Friday, 18 November 2011
ஒரு அபலையின் நிலை
குரல் குயிலைவிட இனிமை,
இது நண்பர்களின் ஒட்டுமொத்த கூக்குரல்.
காதலின் மொழிஎன்னவோ இந்த ரோஜா,
ராஜாவிடம் சென்றுவிட்டால் சுசிலாதானாம்.
பட்டினம் சென்றதும் பாய்ப் படுக்கை,
பருவம் விரித்தது பலமான பாசத்துடனே.
பசிவந்தபின் பறந்துவிட்டது பலான பாசம்
பயம் ஒன்றையே விதைத்துவிட்டு.
ராஜாவைக் காண சென்ற இந்த ரோஜா,
கூஜாக்களிடம் சிக்கிச் சின்னாபின்னப்பட்டது.
சுசிலாவின் பாட்டு வானொலியில்,
விலைபேசும் தோள்கள் வாள்விழியில்.
விதிதான் என்று நினைத்திருக்க,
காதலன் வந்தான் மாமா வேலை பார்க்க.
அவனுக்கும் வேலை வேண்டும்தானே!
விஞ்சும் விரகதாபம் தீரவேண்டும்தானே.
பஞ்சுமெத்தைதான், பட்டுச்சேலைதான்,
பகட்டான மாளிகைதான், பந்திவைக்கக்
பக்கத்தில் பணித்தோழியர்தாம்,
பயம் மறத்த, மயக்க வாழ்க்கைதான்.
அழகு மட்டுமே இங்கு மூலதனம்
பின் எல்லாம் பண அறுவடைதான்.
உயர் மனிதர்கள் நெருக்கம்தான்
ஆனாலும் நினைவு ஓரத்தில் துளி கண்ணீர்.
வாடாமல், வழியாமல், வற்றாமல்
வாழ்நாள் முழுமைக்கும் மாற்றவேமுடியாமல்.
நத்தை தன் கூட்டை முதுகில் சுமப்பதுபோல்,
மனதினில் ஒரு விரக்தி கொண்ட துன்பச்சுமை.
Thursday, 17 November 2011
ஏமாற்றின சமூகம்
குரல் குயிலைவிட இனிமை,
இது நண்பர்களின் ஒட்டுமொத்த கூக்குரல்.
காதலின் மொழிஎன்னவோ இந்த ரோஜா,
ராஜாவிடம் சென்றுவிட்டால் சுசிலாதானாம்.
பட்டினம் சென்றதும் பாய்ப் படுக்கை,
பருவம் விரித்தது பலமான பாசத்துடனே.
பசிவந்தபின் பறந்துவிட்டது பலான பாசம்
பயம் ஒன்றையே விதைத்துவிட்டு.
ராஜாவைக் காண சென்ற இந்த ரோஜா,
கூஜாக்களிடம் சிக்கிச் சின்னாபின்னப்பட்டது.
சுசிலாவின் பாட்டு வானொலியில்,
விலைபேசும் தோள்கள் விழிவழியே.
விதிதான் என்று நினைத்திருக்க,
காதலன் வந்தான் மாமா வேலை பார்க்க.
அவனுக்கும் வேலை வேண்டும்தானே!
விஞ்சும் விரகதாபம் தீரவேண்டும்தானே.
பஞ்சுமெத்தைதான், பட்டுச்சேலைதான்,
பகட்டான மாளிகைதான், பந்திவைக்க
பக்கத்தில் பணித்தோழியர்தாம்,
பயம் மறத்த மயக்க வாழ்க்கைதான்.
அழகு மட்டுமே இங்கு மூலதனம்
பின் எல்லாம் பண அறுவடைதான்.
உயர் மனிதர்கள் நெருக்கம்தான்
ஆனாலும் நினைவு ஓரத்தில் துளி கண்ணீர்.
வாடாமல் வழியாமல் வற்றாமல்
வாழ்நாள் முழுமைக்கும் மாற்றவேமுடியாமல்.
நத்தை தன் கூட்டை முதுகில் சுமப்பதுபோல்,
மனதினில் ஒரு விரக்தி கொண்ட துன்பச்சுமை.
Wednesday, 16 November 2011
உண்மையான அன்பு
உள்ளத்தின் கதவுகள் கண்களடா
இங்கே உறவுக்குக் காரணம் பெண்களடா.
