Tuesday, 30 August 2011

காற்று

கானகம் எங்கும் தடம்
பதித்து பிராணன் பெற்ற
காற்று.

சந்தனமரம் புகுந்து சுகந்தம்
தொட்டு மனம் மயங்கிய
காற்று.

கீச்சிடும் குருவிகளின்
இசையனைத்தும் பரப்பிய
காற்று.

உன்னுடல் தொட்டு,
சொர்க்க வரம் பெற்றுநின்ற
காற்று.

சுவாசம் பெற்ற நான்,
உயிரும் பெற உதவிய
காற்று.

தொட்ட உன்னுள்
கட்டிய என்னுள்
ஊற்று உசுப்பிய
உலக உச்சத்தை
எங்களுக்குள் விதைத்த
காற்று.

எவரையும் அடிமைப்படுத்த
விரும்பாத உன் அன்புக்கு
அடிமையாகிப்போன நாம்.

No comments:

Post a Comment