Wednesday, 31 August 2011

மேகம்

திருடி உறிஞ்சிய நீரை
சுமக்க தடுமாறி கொட்டிய மழை.
சேகரித்த மதுவைஎல்லாம்
தேனாய் மாற்றுமாம் தேனி,
அதுபோல் நீரெல்லாம் தேன்.
கலவுக்குதவிய கதிரவனையே
மறைத்துநின்றாய். மறைந்துவிட்டாய்
கர்ப்பம் கலைந்து,
வானம் பற்றவைத்த,
மறையும் சூரியனை காட்டி.
எங்கு சென்று மறைந்தாய்
களவை மறைக்க.

விலைபோன அன்பு

அன்னை தெரசா.
அப்படி படைத்ததென்ன சாதனை,
இவ்வளவு புகழ்மாலை அணியப்பெற.
கிழித்துவிடவில்லை ஒன்றும்.
என்ன, கல்கத்தாவின் தெருஓர
அனாதைக்குழந்தைகளின் அழுக்கை அகற்றி,
பின்னர் கொடுத்தது என்னவோ
சிலுவையைத்தான்.
சிலுவையை பரப்பியமைக்கு,
பணம் கொடுத்த கிருத்துவம் வணங்கட்டும்.
வரி விதிக்கப்பட்ட அன்புகளுக்கு
நாம் ஒன்றும் சிலை வைக்கவேண்டாம்.
அரசு கவனிக்க மறந்து,
விலையாகிப்போனஅன்பு,
விதியன்றி அர்ப்பணிப்பாகா.
அன்பின் விலை மதம்,
மதம்கொண்ட தெரசா.

கர்மவீரர்

தமிழர் மீது தணியா
அன்பு.
கட்டிவைத்த அத்தனை
அணைகள்,
கழனி செழிக்க
நீர்நிலைகள்,
வளர்ந்தெழ வழியமைத்த
ஆலைகள்,
கற்றுத்தெளிய
கல்விச்சாலைகள்,
பசி மறந்து படிப்புணர்த்திய
உணவுத்திட்டங்கள்,
மொத்த நாட்டுக்கும்
மின்சாரம்,
எல்லா துறையிலும் வளர்ச்சிதான்
பொற்காலம்தான் உம் ஆட்சிக்காலம்.
கைவண்டிக்காரன் மகன்
கலெக்டர்.
நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.
நீங்கள் போட்ட ரோட்டில்
கோடுபோடக்கூட
திறனன்றி திணறி ஓடுகின்றோம்
உதவ நாதியின்றி.
உரம் இட்டுச்சென்றீர்,
எப்படி வளர்கிறோம் என்றுகூட
உணரமுடிய விதைகளுககு.
உடுண்டோடிவிட்டன
காலவருடம் 45
மழைநீர், தென்றல்காற்று, தந்த இறைவன்
கொடுத்தது உங்களை, தானமாய்.
மணம் பதைத்துத்
திகைத்து நிற்கின்றோம்,
நன்மை செய்வது என்பதைக்கூட
மறக்கடித்த இந்த நிகழரசியல்
கலை கண்டு.
தமிழனுக்கு எப்படியும் வெற்றி உண்டு
உங்களால்.

நடையழகு

மெல்லிய மலர்ந்திருந்த ரோஜா,
அவள் முகம்,
வண்டுகள் அவளின் கண்கள்.
மது நனைந்த இதழ்கள்,
அவள்தன் கள் வழியும் உறவுகள்.
அவளின்
இறுக்கமான ஆடையின் அசைவுகள்
அவனின்
கவனக்கலைப்பானது.
கவலைப்பட்டான்.
நடையழகால் இடையழகா இல்லை,
இடை இடையே உடையும்
இடை சழிவால் நடையழகா.
முடிவு கிடைக்காதது.
மலைப்பானான்.
மொத்த உடையின் தடையினால்
வெருப்பானான்.

கனிந்தது

அசைந்து அசைந்து ஆடிவந்த தென்றல்,
உரசிய உன் ஸ்பரிசத்தினால்
துளிர்த்த ரகசிய சந்தோஷத்தில்,
தவித்து தனித்து நிலை மயங்கி
நின்ற என்னை
ஏளனமாய்ச் சிரித்துச் சென்றது.
விட்டு விலகிய சூரிய ஒளி
பூமி மறைத்த பாவத்தினால்,
மேகத்தினை இடித்து உடைத்த
வான் விரிசலில்
ஒழுகி வழிந்த மழை,
உன் வளைவுகளில் வாழ்ந்து முடித்து,
நினைவு தவறி என் கால்களையும்
முத்தமிட்டுச் சென்றது.
கட்டிவைத்த வார்த்தைகளை
கொட்டிவிட முடியாமல் தவித்துவிட்டதை
அவிழ்த்து விட்ட காரணத்தால்,
அவைகளும் வாழட்டும் என்னோடு.

வாழ வழியில்லை

வாழ வகையின்றி
வழிந்த வேர்வையுடன்
கசையடி தன்னையே
அடித்துக்கொண்டு
காசு கேட்கும் மனிதம்.
வாழவைப்பேன் என உறுதிமொழி
எடுத்த அமைச்சர்கள்,
பார்த்துப் பரவசத்தில்
மாட்டினைப்போல்.
2020 ல் வல்லரசாவோமாம்,
கோட்டி பிடித்துவிட்டது நம் கலாமுக்கு!

மலர்ந்த காதல்

வீழ்ந்த துளி
இணைய அனுமதியில்லை
மீண்டும் மேகத்துடன்.
சிந்திய வார்த்தைகள்
அள்ளமுடிவதில்லை
கொட்டியபின்.
குடித்த கள்
நினைவு பெறுவதில்லை
முடித்தபின்.
கண்ணே,
காதலில் மட்டும்
எதற்கும் முடிவில்லை
விடிவு உண்டு.
கண்டுகொள்.
கடந்த தவறுகளை எல்லாம்
கழுவிஎடுத்து கடைந்து
குழம்பிக்கொண்டிருக்காமல்,
முடிந்தது முடிந்ததாய் முடிந்தபின்,
எல்லாம் மறந்துவிட்டு,
செத்தவனுக்கு ஜாதகம் காணவிழையாமல்,
மத்தவனையும் மனத்தால் எண்ணாமல்
முழுவதுமாய் கலந்துவிடு
காதலுக்கு மரியாதையாய்

இன்று தமிழ்

ஒவ்வொருநாளும்
காலை மணி ஏழுக்கு
கலைஞருடன்
பேசுவது வழக்கமாம்.
கொசுவை ஒழிக்க வழியில்லை.
goodnight விளம்பர வருவாய்
டிவியில்.
நீர் தர ஆழ்ந்த எண்ணமுமில்லை
நகராட்சி
வரி வசூலிப்பு.
ரௌடிகளின் அரசாட்சி அட்டூழியம்
போலீஸ் கேட்க
நாதியேயில்லை.
மின்சாரம், கேட்கவே வேண்டாம்
நினைத்த பொழுதினில்
அணைப்பு.
பட்டிதொட்டியெல்லாம்
மக்கள் தன்தன் வழி வாழ்க்கை,
அரசை சார்ந்து இல்லாமல்.
நோட்டுக்கு வோட்டு போடும்
ஜனநாயகம்.
அதுகூட ஞாயமாய்
நினைக்கும் மக்கள்!
நன்மை செய்வது என்பதையே
மறக்கடித்த
உம் தலைவர்,
வாரிசுகள் அனைவருக்கும்
நாட்டை பட்டா போடும் உம் தலைவர்.
கசக்கி கவிதைஎழுதும் உமக்கு
இவை கேட்க மனமில்லையா
வைரமுத்துவே!
இந்த நட்பு என்ன
புகழுக்கு மட்டும்தானா.
தமிழுக்கு இல்லையா!
உருப்படியாய் ஏதாவது செய்ய முயலும்.

