Wednesday, 31 August 2011

மேகம்

திருடி உறிஞ்சிய நீரை
சுமக்க தடுமாறி கொட்டிய மழை.
சேகரித்த மதுவைஎல்லாம்
தேனாய் மாற்றுமாம் தேனி,
அதுபோல் நீரெல்லாம் தேன்.
கலவுக்குதவிய கதிரவனையே
மறைத்துநின்றாய். மறைந்துவிட்டாய்
கர்ப்பம் கலைந்து,
வானம் பற்றவைத்த,
மறையும் சூரியனை காட்டி.
எங்கு சென்று மறைந்தாய்
களவை மறைக்க.

விலைபோன அன்பு

அன்னை தெரசா.
அப்படி படைத்ததென்ன சாதனை,
இவ்வளவு புகழ்மாலை அணியப்பெற.
கிழித்துவிடவில்லை ஒன்றும்.
என்ன, கல்கத்தாவின் தெருஓர
அனாதைக்குழந்தைகளின் அழுக்கை அகற்றி,
பின்னர் கொடுத்தது என்னவோ
சிலுவையைத்தான்.
சிலுவையை பரப்பியமைக்கு,
பணம் கொடுத்த கிருத்துவம் வணங்கட்டும்.
வரி விதிக்கப்பட்ட அன்புகளுக்கு
நாம் ஒன்றும் சிலை வைக்கவேண்டாம்.
அரசு கவனிக்க மறந்து,
விலையாகிப்போனஅன்பு,
விதியன்றி அர்ப்பணிப்பாகா.
அன்பின் விலை மதம்,
மதம்கொண்ட தெரசா.

கர்மவீரர்

தமிழர் மீது தணியா
அன்பு.
கட்டிவைத்த அத்தனை
அணைகள்,
கழனி செழிக்க
நீர்நிலைகள்,
வளர்ந்தெழ வழியமைத்த
ஆலைகள்,
கற்றுத்தெளிய
கல்விச்சாலைகள்,
பசி மறந்து படிப்புணர்த்திய
உணவுத்திட்டங்கள்,
மொத்த நாட்டுக்கும்
மின்சாரம்,
எல்லா துறையிலும் வளர்ச்சிதான்
பொற்காலம்தான் உம் ஆட்சிக்காலம்.
கைவண்டிக்காரன் மகன்
கலெக்டர்.
நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.
நீங்கள் போட்ட ரோட்டில்
கோடுபோடக்கூட
திறனன்றி திணறி ஓடுகின்றோம்
உதவ நாதியின்றி.
உரம் இட்டுச்சென்றீர்,
எப்படி வளர்கிறோம் என்றுகூட
உணரமுடிய விதைகளுககு.
உடுண்டோடிவிட்டன
காலவருடம் 45
மழைநீர், தென்றல்காற்று, தந்த இறைவன்
கொடுத்தது உங்களை, தானமாய்.
மணம் பதைத்துத்
திகைத்து நிற்கின்றோம்,
நன்மை செய்வது என்பதைக்கூட
மறக்கடித்த இந்த நிகழரசியல்
கலை கண்டு.
தமிழனுக்கு எப்படியும் வெற்றி உண்டு
உங்களால்.

நடையழகு

மெல்லிய மலர்ந்திருந்த ரோஜா,
அவள் முகம்,
வண்டுகள் அவளின் கண்கள்.
மது நனைந்த இதழ்கள்,
அவள்தன் கள் வழியும் உறவுகள்.
அவளின்
இறுக்கமான ஆடையின் அசைவுகள்
அவனின்
கவனக்கலைப்பானது.
கவலைப்பட்டான்.
நடையழகால் இடையழகா இல்லை,
இடை இடையே உடையும்
இடை சழிவால் நடையழகா.
முடிவு கிடைக்காதது.
மலைப்பானான்.
மொத்த உடையின் தடையினால்
வெருப்பானான்.

கனிந்தது

அசைந்து அசைந்து ஆடிவந்த தென்றல்,
உரசிய உன் ஸ்பரிசத்தினால்
துளிர்த்த ரகசிய சந்தோஷத்தில்,
தவித்து தனித்து நிலை மயங்கி
நின்ற என்னை
ஏளனமாய்ச் சிரித்துச் சென்றது.
விட்டு விலகிய சூரிய ஒளி
பூமி மறைத்த பாவத்தினால்,
மேகத்தினை இடித்து உடைத்த
வான் விரிசலில்
ஒழுகி வழிந்த மழை,
உன் வளைவுகளில் வாழ்ந்து முடித்து,
நினைவு தவறி என் கால்களையும்
முத்தமிட்டுச் சென்றது.
கட்டிவைத்த வார்த்தைகளை
கொட்டிவிட முடியாமல் தவித்துவிட்டதை
அவிழ்த்து விட்ட காரணத்தால்,
அவைகளும் வாழட்டும் என்னோடு.

வாழ வழியில்லை

வாழ வகையின்றி
வழிந்த வேர்வையுடன்
கசையடி தன்னையே
அடித்துக்கொண்டு
காசு கேட்கும் மனிதம்.
வாழவைப்பேன் என உறுதிமொழி
எடுத்த அமைச்சர்கள்,
பார்த்துப் பரவசத்தில்
மாட்டினைப்போல்.
2020 ல் வல்லரசாவோமாம்,
கோட்டி பிடித்துவிட்டது நம் கலாமுக்கு!

மலர்ந்த காதல்

வீழ்ந்த துளி
இணைய அனுமதியில்லை
மீண்டும் மேகத்துடன்.
சிந்திய வார்த்தைகள்
அள்ளமுடிவதில்லை
கொட்டியபின்.
குடித்த கள்
நினைவு பெறுவதில்லை
முடித்தபின்.
கண்ணே,
காதலில் மட்டும்
எதற்கும் முடிவில்லை
விடிவு உண்டு.
கண்டுகொள்.
கடந்த தவறுகளை எல்லாம்
கழுவிஎடுத்து கடைந்து
குழம்பிக்கொண்டிருக்காமல்,
முடிந்தது முடிந்ததாய் முடிந்தபின்,
எல்லாம் மறந்துவிட்டு,
செத்தவனுக்கு ஜாதகம் காணவிழையாமல்,
மத்தவனையும் மனத்தால் எண்ணாமல்
முழுவதுமாய் கலந்துவிடு
காதலுக்கு மரியாதையாய்