Saturday, 10 November 2012

எங்களின் தீபாவளி.

எங்களின் தீபாவளி.

அந்தக் காலங்கள் ஒரு இனிமைதான். ரொம்ப சுதந்திரமானது. இயற்கையானது. மனதில் கவலையில்லாததும்.
1970 களில் பள்ளிப்படிப்புக் காலங்கள். தீபாவளியின் முந்தய தினம் எங்கள் கிராமத்திற்கு பயணமாவோம். மொத்தகுடும்பமும் அன்றிரவே ஆஜராகிவிடும். ஒவ்வொரு வயது தொகுதிகளும் தத்தம் வயதினருடனும் சேர்ந்துகொண்டு தங்களின் இன்பத்தை தொந்தரவின்றி அனுபவிப்போம். என்வயதொத்த இளசுகள் படையில் நாங்கள் நால்வர். ஊர் சென்றடைந்ததும் நால்வரும் இணைந்தே செல்வோம் எங்கு சென்றாலும். இது எழுதப்படாத தீர்ப்பு.
முதலில் மாமாவைக் காணத்தான் செல்வோம். மாமா என்றால் சின்னத்தை மாமா. எங்களைக்கண்டவுடன் அவர், வாங்கடா வெடிவாங்கப் போவோம் என்று எங்களை அழைத்துக்கொண்டு கடைக்குக் கூட்டிச்செல்வார். கடையில் வெளியே ஒரு சேரைப்போட்டுக்கொண்டு மற்றவர்களுன் அரட்டையடிப்பார். எங்கள் பட்டாளம், எந்த நேரத்திற்கு எந்த வெடி போடுவதென்று தீர்மானித்து முடிவுசெய்து வெடிகளை சேர்க்கத் துவங்குவோம்.
முழு இரவுக்கும் ஒலைவேடியும் துப்பாக்கி வெடியும்தான். அதன்பின் அதிகாலை 5000 சரம், மற்றும் வகைவகையான சரங்கள். மதியவேளையில் அணுகுண்டு, லட்சுமிவெடி வகையறாக்கள். மாலையில் வெளிச்சம் தரும் ராக்கெட், புஸ்வானம், மத்தாப்புகள் எல்லாம். ஒரு முழுநாள் மட்டுமே இந்தக் கொண்டாட்டம். தேவையான வெடிகளனைத்தையும் தூக்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்ததும், அனைவருக்கும் அவர்களின் தகுதி வயதுக்கேற்ப பிரித்துத் தரப்படும். மொத்தம் வெடிவெடிக்கும் வயதில் 16 வீரர்களும் வீராங்கனைகளும் உண்டு. ஒரு சத்தமும் இன்றி பிரித்து அவரவர்களுக்கு ஒரு மஞ்சள் பெருங்காயப் பையில் போட்டுத் தரப்படும். அவர்கள் அதைப் பாதுகாத்து விரும்பியநேரம் போட்டுக்கொள்ளலாம்.