பூர்வீகவீடு

ரோஜா பாதங்கள் பதித்து
அன்ன நடையுடன்
வலம் வந்த வீடு.
ஓங்கி வளர்ந்த
ஆலமரத்தின் அசைவுகளில்
தலையை ஆட்டிப்பார்க்கும்
ஆந்தையின் அழகை
அருகினிலேயே பெற்ற வீடு.
பின்னாளில் கொசு உற்பத்திக்கேந்திரமாய்
உருப்பெற்ற குளுமையான ஆற்றின்
கரையினில் அமைந்த வீடு.
வைகாசியில் மாரியம்மாளின்
திருவிழாவினை கண்டு களிக்க
தலைமையேற்ற வீடு.
குடையுடனேயே, முழுமையான
கம்பீர வாழ்க்கை வாழ்ந்த தாத்தா,
24 மணிகளில் 23 மணிகள் போதாமல்
தேனியின் வாழ்க்கை பெற்ற பாட்டி.
குடிப்பதேன்னவோ
ஆவின் மடுவினிலேயே பால்,
இடும் முட்டை, தரைபடும் முன்
கொட்டப்பட்ட தோசையில்
அரைவேக்காடாய்,
மற்ற நேரமெல்லாம்
கொடிக்காப்புளி வேட்டை, அந்தியில்
மொத்த குடும்பமும் தாயக்கட்டம்,
ஓர விழிகளில்
அத்தைமகளின் முதற்காதல்,
இப்படியே
வருட விடுமுறை நாட்கள்
அத்தனையும் கழிந்த வீடு.
சட்டையுரித்த பாம்பு, அழகின் உச்சம்.
ஆனால்
காரைஉதிர்ந்து செங்கல்கள்
வெளித்தெரிய சட்டை கிழிந்து
எழும்பும் தோலுமாய்
நின்றிருக்கும் வீடு, அழகின் எச்சமாய்.
வாரிசுகள் மொத்தம் பதினெட்டுப்பேர்,
உறவுகள் ஓட்ட வகையில்லை.
குட்டிசுவராகிப்போன வெட்டி வரலாறு.
இன்னமும் சிரித்துக்கொண்டே
நிமிர்ந்து வரவேற்றுநிற்கும்
எங்கள் கிராமத்து வீடு.

கடைத்தெரு ஜாடை

உன் கண் தழுவிய
என் கண்.
காணவில்லை என்ற
உன் எண்ணம்,
கண நேரத்தில்
தவிடுபொடி.

கண்ட என் மனம்
கனவின் மிதப்பில்.

விதைத்த காதல்
சுமந்த காதலி,
விதைப்பு உடை, நகைகளில்.
அழகுதான் எல்லாமும்.

கண்களால் அமைந்த
உரைகள்,
நாணம் தடவிய
பசையினால்,
ஒட்டித்தடுமாறின
வார்த்தைகளில்,
அருகினில் வரும்பொழுது.

மன இடைவெளியில்
முத்தாய்ப்பாய், ஆட்சிகொண்ட
நாகரீக நண்பன் மௌனம்.

நீர் விழுதுகள் கொண்ட
மேகமோ,
உன் காதல் விழுதுகள்
கொண்ட கண்கள்?

என் ஈரல் சுவர்
பூசப்பட்ட நேசம்,
உன் மூச்சிகாற்றின்
ஈர சுவாசம்.

ஒற்றை நொடியினில்
ஓராயிரம் மின்னல்கள்
உன் விழியோர உரசலினால்.

மற்ற எதுவும் நினைவில்லை,
உற்ற நண்பன்கூட மறைந்தநிலை.

சென்ற வாழ்க்கை தேவையில்லை
நின்ற பொழுது போதும் எனக்கு,

உன்றன் விழி எனை
தீண்டி நின்ற
நிழல் நீடிக்கும் வரைக்கும்.

ஆறாம் அறிவு

பலனேதும் எதிர்பாராமல்
ஓயாமல் ஒவொரு நொடியும்
ஓடி சுற்றி உழைக்கும்
கடிகார சின்ன முள்.

திறந்து மூடக்கூட அவகாசமின்றி
மறத்துப்போன உடல், மனம்கொண்டு
இரவுபகல் உணரமுடியாத
விலைமகள்.

தென்றலில் மணம் கரைத்த
ஒவ்வொரு பூவிலும்
சுற்றுச்சுற்றி தாவிஎடுத்து
தேன் சேகரிக்கும் தேனி.

வேட்டப்படுவோம்
என்று உணரமுடியாமல்
இறையிடும் தலைவனை
வணங்கி நிற்கும் ஆடு.

ரத்தத்தைஎல்லாம் பாலாக்கி
தன் முழு வாழ்க்கையும்
அற்பணித்து அசைபோட்டு
நிற்கும் ஆ.

நீரையெல்லாம் உறிஞ்சிஎடுத்து
சுவைமிகுந்த கனியாக்கும்
வித்தை கொண்ட
மரம், செடி, கொடிகள்.

இவை எல்லாமும் அடுத்தவனின்
பயன்பாட்டினிர்க்காகவே.
அடாவடியான
மனிதமிருகத்திற்க்காகவே.

வேர்வை, குருதி உருஞ்சியபின்னும்
விட்டுவைக்க மனமில்லை
ஓட்டுப் போட்ட மக்களையே
வெட்டிப் போடும் அரசியலுக்கு.

செய்வதறியவில்லை
செய்ய வழியுமில்லை
அராஜக அரசியலின்
அச்ச உச்சமாய் ஓட்டுக்களும்
விலையாகிப்போனபின்.

உயிர் விளையாட்டு

இருப்புநிலை கொண்ட
உடலும் ஆன்மாவும்,
கட்டி இருக்க உதவிய
என் மனம்,

உன் உயிர் ஒட்டிய
ஒட்டுத்தன்மையால்
நிரம்பி நிற்கிறது
கசிய முடியாக் காதலில்.

கட்டு தளர்ந்த உடல்.
சதை பிரிந்து
ஊற்றிய காதலில்
கரைந்து கலந்து ஆன்மா.

அளவில்லா இன்பத்துடிப்பினில் 
உயிர் விளையாட்டு
உலக விளிம்பில்.

கனவு

சுவடு புரியா உன் வரவு,
திகைத்து நிற்கும் நான்.

சொல்லிக்கொடு உன்
கத்திப்புத்தி வித்தைகளை
எனக்கும், ஆசிரியையாய்.

கலைந்து கிடக்கும்
இந்தச்சூரியனை
மறையவிடாது தடுத்து
நீ காணும்
இன்பம்தான் என்ன.

எப்பொழுதும் உன்
வானிலேயே நான்
மிதக்கவேண்டும்
என்பதாலா?

ஊடல்

பார்ப்பது எதுவும் அருமையில்லை,
பாடல் கேட்பதிலும் விருப்பமில்லை,

பேசுவதெல்லாம் கோபமாய் முடிவில்,
நின்றாலும் அமர்ந்தாலும் குற்றமாய்,
எட்டில் சந்திரனா புரியவில்லை,

எட்டாக்கனியினை எண்ணிய கனவா,
குழப்பின மனதை குழைய யோசித்தேன்.

கடைசியில் உணர்ந்தேன்
உன் காந்தக் கண்கள்
வீசிய ஒளி அலைகளின்
கோப கனைகளை.

வந்து நின்ற உன்னை
கண்டு நின்ற நான்.

உன் ஒரு அணைப்பு
ஏற்படுத்திய ஆர்ப்பாட்டத்தினால்
அணைந்து அடங்கி
அமைதியாய் நின்ற,
என்னுள் எரிந்த எரிமலை.

பின் கிடைத்த அமைதியின் ஆழம்
ஒருவருக்கும் புரிய வாய்ப்பில்லை.

காதலில் கோபத்திற்கு தோல்வி

அடங்கா அன்பு

இனி பருக்க முடியாது
என முடிவுகட்டிய
வேரிலே பழுத்து விழுந்த
பலாவினைப்போல,
கடந்த ஜென்ம காதல் கனிந்து,
கரைகடந்த சுவையுடன்
உறைந்து மறைந்ததினால்,
இந்த ஜென்ம சந்திப்பு
வரம் பெற்று, எனை
உன் கத்திப்பார்வை வீசி,
கக்கக்கக்க அமுதூட்டிக்
கொன்றுகொண்டிருக்கிறாயே?

