Monday, 24 October 2011

விலை கொடுத்து வாங்கிய இரவு

ஆதவன் மறையும், உதிக்கும் தருணங்கள்.
மாலை 6 முதல் காலை 6 வரை.

இரவின் ஐந்து பொழுதுகள்.
மாலை,முன்னிரவு,நடுநிசி,பின்னிரவு,அதிகாலை.

கலவிப் பொழுதின் துவக்கம் மாலை.
விழிகளின் விருப்ப அலைகளின் மயக்கம்,

விரும்பி வலையில் விழுந்து
விண்ணப்பமிடும் விளையாட்டு.

கலக்கப்பட்ட கண்கள் பொய்க் கோபமுடன்
களமிறங்கத் துடிக்கும் கவிதை.

முன்னிரவின் முகம், மலர்ந்த
தாமரையின் அங்க அணிவகுப்பு.

முத்தக் காற்றின் முழு சுகந்தத்தையும்
விதைத்து நின்றது முன்னிரவு.

இத்தனை மலர்களா! சுமந்து கிடக்கும்
உன் இடை வலிக்குமல்லவா, என்ற முனகல்.

உரசலின் வலி, உள்ளம் பரவிநிற்கும்,
உணர்வுகள் உச்சக்கதவினைத் தட்டிநிற்கும்.

கண்களில் கவரப்பட்ட காதல்,
கலவரப்பட்டு கனிந்து கலந்து கலைந்தன,

காமரசம் கடலலையாய் கரைகடந்து
கவனமுடன் கடவுளைக் கண்ணுற்றபின்.

நடுநிசியின்வரை நீளும் இந்த நடுங்கி
நடனமிடும் நட்பின் இரகசியம்.

பின்னிரவின் உறக்கத்தினுள்ளும் உரசிக்கிடக்கும்,
உருமாறாத ஒவ்வொரு இயக்கமும்.

கனவுகள் கலையாத, நிஜங்களின்
நினவுகள் புரியாத புத்தம்புது அதிகாலை,

புரண்டவுடன் பட்ட உடையில்லா இடை,
உடைந்த உலகை மறுபடி உசுப்ப,

உணர்வின் உச்சத்தில் உலகுமறந்த
ஒரு இன்புலகம் புணர்ந்து சமாதியானான்.

வாடகைக்குக் கிடைத்த அன்பு,
அந்தரத்தில் தொங்கி நிற்க,

விலைகொடுத்து வாங்கிய என் பயத்துடன்
விடிந்துநிற்கின்றது விடிகாலை.

No comments:

Post a Comment