவங்கிவிடும். அழிவுப்பாதையில் செல்வதை முதலில் நிறுத்தியாக வேண்டும். மேலும் பிஜெபி மட்டுமே நதிகள் இணைப்பை செயல்படுத்தும் திட்டத்தை முன்னிருத்தி வைத்திருக்கின்றார்கள்.  

பிஜெபி, அன்னாஹஸாரே, ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் இதுபோன்ற ஒருங்கிணைந்த மனம் கொண்ட கட்சிகள், இந்தியாவினை முன்னேற்றத் துடிக்கும் எண்ணம்கொண்டவர்கள் கூட்டாக இணைந்து நாட்டைக் காப்பாற்றிட முனையவேண்டும்.

Wednesday, 13 March 2013

ஒரு தீவிரவாதம், ஒரு கடவுள்

ஒரு தங்கை, அவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். தம்பிக்கு படிக்க மெடிக்கல் சீட் கிடைத்திருக்கிறது, அவனை நன்றாகப் படிக்க வைத்திட வேண்டும். நம்மால்தான் படிக்கமுடியாமல் போய்விட்டது, அவர்களாவது சிறப்பாக வாழ்ந்திட வழிசெய்திட வேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு பூர்வீகமாய் பாத்தியப்பட்ட அந்த 20 செண்ட் நிலம். அது ஒன்றே அத்தனைக்கும் ஆதாரம். நான்குவழிச் சாலையின் உபயம். வாஜ்பாய் வாழ்க. அதன் தற்போதய விலை, 20 லட்சம். ஆனால் அவனின் கையில் காலனா கிடையாது. இதுதான் அவனின் நிலை. சிறுவயதிலேயே பெற்றொர் இறந்துவிட்டதால், அவன் வாழ்வு மிகவும் கடினமாகிப் போய்விட்டது.
யாரோ ஒருவர் அமெரிக்காவில் பெரிய இஞ்சினியராம், அந்த இடத்தைக் கேட்டுவந்தார். ஒருமாதிரியாகப் பேசி மொத்தம் 19.5 லட்சத்திற்கு முடிவாகியது. 15 நாட்கள் மட்டுமே கெடு. அவரும் அதன்பின் அமெரிக்காவுக்கு திரும்பிட வேண்டியதிருந்தது. ஒரே கண்டிஷன், அது ஜாய்ண்ட் பட்டாவில் இருப்பதால் தனிப்பட்டா பிரித்து வாங்கித்தர வேண்டுமாம். தனிப்பட்டா ஒன்றும் கஷ்டமில்லை என்று நினைத்ததுதான் தவறாகிப்போனது. தாசில்தார் நாட்களை கடத்திக்கொண்டு இருந்தார். அவனும் தினமும் அலைந்துகொண்டுதான் இருந்தேன். எல்லாமும் சரியாகவே இருந்தது ஆனாலும் தாசில்தார் ஏன் இப்படி அலையவிடுகிறார் என்பது புரிந்துகொள்ள முடியவில்லை. கொஞ்சம் முண்டிக் கேட்டபொழுது கிராம அதிகாரி சொன்னார், கையெழுத்துப்போட தாசில்தார் பணம் கேட்கிறார். பொதுவாக இதுபோன்ற இடத்துக்கு 2 லட்சம் வாங்குவார், நாந்தான் குறைத்துப்பேசி 1 3/4 க்கு சம்மதம் வாங்கியிருக்கிறேன் என்றும், பணம் கைமாறியதும் வேலை முடிந்திடும் என்றார். அவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. அவனால் அவ்வளவு