இன்னும் எத்தனை ஜென்மங்கள்
தேவை உனக்கு,
என்னை உன் அடங்கமுடியாக்
காதலிலிருந்து விடுவிப்பதற்கு.

எனக்கு ஒன்றும் எண்ணமில்லை.
ஆனாலும் நம் கலப்பின் முடிவு
இறைநோக்கி மட்டுமே.

காத்திரு

மலர்களுக்கு ரேகையில்லை.
இருந்திருந்தால்
உன் கூந்தல் உதிர்த்த
மலர் கண்டு உன் இருப்பறிய
உதவியிருக்கும்.

உன்னுள் காதலினால்
ஊற்றப்பட்ட உயிர்
நிரம்பியும், வழிய வழியில்லை.
கொள்ளும் அளவு
கூடிக்கொண்டே இருப்பதினால்.

உன் சந்திப்புக்கு
இத்தனை கால இடைவெளி
கிடைத்த காரணத்தினால்,
உன்மீதுள்ள காதலின் கணமும்
கூடிவிட்டிருக்கின்றது.

தாங்கமுடியாப் பட்சத்தில்
தகிக்கும் கலவித்தீயினுள்
தாவிக்கலப்பதே கலை.

Tuesday, 30 August 2011

தடம்

மேக உதிர்ப்பின் கடைசி லட்சியம்
நிலம் தொட்ட இந்த தேன்துளி,
உதித்த மழலையின் சுத்தச்சிரிப்பு.

துளி துவண்டு இணைந்து துணிந்து
துணைகொண்டு தவழ்ந்த காட்டாறு,
துணிவு திணிந்த மாணவக்கூட்டு.

துள்ளிக்குதித்து, துருவித்துளைத்து
தழுவி, தலைகீழாய் கர்க்களைஉருட்டி
கண்ட இடம் சேர்ந்து, கானக அமைதிக்கு
கரவொலி சமைத்து கடந்தது காடு.

ஆடிய ஆட்டம் அடங்கி, சேறு பூசி,
சிறுகச்சிறுக மனிதக்கைபட்டு கசங்கி
கடைசியில் கடல் சேரும் சமயம்
கிடைத்த பெயர் சாக்கடை.

அராஜகம், அடிமைத்தனம், அன்பிலாமை,
ஆணவம், அற்பத்தனம், அச்சமின்மை,
அடங்காக்காமம் அத்தனையும்
அடங்கிய மனிதனுக்கு மறுஜென்மம்.

ரசிகன்

கடைவீதியில் கடந்து கண்ட
ஒரு மாலைப்பொழுது.

ஆர்ப்பாட்டமில்லா அழகு,
அவள்.

அழகு,
மலர்ந்த தாமரை முகம்.

சிந்தையனைத்தும் சிதறடிக்கும்
சிரிப்பு.

சிலை கண்டு,
சினம்கூட சிதைந்து நிலை மறக்கும்
சிக்கண இடை.

ஒடியும் இடை நடிப்பு,
நடை.

சிலிர்க்கும் ஓய்யாரக்கொண்டை,
காற்றுக்கு அதிரும் தென்னங்குலை.

அலுங்கிக்குழுங்கும் எலும்பிலா,
பஞ்சமில்லா ஊஞ்சல் திசு,
தசை.

சூழ் அமையப்பெற்ற
அடிவயிறு.

சித்து வித்தைகாட்டி
சினைப்படுத்திய
சிற்றரசன் சின்ன நடையில்
ஒய்யாரமாய் அருகினில்.

அட,
கடவுள் ஒரு ரசிகன்தான்.

பருவம்

விழுந்த துளி
அனைத்தும் நிலைநிற்க
வகையின்றி இருப்பு விரவி
நிலைகொண்ட குளம்.

கிராமத்து அழகு.

நீரை கிழித்து கூறு போட
முயன்று தோற்று, துள்ளிக்குதித்து
பிராணனை உறிஞ்சும் மீன்கள்.

ஆனந்த தாண்டவம்.

பூவையர்தம் பூக்களை களைந்து
பூநனைப்பைக்கண்டு வெட்கிக்
குனிந்து நின்ற மரங்கள்.

இன்ப தலையசைப்பு.

மீன்கொத்தி, நீருள் பாயும்
அழகின் இணையாய்
சிறார்களின் நீர் பாய்ச்சல்.

இளமைத் துள்ளல்.

உயிர் மீட்டுத்தந்த
மேகத்திற்கு நன்றி
பரப்பி தலையாட்டும்
நாணல்கள்.

சந்தோஷ தாலாட்டு.

சேர்த்து வைத்த உணவை
எல்லாம் வெளிக்கொணர்ந்து
திகைப்பில் ஆழ்த்தி
மலர்ந்த அல்லி.

அன்புச் சிரிப்பு.
இன்ப உலகம்தான்.

அல்லி கண்ட ஆதவன்
அடங்காக்கோபத்தில்
அள்ளிப்பருகி முடித்தான்
அலையாடிய குளநீரை.

இறைவனின் சேட்டை.

இனியென்ன அடுத்த பருவம்
நம்பிய நிலையில்லா வாழ்க்கை

அமெரிக்கா

மொத்த உலகின்
பச்சை நிறத்தைஎல்லாம்
தேகம் எல்லாம் பூசிநிற்கும் தேசம்.

எல்லா வகையிலும் கிடைக்கும்
கடன்களையெல்லாம்
அள்ளி அனுபவிக்கும் நாடு.

மஞ்சள் கடுதாசி கொடுக்க
மலைக்காத ஆலைகளை
பெற்ற தேசம்.

வாங்கிய வலை குறைவு
ஆனால் விற்கும் விலையோ
அநியாயம் என்ற வியாபார
நோக்குகொண்ட நாடு.

ராணுவ தளவாடங்களை
அதிகம் கொண்டதால்
அகிலவுலகையும் ஆட்சி
கொள்ளும் நாடு.

ஆண்ட சராசரங்களை ஆராய்ந்து
அறிவதினால் அறிவியலில்
முதன்மையான நாடு.

ஆனாலும் என்ன செய்ய,
கடன் மட்டுமே பெற்று
வரவில்லாமல் செலவு செய்து
சேமிப்பு அறியா காரணத்தினால்
பொருளாதாரத்தில்
தோற்றுக்கொண்டிருக்கும் நாடு.

பெற்ற பேறு அனைத்தும் இழப்புத்தான்.

காற்று

கானகம் எங்கும் தடம்
பதித்து பிராணன் பெற்ற
காற்று.

சந்தனமரம் புகுந்து சுகந்தம்
தொட்டு மனம் மயங்கிய
காற்று.

கீச்சிடும் குருவிகளின்
இசையனைத்தும் பரப்பிய
காற்று.

உன்னுடல் தொட்டு,
சொர்க்க வரம் பெற்றுநின்ற
காற்று.

சுவாசம் பெற்ற நான்,
உயிரும் பெற உதவிய
காற்று.

தொட்ட உன்னுள்
கட்டிய என்னுள்
ஊற்று உசுப்பிய
உலக உச்சத்தை
எங்களுக்குள் விதைத்த
காற்று.

எவரையும் அடிமைப்படுத்த
விரும்பாத உன் அன்புக்கு
அடிமையாகிப்போன நாம்.

நண்பி

உருவித்தொங்கிக் கிடந்த
உயிரை உதட்டு பசைகொண்டு
ஒட்டவைத்தவள்.

கரைகடந்த காமப்பசியினை
கல்லெறிந்து கடும்பள்ளத்துள்
கடாசியவள்.

சோகத்தில் சுரம் பாடிய
சுந்தரனுக்கு சுக ராகம் சுரக்க
உதவினவள்.

தேக சௌகரியம் தேடி
நின்றவனுக்கு தேனமுதை
திசைதிருப்பியவள்.

இன்பக்காற்றாய் இனிமை
தந்தவள்,
கண்ணிமைப்பொழுதில் காணாமல்
சென்றவள்.

அன்பு செய்

கழுத்து கட்டிவைக்க, கவனித்து
நின்றது ஒரு ஆடு.

கழுத்து அறுத்து மூச்சு முட்டி துடித்துக்
கிடக்கும் ஒரு ஆடு.

கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவாம்.

கவனித்து நின்ற ஆட்டின் கொட்டை
கவ்வி நிற்கும் கயவன் ஒருவன்.

எண்ணிப்பாரும்

மூச்சி முட்டி முழிக்கும் ஒரு உயிரை,
காட்சி கட்டி கலவரப்பட்டு கலையிழந்து,
கண்டு நிற்ற மற்றொரு உயிர்.

உயிருடனேயே உயிர் சமாதி.

கவனமாயிருங்கள் மானுடர்களே,
அன்பு செய்யத்தான் உயிர்
அவமானப்படுத்த அல்ல.

அரவணைக்கத்தான் மனிதன்
ஆட்சிசெய்ய அல்ல.

மரணம்

காற்றினில் அலைந்து
ஆடிப்பறக்கும் பட்டம்,
ஒத்திடும்.

உடல் விட்டு பறக்கத்துடிக்கும் உயிர்
மரணத்தருவாயில்.

நூல்க்கயிறு கட்டிய பட்டம்,

மனக்கயிறாக பூட்டிநிற்கும்
உயிர்.

ஆன்மாவுடன் கொண்ட
உரசல் வலியாக.

கலந்து நின்ற கர்மவினைகள்
காந்தத்திணிவு பெற்று
ஆவியாக அலைந்து.

மரணம் இதுவாகவே.
மறுஜென்மம்வரை.

தன்கொலை

கைகூடாத காதல்
கனி எட்டாததாய் இருந்திருக்கலாம்.
ஆனாலும், நானும் மனிதம்தானே.

வேலையும் கிடைக்கவில்லை.
வெட்டி எஞ்சினியர் என்றும் கேலி.
பெற்றோரும் மற்றோரும் மதிப்பதாயில்லை.

ஏளனசிரிப்பை ஏற்கவில்லை மனம்.
ஏறிட ஏணி கிடைக்கவில்லை.

கிடைத்ததெல்லாம்,

அரசுவின் ஒரு ரூபாய் அரிசி,
நாய்க்கு மட்டுமே பயன்படும் அது.
அதன்பதில், வேலை உறுதி செய்திருக்கலாம்.

நானும் பிழைத்திருந்திருப்பேன்.

சரி, தூக்குக்கயிறின் கடைசி இறுக்கம்.
தசைக்கூண்டினுள் உயிரின் தத்தளிப்பு.

அடுத்தமுறை வாழ நினைப்போம்.

சோகம்

மழை மிகவும் பிடிக்கும்.

நிலம் செழித்திட, உயிர் மலர்ந்திட,
உதவுகிறதினால் அல்ல.

தாகத்திற்க்கான தண்ணீரை சுமந்து
தரையினில் விதைப்பதினாலும் அல்ல.

அழகு சொட்ட இசை மெட்டுக்கட்டி
கும்மாளமிட்டு குடியமர்ந்ததற்ககாகவும் அல்ல.

சில்லிட்ட குளிர்ச்சியை கரைத்துக் கலந்து கிளர்ச்சி கொள்ள வைத்தமைக்காகவும் அல்ல.

ஆட்சியாளர்களின் அராஜகத்தாலும்,

அடிமைத்தன அரசியலாலும்,

வாழ வகையின்றி, வாழ்க்கையை

தொலைத்து நிற்கும் மனிதத்தின்,

கண்ணீரை

மற்றவர் அறியாவண்ணம்
கலந்து கரைத்து விட்டமைக்காக.

அருவியருகே கலவி

சேர்த்ததெல்லாம் மற்றதில்
உருவி,
வந்து நின்று வழிந்து விழுந்த
அருவி.

பார்த்துப் பருகி மறந்த நிலையில்
குருவி.
அருவி பட்டு மருகி, தோள் தொட்டு
வருவி,
காதலி மட்டும் வந்தால் எனக்குத்
தெருவி.

மனம் மயங்கி கிரங்கடித்தாய் துருவித்
துருவி.

குளிர்ச்சியின் பசிக்கு பாய் கொஞ்சம்
தருவி.

கிளர்ச்சி பெற்று கவர்ந்து மகிழ்ந்த
கருவி,
துளிர்ந்து கலவி களம் காண
மருவி,
துருவம் ரெண்டும் உச்சம் நிற்க
நிறுவி.

வெருவி, எருவி, கெருவி கண்
செருவி,
உயிர் திறுவி, பெற்று நின்ற
பிறவி.

இரவெல்லாம் கத்தி கெடுத்த
உரவி
போல பறைத்து நில் எங்கும்
பரவி.

ஆனந்தக்கண்ணீர்

உருவிநின்ற உயிர் ஒட்டியதால்
உயிர் பிழைத்தாள் மகள்.

பிழைக்க வைத்த வைத்தியர்
கடவுளின் பிறப்பு.

சட்டை செய்யாது அடுத்த
உயிருக்கு உதவுவதற்காய்.

காசு காணாத, கள்ளம் அறியாத
கண்கள் குளமாய் கைகூப்பி
நன்றியுணர்வுடன் தாய்.

தங்க முகத்தினிலிருந்து
விழுந்துத் தீர்ந்த வைரத்துளியாய்
கண்ணீர்.

காசுபணம் மறந்து கடமைமட்டுமே உணர்ந்த
மருத்துவரும் இறைவர்களே.

அமுதமழை

கொண்ட காதலின் திணிவு
அதிகமாகிவிட்டதினால்,
உன் காதல் மேகங்கள்
சுமக்கத் தடுமாறி
கொப்பளித்துப் பொழியும்
அமுத மழை
என்னை உன்னில்
மூழ்கடித்துவிட்டது.

காலங்களாய் முடிந்து வைத்து,
மூளையில் கலந்து நின்று ,
சுகம்பாடிய சோகவாழ்கையின்
முடிச்சுகளை
உன் முட்டிய ஒரு பார்வை
அவிழ்த்துவிட்டது.

அன்னநடை

மாலையின் மஞ்சள் வெயில்
மேனி தொட்டதனாலா
உன் முகம், மலர்ந்தது
சிவந்த ரோஜாவாக?

முட்களை கொண்ட உடை
களைந்து, உன் மலர் மலர்.
தேனிகளுக்கு அனுமதி மறுத்துவிடு.

கவனித்து உன் கனி கனி.
கிளிகள் களவும் கற்றவை.

வேரில் பழுத்த பலா
கீறிக் கிடந்த வணப்பு.

வாழை விரிந்த தண்டு நடை
வழியெல்லாம் வண்ணமாய்.

மொத்த வடிவம் மலர்க்கொத்து,
குலைகுலையாய் கவிழ்ந்த கனி.

நடந்து நின்றால் நாடகம்,
நிலை கொள்ள மனம் தவிப்பு.

மணமகள்

எச்சரிக்கை முள்ளில் அமைந்தாலும் முகம்,
மலர்ந்த ரோஜாவின் திகட்டும் அழகு.

வண்டு மயங்கி நின்ற வண்ண நிலவு,
வரைந்து கொடுத்த முகம்.

அம்மனின் சப்பரத் தலையினில்
கட்டிவைத்த பூச்சரம், உன் கார்குழல் பூ
ஆடும் ஊஞ்சலாட்டம்,

உன் கூந்தலேறிய பூக்களின் நடனம்.
கண் மறைவின் கனிக்கூட்டம்
ஒவ்வொன்றும் ஒரு தெருக்கூத்து.

தேனூறும் சோலையது,
ஆலிலை அமைப்பு பெற்ற ஆயிழை.

அருகினில் அமைந்த நடுக்கம்,
தேன் பரவின விரல் சப்பின கணப்பு.

பின்னிய நடை, கன்னியின் இடை,
நெஞ்சம் தஞ்சம், மஞ்ச இன்பம்.

இதழ் போர்க்களத்தின் கடந்து,
மடிந்து விழுந்த மயக்கம்,
உன் மொத்த தரிசனம்.

மழை உசுப்பிய விதையின் உயிராய்,
என்னுள் விளைந்த உன் நினைவு.

மணமகனின் விலையாகிப்போன
விளையாட்டு, முடிவு மணம்.

