பூக்கள் கனவுகாண்பதில்லை,
ஆனால் கனவுகளை நிஜப்படுத்துகின்றன.
பொழுதும் நின்று உறவாடுவதில்லை,
உருண்டுகொண்டாலும் உண்மையுரைக்கின்றன.
நிலையில்லாக் காற்றும் உறங்குவதில்லை,
உயிர் வாழ உதவுவதை செய்கின்றன.
களங்கமில்லா நிலவும் சுடுவதில்லை,
கண்களின் சோகத்தை பிரித்தெறிகின்றன.
கண்டுறங்கும் கழனி செழிப்பதில்லை,
சோம்பேறிகளை உருவாக்குகின்றன.
நட்சத்திரம் மினுமினுக்கத் தவறுவதில்லை,
நாள்தோறும் உலகை வழிநடத்துகின்றன.
ஒவ்வொருநிமிடமும் உனையே சுற்றிவரும்
என்னை மட்டும் அன்பே, புறக்கணிப்பதேன்?
உன் இன்ப மனதில் குடிகொள்ள நான்
உறுதியற்ற, தகுதியுள்ளவன் என்பதினாலா?
No comments:
Post a Comment