பணம் கொடுக்கவும் முடியாது. மனமுமில்லை. வாக்குவாதம் ஆகிப்போனதால், ஏறுக்குமாறான காரணங்களைக் கூறி வேலைமுடியாமல் ஆக்கிவிட்டார், தாசிதார். இடமும் சொன்ன நாளில் முடிக்கமுடியாததால் எல்லாமும் தடையாகிப்போனது. அவன் வாழ்க்கையின் மிகப்பெரிய அவமானம். தங்கையை மணமுடிக்க இன்னும் சிலகாலம் காத்திருக்கவேண்டியதாகிற்று. தம்பியின் படிப்பும் கேள்விக்குறி. கோபம் அவன் கண்களை மூடிவிட்டது. இதற்கெல்லாம் காரணமான அந்த தாசில்தார்மீது வெறுப்பேறியது. அவனுக்கு அதைப் புரியவைக்க வேண்டும். வாழ்க்கையில் அவன் இனி தவறே செய்திடக்கூடாது. அவனின் எண்ணம் அதையே திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தது. கொள்ளையடிப்பதை பணமுள்ளவனிடம் அடிக்கவேண்டியதுதானே, நான் என்ன பாவம் செய்தேன், என்றெல்லாம் புலம்பித்தீர்த்தான் மனுதுக்குள்ளே.
தாசில்தாரின் வீட்டருகே சென்று அவரின் நடவடிக்கைகளை அனைத்தையும் நோட்டமிடத் துவங்கினான். பத்துனாட்கள் மாறுவேடத்தில் நெருக்கமாகக் கவனித்தான். காலையில் 4 மணிக்கே எழுந்துவிடுகிறார். சரியாக 6 மணிக்கு தினமும் வீட்டருகே உள்ள கோவிலுக்குச் செல்கிறார். அடுத்தவன் வாழ்வை கொஞ்சமும் இரக்கமின்றி அழித்துவிட்டு, கடவுளுடன் என்ன வழிபாடு வேண்டியதிருக்கிறது? செய்யற தப்பையெல்லாம், பாவங்களையெல்லாம் செய்துவிட்டு அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால்மட்டும் பாவம் கழுவப்பட்டுவிடுமா? இதில் அங்கிருந்த பிச்சைக்காரர்களுக்குவேறு தானம்! அதன்பின் அருகிலுள்ள மைதானத்தில் நடைப்பயிற்சி. மைதானம் செல்லும் வழியில் ஒரு சிறு பாதை. அங்கு ஆளரவமே இல்லை. சரியாக பத்துக்கு அலுவலகம். இப்படிப்பட்டவங்கள் எல்லாம் வேலைக்குமட்டும் சரியாகவே சென்றுவிடுகிறார்கள். மாலை 7 க்கு மறுபடியும் வீடு. இதுதான் அவரின் ஒருனாளின் வாழ்க்கை. இவற்றில் கோவிலிலிருந்து மைதானம் செல்லும்வேளை அந்த சிறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியினை, அவரைத் தாக்க சரியான இடமாக அவனுக்குத் தோன்றியது. அந்த நேரத்தையே முடிவுசெய்தான். ஒரு 14எம்எம், ஆறடிக் கம்பி ஒன்றை எடுத்து வைத்துக்கொண்டான்.
அந்த இடத்திற்கு அந்த நாள் வந்தார். சரியாக பின் மண்டையில் ஒரே அடிதான் சுருண்டு வீழ்ந்துவிட்டான். கிரிக்கெட்டின் புல்ஷாட்பொல். கோவிலுக்குச் சென்று அதே கடவுளை தரிசித்தான். அவர் அவனைப்பார்த்து இன்னும் சிரித்துக்கொண்டுதான் இருந்தார். ஒரு தீவிரவாதம், உருவாக்கம்.
 

