Wednesday, 31 August 2011

ஆறாம் அறிவு

பலனேதும் எதிர்பாராமல்
ஓயாமல் ஒவொரு நொடியும்
ஓடி சுற்றி உழைக்கும்
கடிகார சின்ன முள்.

திறந்து மூடக்கூட அவகாசமின்றி
மறத்துப்போன உடல், மனம்கொண்டு
இரவுபகல் உணரமுடியாத
விலைமகள்.

தென்றலில் மணம் கரைத்த
ஒவ்வொரு பூவிலும்
சுற்றுச்சுற்றி தாவிஎடுத்து
தேன் சேகரிக்கும் தேனி.

வேட்டப்படுவோம்
என்று உணரமுடியாமல்
இறையிடும் தலைவனை
வணங்கி நிற்கும் ஆடு.

ரத்தத்தைஎல்லாம் பாலாக்கி
தன் முழு வாழ்க்கையும்
அற்பணித்து அசைபோட்டு
நிற்கும் ஆ.

நீரையெல்லாம் உறிஞ்சிஎடுத்து
சுவைமிகுந்த கனியாக்கும்
வித்தை கொண்ட
மரம், செடி, கொடிகள்.

இவை எல்லாமும் அடுத்தவனின்
பயன்பாட்டினிர்க்காகவே.
அடாவடியான
மனிதமிருகத்திற்க்காகவே.

வேர்வை, குருதி உருஞ்சியபின்னும்
விட்டுவைக்க மனமில்லை
ஓட்டுப் போட்ட மக்களையே
வெட்டிப் போடும் அரசியலுக்கு.

செய்வதறியவில்லை
செய்ய வழியுமில்லை
அராஜக அரசியலின்
அச்ச உச்சமாய் ஓட்டுக்களும்
விலையாகிப்போனபின்.

No comments:

Post a Comment