Wednesday, 16 November 2011

மனைவி அமைவதெல்லாம்

மனைவி அமைவதெல்லாம் இறைவன்
கொடுத்த வரம்.

காதலை கைவிட்டு அமையும் வரம்,
வாழ்கையின் துயரம்.

கனிந்த காதலை மனைவியாகக் கொண்டால்
மட்டுமே அது சொர்க்கம்.

அன்புக் காதல் மரித்துப்போயின்
வந்த காதலெல்லாம் மனச் சாந்திதானோ!

காமம் கோவில்கொண்ட கைத்தடி,
சுற்றி வேலியிட்ட சுமைதானோ!

கொள்ளவும் முடியாமல், பெய்யவும் முடியாமல்
சிக்கி, விக்கித் திணறும் மழைமேகம்.
 

விரும்பி விட்டுக்கொண்ட  எலி,
அது குடையத்தான் செய்யும் காலமெல்லாம்.

காற்றும் கவிதையுமே அந்த வலிக்கு
கணம் குறைக்கும் மருந்து.

கைவிட்டுச் செல்லமுடிவதில்லை,
பாழாய்ப்போன சமூகம்.

நடிப்பும், பொய்யும், நையாண்டிச் சிரிப்பும்
நன்றாய் வரும் நாடகமாகிப்போன உலகில்.

No comments:

Post a Comment