மரக்கிளை

கலெக்டர் மகன்
கலெக்டருக்கு படிக்க உதவ,
கைவண்டிக்காரன் மகனை
வேலைக்கு வைத்தனர்.
இரவுக்காப்பி போட,
காலை படிக்க எழுப்ப,
பாடங்களை புரியும்படி
உரக்க வாசிக்க,
உணவு தயாரிக்க,
உயிர்ப்புடன் எல்லாம் செய்தான்.
உதவிகள் தேவைக்கு வழங்கி
கடைசியில் கலெக்டராகிவிட்டான்,
கைவண்டிக்காரன் மகன்.

mullaa

ஓஷோவின் முல்லா கதை.
முல்லா நிறைந்த கவலைகளுடன், தற்கொலை செய்துகொள்ள ஒரு தூக்குக்கயிறு, ஒரு டின் நிறைய பெட்ரோல், ஒரு துப்பாக்கி மூன்றையும் எடுத்துக்கொன்று ஒரு ஆற்றங்கரை மரம் நோக்கி நடந்துகொண்டிருந்தார். முந்தைய முறை தற்கொலை தோல்வியில் முடிந்திருந்தது.
ஆற்றங்கரை மரத்தில் தூக்குக் கயிற்றைக்கட்டி, பெட்ரொலை மேலே ஊற்றி பத்தவைத்துக்கொண்டு, துப்பாக்கியால்
நெற்றியை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்வதாக தீர்மானம்.
இந்த முறை கட்டாய மரணம்தான்.

பெட்ரொலை ஊற்றி பத்தவைத்தாயிற்று.
கழுத்தில் சுருக்கை மாட்டியாயிற்று.
துப்பாக்கியை நெற்றியில் சுடும்போழுதுதான் பிரச்சினையாயிற்று.
குறி தவறி கயிற்றில் பட, ஆற்றில் விழுந்து தீயும் அணைந்துவிட்டது. அவன் ஆற்றில் நீந்தத்துவங்கினான்.
கடவுள் அவனிடம் நீந்தாமல் இறக்க வற்ப்புருத்தினார்.
முல்லா கூறினார்,
அது முடியாது இறைவா, எனக்குதான் ஏற்கனவே நீந்ததேரியுமே.

கைகள்

முடிக்கத் தெரிந்தவைகள் கரங்கள்,

பிரார்த்தனைகள் வெற்றுப் பேச்சின் சுரங்கள்,

எதற்கும் அடிமைகளில்லை கரங்கள்,

உலகை ஏமாற்றுபவைகள் பிரார்த்தனைகள்,

உதவிகளை செய்து முடிக்கும் கரங்கள்,
பிரார்த்தனை செய்யும் உதடுகளை
விடவும் சிறந்தவை.

மலர்கள்

வேர்கள் அவலட்சனமானவைதான்,
ஆயினும்
அவைகளால் மட்டுமே
ஒரு அழகான ரோஜாவினைத்
தரமுடிகிறது.

மலரும் அன்புக்கும்
ஆரம்பம் அராஜகமே..

Monday, 29 August 2011

ஓஷோ

உயிர்ச்சக்திகள், நாத, வித்துகளை
வெளியுந்தும் கலவி,
நிமிட இன்பம்.
உள் பரப்பும் வித்தை,
முழுநாள் இன்பம்.

உடல் தசைகளின் உள் அழுத்தமும்
இறுக்கமும் தந்திடுமே கலவி.

தசை முழுமைக்கும் தளர்வுக்கலையே
தியானமுமாமே.

கூந்தல்

சுற்றி அமைந்திருக்கும் பூங்காவைஎல்லாம்
மணம் பரப்பி இன்பம் தந்து நிற்கும்
மல்லிகையே,
உனக்கும் இன்பமான இந்த நறுமணம்
பற்றி புரியப்போவதில்லை.
மற்ற மணம் பறந்து நிற்பதுவும் குறித்து
உணரும் அவசியமும் உனக்கு இல்லை.
உன் வாழ்வின் அர்த்தம்தான் என்ன?
மற்ற உயிர்களை மயங்கிக்
கிறங்கடிப்பது மட்டும்தானா?

பிரிவு

எண்ணங்கள் மேகக்கூட்டங்கள்.
சிறியன பெரியனவாய் இடம் பெயர்ந்து
மறைந்துகொண்டே இருக்கும்.

இடையிடையே நீலவானம்.
நீலவானம் இறையின் தன்மை.

நீர் கொள்ளாத மேகத்தினால்
நன்மைகள் இல்லை.

வெற்று மேகங்கள் அழகிய
பஞ்சு மெத்தைகள்.
கண்டு ரசிக்க மட்டுமே விருந்து.

இயற்கையில் வெற்று மேகங்கள்
குளிர்வு கொண்டவை.

உயர உயர மிதந்து மேகக் குளுமை
கடந்து முழு நீலவானம்.

எண்ணச் சுழற்சியினின்று விடுதலை.
நீ சேர்ந்துவர மறுத்தமையால்
உன்னிலிருந்தும் நிரந்தரத் தீர்வு.

தெளிந்த உணர்வுகள், உணரவைத்தமைக்கு
உள்மன வாழ்த்துக்கள்

ஈசனின் மகள்

வெடித்துச் சிதறி விழுந்த
விதை, சிறு தளிராய் துளிர்த்தது.

கதிரவனின் கண்படாது மறைக்க
மேகம் பரப்பினான்.
கார்மேகத்தினின்று சில நீர்த்துளிகளைத்
தூவினான்.

வளர்ந்து சிரிப்புடன் மகிழ்ந்து
செழித்துநின்றது.
ஒரு நாள் மணம் பரப்பிநின்றது
மலர் மலர்ந்து.

அழகு மலராய், இனிய மணத்தை
வார்த்த ஈசனுக்கு நன்றி.

மறப்பதெப்படி

விட்டுவிட்டால் தேன் சொட்டிவிடும்
ரத்தச் சிவப்பு இதழ்கள்.

கன்னங்களின் வண்ணங்கள்
அஞ்சும், பஞ்சு மெத்தைகள்.

கலைந்த நிலை, முகம் மறைக்கும்
கரிய கார்மேகக் கூந்தல்.

விலகிய இடைவெளியில்
கலைந்த உயிரை உறிஞ்சி
இழுக்கும் கருவிழிகள்.

வளைந்து தெளிந்த அழகிய
மலை முகடுகள்.

இடை, உடைந்த கானகவெளியின்
காட்டாற்று அருவி.

அவைகள் செய்யப்பட்ட நிலம்
கடவுளின் கருணை மனம்.

சந்தன வயல்களில் நட்டுவைத்த
கதிர்கள் நின் உடல் கருமயிர்கள்.

மொத்தத்தில் நான் கண்ட ஓர்
உன்னத உயிரோவியம் நீ.

உன்னை மறப்பதெப்படி?

நினைவுகள்

முகிலினூடே கசிந்த நிலவொளிபோல்
முகம்மறைந்து, கலைந்த முடிகளினூடே
உன் காந்தக் கண்களின் கிரணங்களையே
கண்டேன் முதன்முதலாய்.

விடிகாலை ஒளிக்கதிர்கள்போல்
என் மனவானில் ஒளிர்ந்தன
அத்தனை சூரியன்களும்
என்பதினை உணர்த்தின நிமிடம்.

முந்திரி ஒன்றுதான் தன் விதைகளை
வெளித்தள்ளி முகம் காட்டிசிரிக்கும்.
அந்தக் காட்டினுள் உன் முகம் மலர்ந்த
மலர்ச்சியினை ரசித்து மகிழ்ந்தேன்.

பின் நடந்த அத்தனை வீழ்ச்சியிலும்
எழ முடியாமலேயே தவித்தேன்.
சிலந்தி தன் எச்சியினைக் கொண்டு
வலைப்பதைபோல் மறுபடியும் மறுபடியும்.

வருடங்கள் பல கடந்தாலும்
நடந்தவைகள் பசுமையாகவே
மனதை வருடிக்கொண்டிருக்கின்றன.
வாழ வழி வகுத்துக்கொண்டிருக்கின்றன.

