உன் பருவத்தில் ஏனடி தவிப்பு?
உள் மனமென்னும் கோவிலின் விருப்பு.
மனதினில் என்னடி வெடிப்பு?
ஊடலின் முடிவினில் மறுப்பு.
ஆசையும் கோபமும் தவிப்பும்
ஏனடி கொண்டது வெறுப்பு?
சிரிப்பினில் ஆயிரம் இருப்பு,
மறைத்து விடின் முறைப்பாமோ?
கோபத்தில்கூட புன்னகை நெருப்பு,
பூத்துக் கிடக்குது உதட்டுக் கரையினில்.
தனிமையில் நிறையுது கணிப்பு,
தனமெல்லாம் சிவக்குது, பூரிப்பு.
புலவிக்கு என்னடி சிறப்பு,
புன்னகையில் புரட்டும் வனப்பு.
மறைவினில் நிற்கும் விழிப்பு,
விளைந்த மதிஎல்லாம் இன்பக் களைப்பு.
விட்டுவிலகடி உளம்கொண்ட ஊடல்,
உள்வாங்குது உள்ளமெல்லாம் சிலிர்ப்பு.
No comments:
Post a Comment