வெடிகள் கைக்குவரும்வேளை இரவு 10 மணி. பெண்கள் பலகாரங்கள் செய்யத் துவங்குவார்கள். நாங்கள் ஒலைவேடியில் துவங்குவோம். அதிரசம், முறுக்கு, சீவல், சீடை, முந்தரிக்கொத்து, அல்வா, அது கக்கும் நெய்யில் மைசூர்பாகு, வடைவகைகள், ரவாலட்டு, ரவை பணியாரம், இட்டிலி,பொங்கல் சாம்பார் அத்தனையையும் இரவு முழுவது விழித்து செய்து முடிப்பார்கள். அவர்கள் முடிக்க, நாங்கள் ஓலைவெடிகளை வெடித்துமுடிக்க அதிகாலை நாலை மணி காட்டிநிற்கும்.
எல்லோரும் குளிக்கத் துவங்குவர். எங்கள் இளவட்ட சங்கம் கிணற்றிலிருந்து எல்லோருக்கும் நீர் இரைத்துக் கொடுக்கும் வேலையைச் செவ்வனே செய்துமுடித்து குளித்து முடிக்கும்பொழுது காலை ஆறைத் தொட்டிருக்கும் மணி. பெருசுகள் முதல் அனைவரும் சேர்ந்து சாமி கும்பிட்டு, அய்யாப்பா எல்லோருக்கும் புதுதுணியினை வழங்க தீபாவளி துவங்கும்.
முதலில் 5000 வாலாவில் துவங்கி அது ஒருபுறம் களைகட்டி ஓடிக்கொண்டிருக்கும். மொத்தக் குடும்பமும் வெடிவெடிப்பதினைக் கண்டு ஆரவாரம் செய்து மகிழும். பின் விருந்து. எதை எடுப்பது எதை விடுப்பது என்பது ஒரு குழப்ப நிலையினை உருவாக்கிவிடும், அளவுக்கு உணவு வகைகள். எல்லாம் ருசியானவை. தேர்ந்த பெண்களின் கைப்பக்குவம். வாழ்வின் பாக்கியமான திகட்டிடும் நிமிடங்கள். உணவு முடிந்ததும் அரட்டைகளும் நையாண்டிப் பேச்சுகளும், கேலியும் கிண்டலுமாக நேரம் ஓடிடிடத் துவங்கும். ஒரு பிரிவு அன்று ரிலீசாகும் புதுப்படம் பார்க்கக் கிளம்பிவிடும். அப்படியே இரவின் விழிப்பு, உணவின் இனிமை, நண்பர்களின் அன்பு எல்லாமாய் சேர்ந்து நம்மை ஒரு கிறக்கத்தில் கொண்டு நிறுத்திநிற்கும். அதற்காக தூங்கிவிடவும் முடிவதில்லை. மாலையில் எல்லா வெடிகளும் தீர்ந்து, வெடிக்காத வெடிகளைஎல்லாம் தெருவில் பொறுக்கியெடுத்து சொக்கப்பானை கொளுத்தும்வரை எல்லாமும் சரியாகவே சென்றுகொண்டிருக்கும்.
ஒவ்வொரு வருடமும் சொக்கப்பானை கொளுத்தும் சமயம் யாருக்காயினும் ஒரு தீக்காயம் ஏற்படாமல் போகாது. முக்கியமாக என் பெரிய மாப்பிள்ளைக்கு ஏதாகிலும் ஒரு சிறிய காயமேனும் ஏற்படாமல் தீபாவளி முடிந்துவிடுவதில்லை. அவனுக்கும் தீபாவளிக்கும் அப்படியொரு இன்பப் பிணைப்பு.
பின்னர் சோகத்துடன் ஒருவரையொருவர் பேசிக்கொள்ளாமல், கணத்த மனதுடன் பிரிந்து ஊருக்குப் புறப்படுவோம். இதுதான் நாங்கள் வாழ்ந்த இன்பத் தீபாவளி.