காலமெல்லாம்

கண் இமைக்க மறந்துவிட்டேன்
என்றால்
சுவாசம் இழந்து, உணர்வு மரத்து,
உயிர் துறந்துவிட்டேன்
என்றே கொள்.

என் இறப்பு நடந்துவிடினும்
உன் இருப்பு குறித்து உளம்கனிந்து
அகம் மகிழவேசெய்வேன்.

கார்மேகத்தினுள் மழையல்ல நான்
மேகக்கூட்டங்கள் உறங்கும் மெத்தையாம்
நிறைவான நீலவான நிரந்தரம்.

நிலமாய் நீ எனில் நீலவானமாய் நான்
எனக்குள்ளேயே எப்போதும் நீ,
இன்பஊற்றை எனக்குள் சுரந்துகொண்டே
பரப்பிக்கொண்டே காலமெல்லாம்.

கொம்புத்தேன்

தோட்டத்து மலர்களின்
வண்ணத்து அழகினையும்
மணத்து சுகந்தத்தினையும்
வழிந்த தேனின் சுவையினையும்
நனைந்து குளித்தவன்தான்.

விட்டுவைத்த மலரினை பற்றியும்,
விலக்கி வீசிவிட்ட விரல்கள் பற்றியும்
வாடிநின்ற உன் சொல்வனம்
கொண்டே உணர்ந்துநின்றேன்.

தேடி நிற்கும் உன் விழிகள்
உணர்வதில்லை, மலைத்தேனின்
சுவைபற்றியும் அதன் அடை
அமைந்திருக்கும் விதம்பற்றியும்.

கானகத்தின் காணக்கிடைக்கா
அழகு மொத்தமும் அடங்கிச் சிரிக்கும்
அடையின், கொம்புத்தேன் சிதறி வழியும்
தன் இடை கிளைகளின் இதழ் வழியே.

இனிமையை மட்டுமே உறிஞ்சிப் பருகி
மயங்கிக்கிடக்கும் மலைத் தேனி
ஒருநாளும் உதடுகளால் உறைப்பதில்லை
சுவை தனக்குப் பிடிக்கவில்லை என்பதினை.

நீ வருவாயென

காட்டு மரங்களின் அடர்த்திபோல்
விதைத்திருந்தது கனவுகளை எனக்குள் .

காட்டுத்தீயின் கலைந்த வக்கிரம் போல்
சுழண்டிருந்தது கலவித்தீயின் கனல்கள்.

வாழ்வு முழுமையும் இனி தனக்குமட்டுமே
என்று மத்தளம் தட்டிநின்றது மனசு.

உச்சமாம் உலகத்தின் அத்தனையும் தன்
பின்னேதான் என்ற எக்காளம் உடலுக்கு.

புடைத்த அத்தனை நரம்புகளும் ஒரு
சல்லாப நாடகமே நடத்திமுடித்திருந்தன.

மஞ்சம் நினைத்த பஞ்சு நெஞ்சம், உன்
வஞ்சம் புரிந்துகொண்டு மாண்டு மிஞ்சும்.

சலிந்த தேகம் சரிந்து வீழ்ந்து, மலந்து,
மீளும் மருஜென்மமாய்.

நினைவலைகள்

அலைந்து ஆடிக்கிடக்கும் நீலக்கடலின்
ஆழ்ந்த,
வெள்ளி உருக்கி அடுக்கினாற்போல்
பாய்ந்து,
ஓயாமல் மோதி கரைதாண்டத்
துடித்து மடியும்
அலைகள்தனை,

உறுதிப்படுத்தி ஒத்துநிற்கும்,
எந்தன் மனம் நிறைக்கும்,
உந்தன் நினைவலைகள்.
மறுத்து நின்றும்
வெறுத்து சென்றும்
உள்மனம் தாண்டி
புறம்செல்ல வழியேயில்லை.

சுற்றிச் சுற்றி வந்து
மலர்ந்து, மணந்து களிக்கும்
ஆழ்மனம் தன்னிலேயே
பசுமையாக.

கனத்த காதல்

 ஏங்கிக் காத்துக்கிடந்து
பின் ஒட்டிக் கொண்ட தேகங்கள்,

ஒட்டிய உதடுகள் பிரிய வழியின்றி
கட்டிய கைகள் இறுக இடமின்றி
பின்னிய கால்கள் விலக மனமின்றி
கட்டுமூட்டையாய் கிடந்தநிலை,

காட்டுக் கருவேல முட்கம்பு
காலனியின் அடிவரை ஒட்டிநின்று
பிரிக்கமுடியாமல் பாதநுனியில்
சிறுவலி சிதறிய நிலை போல்,

முனகியவள் முட்களின் வலியால்தான்
துடிப்பதாய் உணர்ந்து அவன் பதற,

பதறியவன் இறுக்கிய இறுக்கத்தால்
திணறினான் என அவள் கலங்க.

முடிவுபெறாத, முடிக்கமனமில்லாத
முடிக்கமுடியாத முடிவுதெரியாததாய்
முடிந்தது காதலின் இன்பக் கலவி.

இருந்தபடியே வீங்கிய வீக்கங்கள்,
நிறைந்தபடியே பொங்கிய மனம்.

நீ பாதி நான் பாதி

ஆதி, பாதியாகி வாதிட்ட மீதி நீ,
நிலை மறந்து மோதிட்டாய் உன் பாதியில்.

பாதிப் பாதியாய் பல பாதி, துதி பாடி,
சில பாதி உறுதி என நம்பி மறு பாதி
கொண்டு களித்த நீதி உரைத்திட்டேன்.

என் பாதி இது பாதி என வாதிட்ட
ஒரு பாதி, எட்டி நின்ற வீண் பாதிகள்.

கண்டு தொட்டேன் உற்ற பாதி நீதான்
எனவே ஆய்ந்து பட்ட உரசலாய் மீறி.

தொட்டதும் கிண்ணம் சிவந்து,
விரல் பட்டதும் கண்கள் சிவந்து
நின்ற நீ என் பாதி.

பாதி உந்தனை காதல் பசை
கொண்டு பாதி எந்தனை
ஒட்டியே முழுமை செய்திட்டேன்
பாவியான பாதிகளை ஆவியான ஆதியாய்.

கலைக்கண்ணில் பனை

கரும் கூந்தல் கலைத்துக் கட்டினால்
பனம் கீத்துக் கிளைகள்தான்.

கூடுகட்டிக் களித்திருக்கும் ஆந்தைகள்
கூர்மையான கருவிழிகள்.

காய்ந்து பாடியாடும் பாலை வளைவுகள்
கொஞ்சிநிற்க்கும் கன்னக் கிண்ணங்கள்.

குலைகள் ஊஞ்சலில் நுழைந்து தூங்கும்,
விளைந்து முலைத்த இள நுங்குகள்.

கீறி வடியும் பாலைகள் பால் சுரக்கும்,
மழலை பசி தீர்க்கும் கள்.

மொத்தமும் நீகொண்ட வலிய தொடை
நெடிய பருத்த கருந்தண்டு.

நீயில்லாத நான்

சிறு மாற்றுப் பாதையாயினும்
ஒரு சுதந்திரக் காற்றையே
சுவாசிக்கச் செய்திருக்கிறாய்.

உன் பற்றிய நினைவுகளை
எல்லாம் துறக்க, இசைக்கும்
குயில்க் கூட்டங்களே அதிகம்.

அசைவு ஆட்டங்களையும்
அஞ்சாமல் எடுத்தெரிய, இன்ப
மயில்களின் ஆனந்த நடனங்கள்.

வானத்துக்குக் கூட வகையறியா
குதூகலம்தான் பின் என்ன
எட்டுத் திசைகளிலும் வானவில்கள்.

என் வழி தனி வழியாய்
உன் மனம் நோகாமல், பாவாமல்
ஓர் துன்பமில்லா இதய வழிபாடு.

சுற்றிலும் புல்வெளிதான்
பாய்ந்தோடும் நதிவழிதான்
நீயும் உவகையோடு வாழவேதான்.

தனிமையே இனிமை

மரக்கிளைகளினூடே குடியிருந்த குயில்
விட்டுப் பறந்தபின்னும் இனிமை தங்கியே
கிடக்கின்றது.