கொடுத்துவிடு, இல்லை கலவுசெய்யப்படும்,
கண்களால் கவிபேசும் பெண்களால்.
இருப்பினும், இறப்பினும் உடலால் மட்டுமே,
இவ்வுலகுக்கு மட்டுமே இறப்பேன்.
உண்மையில், உன்னுள் உயித்தேயிருப்பேன்
இப்பூஉலகு அழியும்வரை அல்ல.
படைத்த இருப்புநிலையாகிய,
உண்மையுமாகிய இறைவன் அழியும்வரை.
உண்மையன்பு, ஆழ்மனத்தினிலேயே
துளிர்கிறது, துவண்டு தவிப்பதில்லை
துயில்வதுவுமில்லை, எங்கே எப்பொழுது எப்படி
உருவானது என்பதறியமுடிவதுமில்லை.
மறுக்கப்பட்டால் மனம்
மறுக்கப்பட்ட மனம்
விலகி ஓட நினைக்கும் நிலை.
ஏற்றப்பட்ட உடல்
ஏங்கித் தவிக்கும் விரக தாபம்.
நாறடிக்கப்பட்ட பின்னரே
மனம் சாவடிக்கப்படும்.
சாவடிக்கப்பட்ட பின்னர்
உடல் நாறடிக்கும்.
இந்நிலை தேவையில்லை மனிதத்திற்கு,
ஜீவனற்ற காதலை விடுப்பீர் வாழ்தலுக்கு.
மதுவும் காதலியும்
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்?
மது உண்டவன் அளவு மிகுந்ததும்
மலைந்து கலைந்து நினைவிழப்பதும்,
காதல் மதுவில் அமிழ்ந்து கிடப்பவன்
உடல் நிரம்பி அமுதினில் மிதப்பதுவும்,
நினைவிழந்து, உன்னருகில் மிதந்து கிடந்த
அந்த இனிமையான நாட்கள்,
நினைவலைகளை நிலைநிறுத்தி, நிற்கின்றன,
வண்ணமும் மணமும் பரப்பிக்கொண்டே.
கன்னமும் கிண்ணமும், அடங்காத
கண்ணமிடும் எண்ணமும் விதைத்துக்கொண்டே.
மதுவும் மங்கையும் ஒன்றே
மயக்கவைக்கும் முயற்சியின் முன்னே.
என்னவள் நீயேதான்
இறைவன் ஒருநாள் உலகைக்காணத்
தனியே வந்திருந்தானாம்.
இதுவரை எதையும் மன்றாடியதில்லை அவனிடம்.
அதற்காக கொடுத்தவற்றையும் மறுத்ததில்லை.
எனக்கானது என்று நினைத்தவற்றை
அவன் பறித்தபோதும் வருந்தியதில்லை.
அளவுக்கதிகமாய் கொடுத்தபொழுது
ஆசையாய் அவனைத் திட்டியிருக்கிறேன்.
ஆனாலும் அவன் உன்னைக் காண்பித்தபோழுது
கண்ணீர் மழ்கி மகிழ்ந்தே கிடக்கிறேன்.
காரணம் உணர்ந்தேன் நான்,
எனக்குறியவள் நீயேதான் என உளம் நனைந்து.
நினைக்கத்தெரிந்த மனமே
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா?
மறக்கத் துணிந்த பின்னும் முகத்தை
மறைக்கத் தெரியாதா?
முயன்று முயன்று முனைந்தாலும்
வானம் மறைத்தல் முடியுமோ.
தேன் குடித்த வானமகள், மேகம்பிடித்து
நீரைக்கொட்டாமல் முடியுமோ.
விரும்பினாலும் இல்லையானாலும்,
கதிரவனைச் சுற்றியே நிலமகள் வாழ்வு.
களங்கமில்லா நிலாமகளும் விரும்பாவிடினும்
சுற்றிக்கிடக்குமே நீலமகளை.
நீ என்னை வெறுத்தொதுக்கினாலும்
உணர்ந்தேன், உன்னைச் சுற்றியே என் உலகம்.
மனைவி அமைவதெல்லாம்
மனைவி அமைவதெல்லாம் இறைவன்
கொடுத்த வரம்.
காதலை கைவிட்டு அமையும் வரம்,
வாழ்கையின் துயரம்.