Monday, 11 March 2013

ஜெல்லிபோன்ற உயிரினம்

அந்த கேலக்சியின் பெயர் எஃஸ்யி. அதில் அந்த சூரியனின் பெயர் எஃஸ்யி91. நம் சூரியனைப் போல லட்சம் மடங்கு பெரியது. மொத்தம் 7500 கிரகங்களைக் குடும்பமாகக் கொண்டது. அதில் ஐ23 என்ற கிரகத்தில் வாழும் சிலிகானால் ஆன ஜெல்லிபோன்ற உயிரினம், ஜெ எனப்படுவது. அவைகள் ஆன்மசக்தியில் உருவாகி வாழ்பவை. எந்தவிதமான உருவத்திற்கும் மாறத்தகுந்தவை. எல்லாவிதமான உணர்வுகளையும் அறிய வல்லவை. அவைகளின் ஞானக் குழு ஒரு கருவியினைக் கண்டுபிடித்தது.
அதாவது ஒரு ஜெயை அந்தக் கருவியினுள் இட்டு -272.9999 டிகிரி செல்ஷியசுக்கு உறைய வைத்தால் அந்த ஜெ ஒரு எலெக்ட்ரானாக உரு மாற்றப்பட்டுவிடும். பின் அந்த எலெக்ட்ரானை அந்தக் கருவியின் மூலம் எய்தால், அது எலெக்ட்ரானின் கூடுவிட்டுகூடு பாயும் வேகம்போல் செல்ல வல்லது. அதுபோல் அதன் ரிவர்சை போட்டால் மறுபடியும் அதே கிரகத்திற்கு திரும்பிவிடும். 
இப்பொழுது ஒரு பெண்ஜெல் ஜெயை பரிசோதனையாக அந்தக் கருவியில் இட்டு எய்வதாகத் திட்டம். அந்தக் கருவியினுள் ஒரு ஜெயை அமர்த்தியாயிற்று. அதை -272.9999 டிகிரி செல்ஷியசுக்கு மாற்றி பின் எய்தாகிவிட்டது. அது ஒரு எலெக்ட்ரானாக உருமாறி 30 செக்கண்டில் அதற்கு மிக நேர்கோட்டில் அமைந்த பூமியின், தமிழ்நாட்டின், சத்திரப்பட்டி என்ற கிராமத்தில் வந்தும் சேர்ந்துவிட்டது. பூமியினை வந்தடைந்ததும் இங்குள்ள காந்தத்தன்மையின் மாற்றத்தால் சிலிகன் ஜெல்லால் ஆன ஒரு பெண்ணாக, நடிகை ஸ்னேகாபோல உருமாற்றம் அடைந்தது.
அவன் சத்திரப்பட்டியிலேயே வாழ்ந்து வருபவன். அவனுக்கு நடிகை ஸ்னேகா என்றால் மிகவும் பிடிக்கும். ஏன் தினமும் அவளைப்பற்றிதான் அவனின் கனவுகள் எல்லாமே. அவளுக்குப் பிடிக்கும் என்பதாலேயே அவனுக்கான உடைகள், இன்னபிற சாமான்கள் அனைத்தும் சென்னை செல்லும்வேளை சரவணா ஸ்டொர்ஸிலே வாங்கிவருவான். அன்று இரவும் அவள்பற்றின கனவுகள் அவனுக்கு ஒளிதர பட்டென நடுயிரவில் விழித்துக்கொண்டான். குடிசையின் வெளியில் அமைந்த திண்ணையில் சென்று சிறிது நேரம் அமர்ந்திருந்தான். அப்பொழுதுதான் அவன் கண்டதை அவனால் நம்ப முடியவில்லை. அங்கே அவனின் கனவுக் காதலி ஸ்னேகா அவனை நோக்கி பஞ்சுமெத்தைமேல் நடப்பதுபொல் அசைந்து நடந்து வந்துகொண்டிருந்தாள். அவளை வரவேற்றான். நனாவா என்பதற்காக கையைக் கொஞ்சம் கிள்ளிப் பார்த்துக்கொண்டான். நனவுதான். வீட்டினுள் எவரும் இல்லையாதலால் வீட்டினுள் அழைத்தான். வந்தாள். அப்படியே அவளையணைத்து படுக்கையில் கிடத்தினான். முத்தமிட்டான். மொத்த உடலும் நொங்குபொல பஞ்சாக இருந்தது. இப்பொழுது கலவி ஆசையில் அவளை மெதுவாக கட்டிக்கொண்டு கலவினான். உச்சயின்பம் கொள்ளும்வேளை அவனால் அந்த இன்பம் உடல்முழுவதும் பரப்பப்படுவதை உணரமுடிந்தது. ஆனால் ஆச்சரியம் அந்தக் கலவி முடிந்தபின்னும் அந்த இன்பத்தின் அளவு பலமணி நேரம் குறைந்திடவேயில்லை. சிறிது நேரத்தில் ஸ்னேகா எழுந்து வெளியில் சென்றாள். அவன் சில மணிக்குப் பின்னர் வெளியில் சென்று பார்க்கையில் அவளைக் காணமுடியவில்லை. மறைந்துவிட்டிருந்தாள். ஆனாலும் அவனுக்குக் கிடைக்கப் பெற்ற உச்ச இன்பம் கொஞ்சமும் குறைந்திடவேயில்லை. 
ஞானக்குழு ரிவர்ஸ்ஸை அழுத்தியதும் அவள் சட்டென விண்வெளியில் பறந்தாள். பூமியின் கட்டுப்பாடு தாண்டியவுடன் -272.9999 டிகிரி செல்ஷியஸ் வந்தவுடன் அவள் ஒரு எலெக்ட்ரானாக தன்மாற்றம் பெற்று 30 நொடியில் ஐ23 கிரகம் வந்தடைந்தாள். அங்கு தன்னனுபவத்தினை எல்லோர்க்கும் விவரித்தாள்.
அவனுக்கு அவளுடன் கொண்ட உடலுறவால் அதன்பின் உச்ச இன்பம் குறையவேயில்லை. மகிழ்ந்துபோனான். இறைவனைப்பொல் உணர்ந்தான். 

