Monday, 29 August 2011

நிரந்தரக் காதல்

அடைத்துக் கிடக்கும் அளவுகடந்த பைகள்
அவிழ்ந்து விழத் துடிக்கின்றன.

கவிழ்ந்து கனிந்த மா வீழ்ந்து கடிபட்டுச்
சுவைக்கப்பட்ட பின்பே ஆனந்தம்.

விழுந்துவிட்ட பார்வை அம்புகள்
கண்ணுற்ற பின்பே கனியமுது.

சேதமுற்றுத் தடுமாறிய நிலையே
உன் வார்த்தை உருவங்களுக்கு உற்சாகம்.

ஒட்டி நின்று உறவாடிய பின்பே
கண்ணிபோன கொடியிடைக்குக் கொண்டாட்டம்.

அன்பே, உன் நிஜங்களில் மூழ்கிய பின்பே
என் நிரந்தரங்களுக்கு உண்மையான உயிர்ப்பு

No comments:

Post a Comment