மிச்சமாகிப்போன இரவுகளும் தனிமையில்
இனிமைகளையே விதைத்திருந்தன.

ஒவ்வொருமுறையும் முன் சென்று பின் வந்த
அக்காளின் முகமும் சிறுகச் சிறுக
மறந்துகொண்டிருக்கின்றன.

தனிமையே இனிமை என்பதினை உரைத்து.

ஏன் இன்னும் இம்சிக்கின்றாய்

அது ஒரு காற்றில்லாக் காலைப்பொழுது.
ஆனந்தம் மறுக்கப்பட்டே மலர்ந்த நேரம்.

கனவுகள் தடுமாறி ஒழுகி, நினைவுகளில்
ஒட்டி உறவாடிக்கொண்டிருந்த உதையநாள்.

செவ்விதழ்கள்கொண்ட பச்சைக் கிளிகள்கூட
கனிந்த பழங்களை வெறுத்துநின்ற நிமிடம்.

சந்தோசக் குயில்கள்கூட கூவுனபோழுது
திக்கித் திணறித்தான் நின்றன.

இளங்காலை ஆதவன்கூட யோசித்துத்தான்
கிழக்குக்குள் மங்கின ஒளியுடன் வெளிப்பட்டான்.

நினைவுகள் மழுங்கிக் கிடந்த அந்த நொடியிலும்
தாங்கவேமுடியவில்லை உன் உறவுத்தொல்லை.

கனவினுள் உறவாடினவள் சும்மாயிருக்காமல்
கொளுசுகொண்ட கால்களை வேறு ஆட்டிநிற்கிறாள்.

நமக்குள் உள்ள காதல், நட்பாகினபின்
இன்னும் ஏன் என்னை இம்சிக்கின்றாய்.

உயிருள்ள ஓர் காலை

இதுவும் ஓர் இனிய காலைப் பொழுதுதான்.

தோட்டத்தின் பச்சைப்பசும் உயிர்களெல்லாம்
நிறைவுடன் தலையாட்டிநின்றன நீர்பட்டவுடன்.

ஒரு கொடிக்கு மட்டும் வெட்கமும், பின்
முளைத்த எக்காளமுமாய் முகம்.

ஒரு மஞ்சள்நிற மலர் காட்டிப் பூத்து,
கர்ப்பமாகப் போகின்றதாம் இன்பக்களிப்பு.

வண்ணக் கலவைகளால் பூசப்பட்ட சிறகினில்
வட்டமடித்துக்கொண்டாடும் வண்ணத்துப்பூச்சிகள்.

சர்ப்பங்கள் மிக அழகானவை இறைப்படைப்பில்,
ஆனாலும் முகம்காட்டமறுத்தே வாழ்கின்றன.

கண்டதும் கொடியினுள் புகுந்து
மறைந்து விளையாடி மகிழ்கின்றன.

துப்பாக்கிகள், அவற்றின் உயிர் பறிக்கின்றன.
உயிர்களையும் உருவாக்கவும் செய்கின்றன.

உயிரின் உயிரே...!

திரும்பும் திசை எங்கெங்கும்
உன் முகம்தான் தெரிகிறது...!

இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும்
உன் பெயர்தான் ஒலிக்கிறது...!

சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும்
உன் நினைவுகள்தான் வந்து போகிறது..!

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும்
உன் அருகாமையைத்தான் எதிர்பார்க்கிறது...!

பிரிவென்பது சில கணமானாலும்
தவிப்பென்பது மரண வலியாகிறது......!

அன்பே..............
உன்னை நீங்கும் போது எனக்கு
உலகமே இருண்டு போகிறது...!

ஆறாத காயமும்... தீராத சோகமும்...........

உன்னை
மறக்கச் சொல்லிய
தருணத்தில்...

என்
கண்கள் இரண்டிலும்
கண்ணீர்
தீர்ந்து போனது..!

விரும்பி நீ
பிரிந்து விட்ட
பிறகும் கூட...
பிரிய மறுக்கிறது
உன் நினைவுகள்
என்னை விட்டு..!

பூமிக்கு உள்ளே
புதைந்திருக்கும்
மரத்தின் வேரைப் போல்...
என் மனக்குள்
நீ தந்த
காயமும்... சோகமும்...!

இது
ஆறாது... தீராது...
எக்காலமும்..!

காதல் இதயம்........

நித்தமும் கூட்டை முதுகில் சுமந்தே...
நகர்ந்து செல்லும் நத்தையாய் - உன்
நினைவுச் சுமையை நெஞ்சில் சுமந்தே
நாளும் வாழ்கின்றேன்
நானும்..!

எத்தனை முறை நடந்தாலும்...
அத்தனை பாதச் சுவடுகளையும்...
அடிக்கடி வந்து அழித்து விடுகிற
கடற்கரையோர கடல் அலையாய்
உன் இதயம்...

'பொத்' என வீழ்ந்த
ஓர் வான் துளியை...
நித்தமும் பாதுகாத்து,
முத்தாக்கும் முயற்சியில்...
முழுதாய் சுகம் காணும்
என் இதயம்..!

கலைந்த எண்ணங்கள்

அலைபேசிகள், அனுப்பப்பட்ட எண்களின்
தகவல்கள் அனைத்தையும்
தேடி இழுத்துத் துடித்து அலறுவதைப்போல்

நீ எனக்கு அனுப்பிய எண்ண அலைகளின்
அதிர்வுகளை அள்ளி  அணைத்து
மூளைக்குள் ஒளித்துக்கொண்டேன்.

உரைத்த உயிர் மூச்சின் உள்ளம்
அறிந்ததினால் உன் இல்லம் தேடி
நிலை நிறைத்து நின்றிருந்தேன்.

உன் விழியம்புகளின் விவகாரங்கள்,
நடையழகின் நாகரீக நடிப்புகள்,
நெஞ்சத்தின் ஆழமான விம்மல்கள்,
உரசிச் சென்ற உயிர்விழுங்கும் சிரிப்பழகு,

புன்னகையை நிரந்தரமாக்கத் துடிக்கிறாய்
பறந்துகொண்டிருப்பதாய் நினைத்து
மயங்கி மலந்து உறங்கிக்கொண்டே.
ஊர் செல்ல வழி புரியாமலே, தெரியாமலே.

காட்சி தர விருப்பமில்லாமல்,
கட்டி முத்தம் கலக்காமல்,
கிறங்கடிக்கும் மொழியாவும் பேசாமல்,
கரையேறிப் பறந்துவிட்டிருக்கிறாய்.

நீ செய்தால் மட்டும்
அது சரியாகத்தானிருக்கும்.

இன்பவாழ்வு

கானகக் கவுதாரிகள் குடும்பமாக
தன் அழகிய சிறு குஞ்சுகளுடன்
ஓடியோடி நடக்கும் அந்த நடையழகு.

சிறார்கள் தன் அலகால் தரைகொத்தி
இரை சிக்கியதுகூட புரியாமல்
தலை உதறும் நிலை தனியழகு.

தாயின் மொழியுணர்ந்து ஒரு கீச்சுக்கு
அடிபணிந்து சலசலக்க எச்சரிக்கையாய்
உயிர்ப்புடன் பறந்து ஒளிந்துகொள்வது ஓரழகு.

உலகமே துடிப்புடன் இயங்கும் பொழுது
உன்போல் இனிமையாய் துயில்ந்து
நிலைமறந்து கிடப்பதும் அழகுதான்.

எல்லா அமைதியும் கிடைக்கப்பெற்ற
முழு மகிழ்வும் அனுபவிக்க வரம்பெற்ற
மதிமறந்து மனம்திறந்த இன்பவாழ்வு வாழ்கவே.

இனிமையான இந்தத் தனிமை

ஆழ்ந்த அமைதியின் சொரூபக் கூடு
அதில் தனிமையின் மலர்ந்த இனிமை.

சில்லென்ற தென்றலின் இரவுத்தாலாட்டு
சிறிதாகக் கலந்த உன் மொழியுரசல்கள்.

