Tuesday, 30 August 2011

மணமகள்

எச்சரிக்கை முள்ளில் அமைந்தாலும் முகம்,
மலர்ந்த ரோஜாவின் திகட்டும் அழகு.

வண்டு மயங்கி நின்ற வண்ண நிலவு,
வரைந்து கொடுத்த முகம்.

அம்மனின் சப்பரத் தலையினில்
கட்டிவைத்த பூச்சரம், உன் கார்குழல் பூ
ஆடும் ஊஞ்சலாட்டம்,

உன் கூந்தலேறிய பூக்களின் நடனம்.
கண் மறைவின் கனிக்கூட்டம்
ஒவ்வொன்றும் ஒரு தெருக்கூத்து.

தேனூறும் சோலையது,
ஆலிலை அமைப்பு பெற்ற ஆயிழை.

அருகினில் அமைந்த நடுக்கம்,
தேன் பரவின விரல் சப்பின கணப்பு.

பின்னிய நடை, கன்னியின் இடை,
நெஞ்சம் தஞ்சம், மஞ்ச இன்பம்.

இதழ் போர்க்களத்தின் கடந்து,
மடிந்து விழுந்த மயக்கம்,
உன் மொத்த தரிசனம்.

மழை உசுப்பிய விதையின் உயிராய்,
என்னுள் விளைந்த உன் நினைவு.

மணமகனின் விலையாகிப்போன
விளையாட்டு, முடிவு மணம்.

No comments:

Post a Comment