ஒரு பௌர்ணமி இரவுதான் ஆனாலும்,
காதலில் அனாதையாக்கப்பட்டுத் தடுமாறி,
முகவரி மறந்து அலையும் மேகம்.
அன்பின் அமுது அதிகமாய்க் கடையப்பட்டதால்,
நீலம் பூத்து விஷமாகிப்போன மனம்.
கூவ மறுத்த குயில் குலையினுள் மறைய,
வெற்று மொழி பேசித் திரியும் தென்றல்.
கலவரம்கொண்ட மனம் கலையிழந்ததால்,
மூங்கில் சங்கீதம் உணரா உணர்ச்சிகள்.
உள்ளக்கிடக்கையின் உலை கொதித்தும்,
உண்மை மறைந்த உறங்கா நினைவுகள்.
முழுமதியாய் மலர்ந்தும் கறைபடிந்து,
முகம் மறந்த உன் நினைவுச்சின்னம்
No comments:
Post a Comment