Wednesday, 7 November 2012

ஒரேயொரு முத்தம்

அன்று கல்லூரி வாழ்க்கை முடிவுக்குவரும் கடைசிநாள். அவர்கள் இருவரும் காதலர்கள்தான் என்றாலும் ஒருவரையொருவர் இதுவரை தொட்டுக்கொண்டதேயில்லை. அவளுக்கு அவர்களின் வீட்டில் மிகப்பெரிய பணக்கார மாப்பிள்ளையையும் பார்த்தாகிவிட்டது. அவளால் மறுத்துவிட முடியவில்லை. சூழ்நிலை. இரண்டுமணிநேரங்கள் மனம்விட்டு பேசிக்கொண்டார்கள். அவன் காதலுக்குப் பரிசாக ஒரேயொரு முத்தத்தினைப் பரிசாகக் கேட்டான். அவளால் அதற்கு ஒத்துப்போகக்கூட மனம் வரவில்லை. கடைசியில் இனிசந்திப்பதில்லை என முடிவெடுத்துப் பிரிந்து சென்றனர். துவங்கும்போழுது அவளின் திருமண வாழ்வு இனிமையாய்த்தான் இருந்தது. மனத்தில்மட்டும் ஏதோ ஒரு குறையுடன் இருப்பதாகவே அவளுக்கு இருந்தது. மணவாழ்க்கையை பழையவற்றை முடிவுக்குக் கொண்டுவந்து புதிதாகத்தான் வாழ்வதுபோல் துவங்கினாள். சூல் அமையப்பெற்றாள். சிறகெடுத்த வானில் பறப்பதுபோல் உணர்ந்தாள். அவள் வாழ்வுக்கும் ஒரு அர்த்தம் இருந்ததை விரும்பினாள். என்ன பெயர் வைக்கவேண்டும் என்று மனத்தைக் கசக்கி சில பெயர்களை குறித்துவைத்துக் கொண்டாள். அதில் ஆண் மற்றும் பெண் பெயர்களும் இருந்தன. சந்தோஷ மனநிலையில் வானத்தைப் பார்த்தும் தென்றலுடன் பேசியும் மழையுடன் ஆடியும் கவிதைகள் பல வரைந்தாள். உலகத்தை மறந்தாள். இன்பத்தில் குளித்தாள். உலகமே தனக்காக மலர்ந்து கிடந்ததை அனுபவித்தாள். கணவனின் அன்பை அணுவணுவாக ரசித்தாள்.
குழந்தையின் வளர்ச்சியினை கண்டுகண்டு பூரிப்பாய் உணர்ந்தாள். பிறந்த ஆண்குழந்தைக்கு உடனேயே அருண் எனப் பெயரிட்டு மகிழ்ந்தாள். அப்பொழுதுதான் அந்தப்பேரிடி அவளின் தலையை இடித்து உடைத்தது. ரத்தம் சோதனையில் அவளுக்கு எய்ட்ஸ் இருப்பது தெரியவந்தது. குழந்தைக்கும் இருந்தது. அந்தப்பிஞ்சி முகம் பார்த்து அதன் சிரிப்பில் அழுதாள். விஷயம் தெரிந்தவுடன் கணவன் தூக்குமாட்டி அன்றிரவே இறந்துவிட்டான். ஒருநாளுக்குள்தான் எத்தனைஎத்தனை துன்பங்கள். துயரங்கள். வேதனைகள். விபரீத விளைவுகள். ஆறுதல் சொல்லக்கூட எந்த உறவுகளுக்கும் துணிவில்லை. அருகில்கூட யாருக்கும் வரவிருப்பமில்லை.
வீட்டிற்க்குச் சென்றபின் விட்டத்தைப்பார்த்துக் கொண்டே நேரம் சென்றது. அழுவது முழுவதும் நின்றடங்கியது. பட்டென்று அவன், காதலன் பிரிவின்போழுது கேட்ட முத்தம் கண்ணினுள் திரையில் ஓடியது. அவனை சந்திக்க வேண்டும்போல் மனம் கெஞ்சியது. எல்லா திசைகளிலும் விசாரித்து ஒருவழியாக அவன் இருக்குமிடம் கண்டுகொண்டாள். அவன் வீட்டின் நம்பருக்கு போன் செய்தாள். மறுமுனையில் அவன்தான் போனை எடுத்தான். இவளால் ஒன்றும் பேசமுடியவில்லை.
அவளின் நிலை நண்பர்களின் மூலமாக அவளின் பழைய காதலனுக்குத் தெரியவந்தது. இப்பொழுது அவளின் வீட்டுக்கு அவன் போன் செய்தான். அவள்தான் எடுத்தாள். சில நிமிடங்கள் ஒருவரும் ஒன்றும் பேசிட முடியவில்லை. அவள்தான் முதலில் இப்பொழுது பேசினாள். அவனின் உடல்நலம் விசாரித்தாள். அவன் இன்னும் பேசவில்லை. அழுதுவிட்டான். அவள் எங்கு இருக்கிறாள் என்பதைக் கேட்டுக்கொண்டு அவளைக்காண கிளம்பினான். எப்படியும் நான்கு மணிநேரம் ஆகும்.
அவள் வீட்டையடையும்பொழுது மாலை இருட்டத்துவங்கிவிட்டது. உள்ளே சென்று அவள் பெயரையழைத்து கூப்பிட்டான். படுக்கையறையிலிருந்து சிறிய முனகல் சத்தம் கேட்டதும் அந்தத்திசை நோக்கி ஓடினான். படுக்கையில் அவள் கிடந்தாள். அவள் விஷம் அருந்தியிருந்தாள். குழந்தை சிரித்துக்கொண்டு கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு கிடந்தது. அவளை அவனின் மடியினில் ஏந்திக்கொண்டு திட்டினான். அவள் சொன்னாள், எனக்கு ஒரு முத்தமிடு அதுவே என்னின் கடைசி ஆசை. உன்காதலுக்கு அதையே பரிசாகத்தருகிறேன் என்றாள். அவன் அதைக் கவனிக்காமல் அவளைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினான். அவள் எடுத்த வாயில் அவனின் சட்டையை முழுவதுமாய் பரவி நாறடித்தது. அவன் எதையுமே பொருட்படுத்தாமல் ஓடினான்.
அவள் காப்பாற்றப்பட்டாள். பின்னர் அவளை அவனின் ஊருக்கு அழைத்துச் சென்று கோவிலில் மாலைமாற்றி திருமணம் செய்துகொண்டான்.
அது ஒரு இரவு. படுக்கையறையில் அவனின் மடியினில் அவள். அவன் முத்தமிட வெட்கப்பட்டதால் , அவள் அவனை ஆசைதீர முத்தமிட்டாள். கண்ணுற்ற குழந்தை கைகொட்டிச் சிரித்தது.

