Sunday, 5 February 2012

அன்பு செய் இன்பு தரும்


செய்வதெல்லாம் சரிதான்
முப்பொழுதும் எப்பொழுதும் நமக்கு

சற்று தள்ளிநின்று நாம் சரிதானா
என்று நமக்குள்ளே உற்றுநோக்குவோம்.

உயிராய் உயிர்ப்புடன் உள்ளவையனைத்தும்
மறு மாற்றத்திற்கு உரியன.

மலர்கள் கனியாகவும் விதைகள்
மரமாகவும் மாறுவது விதி.

நாமும் நன்மை கருதி நம்மை
மாற்றிக்கொண்டால் நன்மையே

பண்புடன் பணிவுடன் அன்புடன்
கருணையுடன் கனிவுடன் அன்புசெய்

இன்புசெய், இழப்பது ஏதுமில்லை
இனியொருமுறை வாழ்வு இல்லை.

உலகம், நட்பு, காதல், உறவுகள்
அனைத்துமான இறைவனும் நம்மிடம்

 சந்திக்கவும் மறுத்துவிட்டு, 

சிந்திக்கவும் இயலாமல்நின்று,

நிந்திக்கவும் மனமின்றி,
எந்திக்கவும் முடியாமல்,

விந்திக்கிறாய் வந்ததிக்கில்
திரும்பிக்கொண்டே, குழம்பி.

காதலைத் துறந்துவிட்டேன்,
நட்பினை முழுதாய் நிரப்பிக்கொண்டே.

கடமையை முடித்த திருப்தி,
இனி ஆண்டாறு ஓடவேண்டும்.

மனதினில் பாரமுமில்லை,
மறுமுனை பற்றின கவலையுமில்லை.

காட்டாற்று வெள்ளமாய் ஓடுகின்றேன்,
அணைத்துக்கிடக்க ஆருக்கும் ஆர்வமுல்லை.

அன்பினில் கட்டுண்டு கிடக்கிறேன்,
கவலைகளனைத்தையும் மறந்து நிலையி

No comments:

Post a Comment