Wednesday, 16 November 2011

மதுவும் காதலியும்

ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்?

மது உண்டவன் அளவு மிகுந்ததும்
மலைந்து கலைந்து நினைவிழப்பதும்,

காதல் மதுவில் அமிழ்ந்து கிடப்பவன்
உடல் நிரம்பி அமுதினில் மிதப்பதுவும்,

நினைவிழந்து, உன்னருகில் மிதந்து கிடந்த
அந்த இனிமையான நாட்கள்,

நினைவலைகளை நிலைநிறுத்தி, நிற்கின்றன,
வண்ணமும் மணமும் பரப்பிக்கொண்டே.

கன்னமும் கிண்ணமும், அடங்காத
கண்ணமிடும் எண்ணமும் விதைத்துக்கொண்டே.

மதுவும் மங்கையும் ஒன்றே
மயக்கவைக்கும் முயற்சியின் முன்னே.

No comments:

Post a Comment