Friday, 8 March 2013

அவளும் ஒரு மகளீர்தான்

நினைத்து நினைத்துத்தான் பார்க்கிறேன்,
அன்னியப்படுத்திப் பார்த்திடமுடியவில்லை
அந்த அருமை மகளீரை.

அவள் உறங்கிப் பார்த்ததில்லை
சிரிப்புடன் மரணித்துக் கிடத்தும்வரை.

விழிப்பது அதிகாலையாய்த்தான் இருக்கும்,
படுப்பது பின்னிரவாய்த்தான் இருந்திருக்கும்.

கண்விழித்ததும் நாங்கள் காண்பது,
கால்களை நீட்டி அமர்ந்து கதை விவாதம்
செய்திடுவது அன்றய தினசரிச் செய்திகளை.

அடுத்த நொடி இனிமையான அந்த டீ.
அரட்டையொடு சேர்ந்த அரவணைப்பு.
அன்பாக அதிலொரு ஆரவார சண்டை.

இங்கே இப்பொழுது பேசிக்கொண்டுதானே
இருந்தாள், பின்னெப்பொழுது சமைத்தாள்?
விளங்கவேமுடியாத அசுரவேகம்.

பள்ளி செல்கையில் வைத்த இடம்
மாறி மறந்த பொருள் அனைத்தையும்
எடுத்து அவரவர்க்கு தேடித்தேடியுதவி.

மாலையில் விளையாடையில்,
நேரம் சிலதுளி தாண்டையில்
தொடையில் நுள்ளிடும் பொறுப்பு.

தூசி கண்டதில்லை, நேரம்
தவறியதில்லை, சமையல் ருசி
மாறியதில்லை, வைத்த பொருள்
இடம் மாறிப்போனதில்லை.

உறங்கியதை, சமையல் செய்வதை,
வேலை செய்வதை, மற்ற இன்னபிற
கடமைகளை செய்வதினை கண்டதில்லை.

கண்டதெல்லாம் நேரத்திற்கு எல்லாமும்
கணகச்சிதமாய் முடிந்திருந்ததைத்தான்.
எந்தப்பொழுது நடக்குமென யூகிக்கமுடிவதில்லை.

வெளிவேலைகள் எல்லாமும் அவள்தான்.
காய்கறி வாங்கிவருவதும் அவள்தான்.
மாவாட்டுவதும் மாடுகறப்பதும் அவள்தான்.

தெருவினில் வரிசையில்னின்று நீர், குடம்
குடமாய் கொண்டுவருவதும் அவள்தான்.
அங்காடி பொருள் சுமப்பதும் அவள்தான்.

முழுவாரமும் என்றென்று என்ன
சமையல் என்பதினை முடிவுசெய்து,
வருமான மிச்சம் செய்வதும் அவள்தான்.

வரவு செலவு, வாங்கவேண்டியது,
கொடுக்கவேண்டியது, பார்க்கவேண்டியது
மருத்துவ ஒதுக்கீடு மொத்தமும் அவள்தான்.

வாழ்ந்தவரை மக்களுக்காகவும்,
மனைக்காகவும்,மணவாளனுக்காகவுமே
மனம் நோகாமல் இன்பமாய் வாழ்ந்தவள்.

துன்பங்களையும் இன்முகமாய் கொண்டு,
துயரங்களையும், வறுமையினையும்,
வென்று வாழ்வுக்கு ஒளிவிளக்கு ஏற்றியவள். 

முழு உரிமையையும் கைக்குள் கொண்டவள்.
தருணத்தில் சரியான முடிவுகளையே எடுத்தவள்.
குறையாய் எதையும் எவரும் பேசிட இடம்தராதவள்.

கும்பிடும் தெய்வமான தாயவள்தனை எங்ஙனம்
மகளீர் என ஒதுக்கி முத்திரையிட்டு தழுவத்தழுவ,
வாழ்த்திடுவது சொல்வீர் எம் நண்பர்காள்.

தெய்வம், தாயில்லாமல் எவருமில்லை.