Wednesday, 9 November 2011
கோபத்திலும் அழகு
உன் பருவத்தில் ஏனடி தவிப்பு?
உள் மனமென்னும் கோவிலின் விருப்பு.
மனதினில் என்னடி வெடிப்பு?
ஊடலின் முடிவினில் மறுப்பு.
ஆசையும் கோபமும் தவிப்பும்
ஏனடி கொண்டது வெறுப்பு?
சிரிப்பினில் ஆயிரம் இருப்பு,
மறைத்து விடின் முறைப்பாமோ?
கோபத்தில்கூட புன்னகை நெருப்பு,
பூத்துக் கிடக்குது உதட்டுக் கரையினில்.
தனிமையில் நிறையுது கணிப்பு,
தனமெல்லாம் சிவக்குது, பூரிப்பு.
புலவிக்கு என்னடி சிறப்பு,
புன்னகையில் புரட்டும் வனப்பு.
மறைவினில் நிற்கும் விழிப்பு,
விளைந்த மதிஎல்லாம் இன்பக் களைப்பு.
விட்டுவிலகடி உளம்கொண்ட ஊடல்,
உள்வாங்குது உள்ளமெல்லாம் சிலிர்ப்பு.
ஏன் உறுதியற்றவனா
பூக்கள் கனவுகாண்பதில்லை,
ஆனால் கனவுகளை நிஜப்படுத்துகின்றன.
பொழுதும் நின்று உறவாடுவதில்லை,
உருண்டுகொண்டாலும் உண்மையுரைக்கின்றன.
நிலையில்லாக் காற்றும் உறங்குவதில்லை,
உயிர் வாழ உதவுவதை செய்கின்றன.
களங்கமில்லா நிலவும் சுடுவதில்லை,
கண்களின் சோகத்தை பிரித்தெறிகின்றன.
கண்டுறங்கும் கழனி செழிப்பதில்லை,
சோம்பேறிகளை உருவாக்குகின்றன.
நட்சத்திரம் மினுமினுக்கத் தவறுவதில்லை,
நாள்தோறும் உலகை வழிநடத்துகின்றன.
ஒவ்வொருநிமிடமும் உனையே சுற்றிவரும்
என்னை மட்டும் அன்பே, புறக்கணிப்பதேன்?
உன் இன்ப மனதில் குடிகொள்ள நான்
உறுதியற்ற, தகுதியுள்ளவன் என்பதினாலா?
அது நீதான்
குரல் மாற்றிப் பாடுவதால்
நீ குயிலாகப் போவதில்லை.
பெயர் மாற்றிப் பட்டியலிட்டதால்
உன் முகம் மாறப்போவதில்லை.
முகவரி மறைத்து முன்னிற்பதால்
உன்மீதான காதல் குறையப்போவதில்லை.
கண்டுகொண்டேன் உன்னை
உன் உயிர் உரசினபின் நீதானென.
நிலாப்பெண்ணே
கண்ணின் ஓவியமோ கருவிழி,
கண்டெடுக்கப்பட்ட
வெண்ணிலவின் கருவண்டோ.
தென்றலின் சீதனமாய்
பட்டுச் சேலை பறந்து நின்று
கட்டுப்படுத்தினதால்
ஒட்டி உறவாடும்
அன்னநடை பின்னுவதோ.
வளர்ந்த கார்குழல்
ஏனோ பெண்ணே
காளையரின் காதலினை
அடக்குதற்கோ,
சடையின் நடனத்தில்
மத்தளம் தட்டிநிற்கும்
இடையோ
கவரும் கவனச் சிதறல்கள்.
அடங்காத ஆசை
இதழுடன் இதழாட
மலருடன் விளையாட
இளமயில் நடையாட உன்
இளமையில் இசைந்தாட
கனவுடன் கசந்து கிடக்கிறேன்.
நிலமகள் நிறைந்தாட
நிலவுடன் நீ பறந்தாட
நித்தமுன் நினைவாட
நிலையில்லா மனமாட
வீழ்ந்துகிடக்கிறேன் ஆசையில்.
இரவும் பகலும் கலையே
இருவர் நிலையும் சிலையே
கைப்பற்றின கைகளுக்கு
முத்தமே காணிக்கையாக..
Thursday, 3 November 2011
பஞ்சுமெத்தையான முள்படுக்கை
முழுமை எனநினைத்து, முழுசத வெற்றிதான்
என, தனைமறந்து நிலை மழுங்கிக் கிடந்த,
முதல் காதல், பொய்யானபின், மொத்தமாய்
மனை வாழ்கையும் வழுக்கிச் சரிந்தபின்,
நிலையில்லா மனம் அலையலையாய்
அலைந்தபின், குலைந்தபின்,
உலகம் அருளிய நிரந்தரமற்ற, விலையாடிய,
இன்பங்களை எல்லாம் அனுபவித்துத் தீர்த்தபின்,
முகவரியினை மாற்றின ஒரே தெய்வம்
அசைவற்று அறிவிப்பின்றி அமைதியானபின்,
விதவிதமான காற்றினை சுவாசித்துவந்த
என் மிதந்த பழைய வாழ்க்கையில்
புகுந்து நின்றாள், ஒளிர்ந்து நிற்கிறாள்
என்னுயிர் தாய்.என்னுலகத்தை மாற்றி.
பெற்றதாய் மடிசாய்ந்ததில்லை நான்,
ஆனால் உயிர் கலந்திருக்கிறேன்.
உலகுண்மைகளைஎல்லாம் உணர்த்தி,
என்பாதி உன்னையும் எனக்கு பெற்றுத்தந்தாள்.
இறையை கலந்திடும் வழியும்
உணர்த்திநின்றாள் உன்வழியாகவே.
காட்டின வழியில் கரை சேர்ந்துவிட்டேன்.
கலவரமில்லை, காடு வா வா என்கின்றது
Subscribe to:
Posts (Atom)