சிதறிய நிலையில் மேகக் கூட்டங்கள்
சிற்றிடையினில் சின்ன நிலா.

மின்னல்களை எண்திசையும் எரியும்
மின்மினுக்கும் விண்மீன் தொகுப்பு.

தன் வெப்பக் கீற்றுக்களை வீசி எரியும்
அனல் அடிக்கும் அன்பு ஆதவன்.

தனிமையே இங்கு இல்லை, உறவுக்கு
ஆயிரம் சொந்தம் திரும்புமிடமெல்லாம்.

உன் இருப்பு இருக்கவில்லை என்பதினை
என் நெருப்பு உரைத்துவிட்டிருக்கிறது.

உடன் கலந்திருப்பது மட்டும் ஒரே உயிர்
அதன் நினைவுகளில் நித்தமும் நிரந்தரம்.

நிலையில்லா ஜென்மத்தின் ஈடு, மறு
ஜென்மம் மறந்திடும் மந்திரக் கூடு.

நிரந்தரக் காதல்

அடைத்துக் கிடக்கும் அளவுகடந்த பைகள்
அவிழ்ந்து விழத் துடிக்கின்றன.

கவிழ்ந்து கனிந்த மா வீழ்ந்து கடிபட்டுச்
சுவைக்கப்பட்ட பின்பே ஆனந்தம்.

விழுந்துவிட்ட பார்வை அம்புகள்
கண்ணுற்ற பின்பே கனியமுது.

சேதமுற்றுத் தடுமாறிய நிலையே
உன் வார்த்தை உருவங்களுக்கு உற்சாகம்.

ஒட்டி நின்று உறவாடிய பின்பே
கண்ணிபோன கொடியிடைக்குக் கொண்டாட்டம்.

அன்பே, உன் நிஜங்களில் மூழ்கிய பின்பே
என் நிரந்தரங்களுக்கு உண்மையான உயிர்ப்பு

ஆடிக்காற்று

விழித்து நோக்குங்கால் கண்களில்
நீர் நிறைத்து வழிந்தோடுகிறது.

ஆடை கட்டிய நிலவை உறித்து
மேடை போட்டு ஆட்டுகின்றாய்.

ஒவ்வொரு அசைவுகளின் ஆழத்தினுள்ளும்
அசைந்தாடி படர்ந்தோடி,

அத்தனை அங்கப் பிரதேசங்களையும்
அளந்து அனுபவித்தே கரையேருகின்றாய்.

கெஞ்சிக் கேட்கிறேன் உன்னிடம்
கண்டவற்றை கடைபோட்டுக்கத்திடாதே.

பசுமையான மரத்தின் இலைமுடிகளையும்
கூந்தலைப்போல் அலைகழிக்கின்றாய்.

கற்ற பறவைகளின் இசைச் சத்தங்களைஎல்லாம்
சற்றே விசிலாயயடித்து சலசலக்கிறாய்.

ஒளித்துவைத்திருந்த, அவன் தந்த
ஒரே காதல் கடிதத்தையும் அடித்துசென்றாய்.

அதைமட்டும் எப்படியாயினும் திருப்பித் தந்துவிடு.
உன் பசியாற்றுகிறேன் நான்.

காதலின் முத்தம்

கருவிழிகள் சண்டையிட்டு மயங்கி,
சுவாசம் அடங்கித் தவித்து,
கரங்கள் தொட்டுத் தழுவப்பட்டு,
கால்கள் பின்னிப்பிணைந்து அடிமைப்பட்டு,
கொடியுடல் மலைத்து நிலைகுலைந்து,
உதடுகள் உருமாறிச் சளிந்து,
உமிழும் உயிர்த் திரவம் கலந்து,
உயிரினுள் உள்விளையாட்டு நடத்தி,
நினைவுகள் தடுமாறிக் கரைந்து,
நிலை மறந்து, உடல் தளர்ந்து,
உலகமே மறைந்த நிலை.

இப்படியே ஒரு காதல் முத்தம்
உறைகின்றது, உரைக்கின்றது.

காக்கைக் குஞ்சு

ஒரு காக்கைக் குடும்பத்தின்
விடலைப் பருவக் குட்டிப்பையன்.

முதல் உலக அறிமுகத்தில்
வைத்த உணவருந்தத் தெரியவில்லை.

சிவந்த வாய் பிளந்து நிற்கும்
தாய்நோக்கி யாசிப்பதுபோல்.

சுவர்மேலே ராஜநடை கொண்டு
நடந்து நடித்துப் பார்க்கும், கர்வமுடன்.

தவறி விழுந்து சுவர் கவ்விநிற்கும்,
வெள்ளத்தில் விழுந்த கைகள் கரை பற்றத்
துடிப்பதுபோல்.

பல்லி புரிந்து, பாம்புடன் விளையாடும்
விளைவுகள் அறியாமல்.

அறிமுக வாழ்க்கையின் ஆபத்துக்கள்
ஆனந்த விளையாட்டுக்களாய்.

எனதன்புத்தாய்

உன் தாய்வீடு தங்கத்தை அங்கமாய்
கொண்டிருப்பினும் பற்றில்லை உனக்கு.

மணாளனின் கரம் பிடித்தபின் மண்சோறும்
விருந்துணவுதான் உன் வாழ்க்கையில்.

குடும்பத்துக்காய் நகைகளை விற்றும்
வருத்தமில்லா நாட்கள்தான் உனது.

நகைகள் உடல்பட்டு மினுக்கும் உலகில்
ஒரேயொரு பட்டுமட்டுமே மினுங்கும் உன்
ஒவ்வொரு விழாக்களிலும்.

நகைகளை உன் கழுத்து அறிந்ததில்லை
அவை கழட்டப்பட்ட பின்னர்.

வாழை, தன் மொத்த உடலையும்
சார்ந்தவருக்காய் உரித்துக் கொடுப்பதுபோல்,

உன் உடமைகளனைத்தும் மற்றவர்
நன்மைக்காய் விட்டோழித்தாய்.

வயதுவந்தபின் மக்களின் கைகளிலிருந்து
ஒரேயொரு வைரத்தோடு விரும்பி நின்றாய்.

அதைக்கூட உனக்கு அணிவித்து ரசிக்க
முடியாதபடி காலன் உயிரைப் பறித்துவிட்டானே.

என்செய்வேன் நான், வைரம் காணும்
பொழுதெல்லாம் கண்ணீர் சிந்துவதைத்தவிர.

தாத்தாவின் வாழ்க்கை

ராஜ குடும்பப் பிறப்பினில்
மூன்றாம் சிங்கமாயே இவர்.

பட்டுச் சொக்காய் அணிந்துதான்
வாழ்வின் துவக்கம்,

பஞ்சனை மெத்தையிலேயே
இரவின் உறக்கம்,

இரவு பகல் ஊழியம் செய்ய
உறவு மக்கள்,

பள்ளி செல்ல என்னவோ
சாரட் வண்டிதானாம்,

எல்லாம் அறியாப் பருவம்
வரையினிலே மட்டுமே,

விவரம் அறிந்த சிலநாளிலே,
உறிக்கப்பட்டது பட்டுச் சொக்காய்.

மாறிய வாழ்க்கை கால்நடையாகியது
பள்ளி செல்லும் வழியை.

வந்து நின்றதாம் வாயிற்படியில்
மஞ்சளிலே ஏதோ கடிதம்,

கொடுத்த தகப்பன் தலையிலே கை,
தாய் தலைகவிழ்ந்து கண்ணீருடன்.

மாலையில் மறைந்த ஆதவன்
உதிக்க மறுத்துவிட்டான் காலையில்.

பதினான்காம் வயதில் ஒரே இரவில்
இடிந்துவிட்டது வாழ்ந்த இவர் கோட்டை.

தாங்கி நின்று தன்மானம் காத்து தயங்கித்
தயங்கியே முடிந்தது இவர் வாழ்க்கை.

பதினாலு வயதுக்கு முன் கோடிக்கு அதிபதி,
அடுத்தநாள் கோடி உடுத்த வழியில்லா தளபதி.

வேண்டாமடா இறைவா இனியொருமுறை
இப்படியொரு நிலை உலகில் எவர்க்கும்.