Monday, 29 August 2011

ஆடிக்காற்று

விழித்து நோக்குங்கால் கண்களில்
நீர் நிறைத்து வழிந்தோடுகிறது.

ஆடை கட்டிய நிலவை உறித்து
மேடை போட்டு ஆட்டுகின்றாய்.

ஒவ்வொரு அசைவுகளின் ஆழத்தினுள்ளும்
அசைந்தாடி படர்ந்தோடி,

அத்தனை அங்கப் பிரதேசங்களையும்
அளந்து அனுபவித்தே கரையேருகின்றாய்.

கெஞ்சிக் கேட்கிறேன் உன்னிடம்
கண்டவற்றை கடைபோட்டுக்கத்திடாதே.

பசுமையான மரத்தின் இலைமுடிகளையும்
கூந்தலைப்போல் அலைகழிக்கின்றாய்.

கற்ற பறவைகளின் இசைச் சத்தங்களைஎல்லாம்
சற்றே விசிலாயயடித்து சலசலக்கிறாய்.

ஒளித்துவைத்திருந்த, அவன் தந்த
ஒரே காதல் கடிதத்தையும் அடித்துசென்றாய்.

அதைமட்டும் எப்படியாயினும் திருப்பித் தந்துவிடு.
உன் பசியாற்றுகிறேன் நான்.

No comments:

Post a Comment