கனிந்த காதலை மனைவியாகக் கொண்டால்
மட்டுமே அது சொர்க்கம்.
அன்புக் காதல் மரித்துப்போயின்
வந்த காதலெல்லாம் மனச் சாந்திதானோ!
காமம் கோவில்கொண்ட கைத்தடி,
சுற்றி வேலியிட்ட சுமைதானோ!
கொள்ளவும் முடியாமல், பெய்யவும் முடியாமல்
சிக்கி, விக்கித் திணறும் மழைமேகம்.
விரும்பி விட்டுக்கொண்ட எலி,
அது குடையத்தான் செய்யும் காலமெல்லாம்.
காற்றும் கவிதையுமே அந்த வலிக்கு
கணம் குறைக்கும் மருந்து.
கைவிட்டுச் செல்லமுடிவதில்லை,
பாழாய்ப்போன சமூகம்.
நடிப்பும், பொய்யும், நையாண்டிச் சிரிப்பும்
நன்றாய் வரும் நாடகமாகிப்போன உலகில்.
Wednesday, 9 November 2011
கவிதையாகிப்போன காதலி
உன் கவிதையழகின் கவர்ச்சியினால்,
என் கற்பனையில் உறைந்துகிடக்கும்,
உன் முகத்தினழகும், குரலழகும்,
மாறித்தான் போய்விட்டிருக்கின்றன.
தாமரையும் குயிலும்கூட அதனதன்
தன்மையினில் மழுங்கிவிட்டிருக்கின்றன.
மறுமுறையும் உன்னையும் குரலையும்
பதிவுசெய்யத் துடிக்கிறது மனசு.
உன்பால் கொண்டிருந்த அன்பால், உன்னுருவம்
ஒளிந்துகிடக்கின்றது மூளையின் ஓர் மூலையில்.
முடிவில் தூசுதட்டிச் சிந்திக்கையில்
முடிந்துவைத்த கவிதை முன்வந்து நின்றது.
ஆணின் நட்பு உச்சம்மாய் காற்றும்,
பெண்ணின் நட்புச்சமாய் மேகமும்
பாவிக்கிடக்கின்றன வான்வெளியில்,
சுதந்திரமாய் ஒட்டி உறவாடிக்கொண்டே.
கதிரவன் உதவிகொண்டு நீர் சேர்த்து
காற்று, மேகம் மேவிக் கார்மேகமாய் மாற்றம்.
கார்மேகமே, காதலின் உருவமாய்
கணமழையைக் கொட்டித் தீர்க்கும்,
கவிதையழகில் கண்ணசைக்கும் கண்மணியே.
கணமழையின் காதல்ரசம் காட்டி வரமாட்டாயோ?
கோபத்திலும் அழகு
உன் பருவத்தில் ஏனடி தவிப்பு?
உள் மனமென்னும் கோவிலின் விருப்பு.
மனதினில் என்னடி வெடிப்பு?
ஊடலின் முடிவினில் மறுப்பு.
ஆசையும் கோபமும் தவிப்பும்
ஏனடி கொண்டது வெறுப்பு?
சிரிப்பினில் ஆயிரம் இருப்பு,
மறைத்து விடின் முறைப்பாமோ?
கோபத்தில்கூட புன்னகை நெருப்பு,
பூத்துக் கிடக்குது உதட்டுக் கரையினில்.
தனிமையில் நிறையுது கணிப்பு,
தனமெல்லாம் சிவக்குது, பூரிப்பு.
புலவிக்கு என்னடி சிறப்பு,
புன்னகையில் புரட்டும் வனப்பு.
மறைவினில் நிற்கும் விழிப்பு,
விளைந்த மதிஎல்லாம் இன்பக் களைப்பு.
விட்டுவிலகடி உளம்கொண்ட ஊடல்,
உள்வாங்குது உள்ளமெல்லாம் சிலிர்ப்பு.
ஏன் உறுதியற்றவனா
பூக்கள் கனவுகாண்பதில்லை,
ஆனால் கனவுகளை நிஜப்படுத்துகின்றன.
பொழுதும் நின்று உறவாடுவதில்லை,
உருண்டுகொண்டாலும் உண்மையுரைக்கின்றன.
நிலையில்லாக் காற்றும் உறங்குவதில்லை,
உயிர் வாழ உதவுவதை செய்கின்றன.
களங்கமில்லா நிலவும் சுடுவதில்லை,
கண்களின் சோகத்தை பிரித்தெறிகின்றன.
கண்டுறங்கும் கழனி செழிப்பதில்லை,
சோம்பேறிகளை உருவாக்குகின்றன.
நட்சத்திரம் மினுமினுக்கத் தவறுவதில்லை,
நாள்தோறும் உலகை வழிநடத்துகின்றன.
ஒவ்வொருநிமிடமும் உனையே சுற்றிவரும்
என்னை மட்டும் அன்பே, புறக்கணிப்பதேன்?
உன் இன்ப மனதில் குடிகொள்ள நான்
உறுதியற்ற, தகுதியுள்ளவன் என்பதினாலா?
அது நீதான்
குரல் மாற்றிப் பாடுவதால்
நீ குயிலாகப் போவதில்லை.
பெயர் மாற்றிப் பட்டியலிட்டதால்
உன் முகம் மாறப்போவதில்லை.
முகவரி மறைத்து முன்னிற்பதால்
உன்மீதான காதல் குறையப்போவதில்லை.
கண்டுகொண்டேன் உன்னை
உன் உயிர் உரசினபின் நீதானென.
நிலாப்பெண்ணே
கண்ணின் ஓவியமோ கருவிழி,
கண்டெடுக்கப்பட்ட
வெண்ணிலவின் கருவண்டோ.
தென்றலின் சீதனமாய்
பட்டுச் சேலை பறந்து நின்று
கட்டுப்படுத்தினதால்
ஒட்டி உறவாடும்
அன்னநடை பின்னுவதோ.
வளர்ந்த கார்குழல்
ஏனோ பெண்ணே
காளையரின் காதலினை
அடக்குதற்கோ,
சடையின் நடனத்தில்
மத்தளம் தட்டிநிற்கும்
இடையோ
கவரும் கவனச் சிதறல்கள்.
அடங்காத ஆசை
இதழுடன் இதழாட
மலருடன் விளையாட
இளமயில் நடையாட உன்
இளமையில் இசைந்தாட
கனவுடன் கசந்து கிடக்கிறேன்.
நிலமகள் நிறைந்தாட
நிலவுடன் நீ பறந்தாட
நித்தமுன் நினைவாட
நிலையில்லா மனமாட
வீழ்ந்துகிடக்கிறேன் ஆசையில்.
இரவும் பகலும் கலையே
இருவர் நிலையும் சிலையே
கைப்பற்றின கைகளுக்கு
முத்தமே காணிக்கையாக..
Thursday, 3 November 2011
பஞ்சுமெத்தையான முள்படுக்கை
முழுமை எனநினைத்து, முழுசத வெற்றிதான்
என, தனைமறந்து நிலை மழுங்கிக் கிடந்த,
முதல் காதல், பொய்யானபின், மொத்தமாய்
மனை வாழ்கையும் வழுக்கிச் சரிந்தபின்,
நிலையில்லா மனம் அலையலையாய்
அலைந்தபின், குலைந்தபின்,
உலகம் அருளிய நிரந்தரமற்ற, விலையாடிய,
இன்பங்களை எல்லாம் அனுபவித்துத் தீர்த்தபின்,
முகவரியினை மாற்றின ஒரே தெய்வம்
அசைவற்று அறிவிப்பின்றி அமைதியானபின்,
விதவிதமான காற்றினை சுவாசித்துவந்த
என் மிதந்த பழைய வாழ்க்கையில்
புகுந்து நின்றாள், ஒளிர்ந்து நிற்கிறாள்
என்னுயிர் தாய்.என்னுலகத்தை மாற்றி.
பெற்றதாய் மடிசாய்ந்ததில்லை நான்,
ஆனால் உயிர் கலந்திருக்கிறேன்.
உலகுண்மைகளைஎல்லாம் உணர்த்தி,
என்பாதி உன்னையும் எனக்கு பெற்றுத்தந்தாள்.
இறையை கலந்திடும் வழியும்
உணர்த்திநின்றாள் உன்வழியாகவே.
காட்டின வழியில் கரை சேர்ந்துவிட்டேன்.
கலவரமில்லை, காடு வா வா என்கின்றது
Subscribe to:
Posts (Atom)