Tuesday, 23 October 2012

தியானத்தின் அடிப்படை - 2

தியானம் இருப்பது, நிலையான கலவி சுகம் அனுபவித்தல், இறைவனில் மிதத்தல் எல்லாம் ஒன்றுதான் பேரின்பம் அடைதல். ஆன்மாவின் ராகங்கள்.
செக்ஸ், விந்துநாத வெளியேற்றம், தும்மல் எல்லாம் சிற்றின்பம், உடலின் இச்சைகள்.
ஒன்று விந்துவை மூலாதாரத்தில் (G - ஸ்பாட்டில்) நிரப்பி உட்புறம் சுழற்றுதல்.
மற்றொன்று வெளியேற்றல்.
செக்ஸ் உணர்வு பெற்றதும் உடலின் வெள்ளைரத்தம் மூலாதாரத்தில் நிரம்பி முட்டிநிற்கும். பின் வெளியேறும். வெளியேறும்பொழுது மூலாதாரத்தின் காந்த முனைகள் ஒன்று உடலின் அர்த்தனாரீஸ்வர் +veமுனையில் இணைந்து, மற்றது -ve இலும் இணையும்பொழுது அது மின்காந்த அலைகளைப் பரப்புகிறது. அதுவே கலவிசுகமாக உணரப்படுகிறது. வெளியேறியபின் வெறுமைதான்.
விந்துநாதம் வெளியேறும் பொழுது சில நிமிடங்கள் இதுதான் நடைபெறுகிறது.
தியானத்தில், முட்டிநிற்கும் மூலாதார விந்துநாதம் வெளியேறாமல் உட்புறம் சுழன்றுகொண்டேயிருக்கும். இப்பொழுதும் அர்த்தனாரீஸ்வர் முனைகள் இணைகின்றன, விந்துநாதம் வெளியேறாமலேயே. அது நினைக்கும்பொழுதெல்லாம் கலவிசுகம் கொடுத்தவண்ணமே இருக்கும். இங்கு எந்த இழப்புமில்லை. தியானநிலை, பேரின்பப்பெருவிழா.

Monday, 1 October 2012

ஒரு கேள்வி-ஒரு பதில்


நெல்லையப்பன், திருநெல்வேலி.

கேள்வி: சாரு, உங்களால் எந்த ஜென்மத்திலும் மறக்கவே முடியாதவன் நான். திமுகவுக்கும், கருணாநிதிக்கும் ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கும் வைரமுத்துவைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: உங்கள் தொலைபேசி எண் என்ன நெல்லையப்பன்? உங்களையும் உங்கள் பெயரில் திருநெல்வேலியில் வாழும் அந்தக் கொடூரமான ரவுடியையும் என்னால் மறக்கவே முடியாது. அதிலும் பயங்கரம், உங்களுடைய பழைய தொலைபேசி எண் அந்த ரவுடிக்குப் போய் இருக்கிறது என்பது. இது எல்லாவற்றையும் விட பயங்கரம், அந்தப் பழைய எண்ணை உங்களின் லெட்டர் பேடிலிருந்து நீக்காமல் வைத்திருப்பது. என்னைப் போல் இன்னும் எத்தனை பேர் ‘அந்த’ நெல்லையப்பனிடம் மாட்டி அவதிப்பட்டார்கள்?

வைரமுத்து கருணாநிதிக்கு ஜால்ரா அடிப்பதை விடுங்கள். அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் இந்த எழுத்தாளர்கள் செய்யும் அக்குறும்புதான் தாங்க முடியவில்லை. ஒருமுறை கருணாநிதி திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் ஒரு விழா நடத்தி, சில எழுத்தாளர்களை அழைத்திருந்தார். அப்போது நம் எழுத்தாளர்கள் நடந்து கொண்ட விதம் தமிழ் இலக்கியத்துக்கே அவமானகரமானது. தமிழின் சிறந்த கவிஞர்களில் ஒருவரான ஞானக்கூத்தன் கருணாநிதி கை குலுக்கிய போது தன் தேகமே சிலிர்த்ததாக மேடையிலேயே குறிப்பிட்டார். இவ்வளவுக்கும் தன் வாழ்நாள் பூராவும் திராவிடக் கட்சிகளைப் பற்றிப் படு பயங்கரமாகக் கிண்டல் அடித்துக் கவிதை எழுதிக் கொண்டிருந்தவர் ஞானக்கூத்தம். மற்ற எழுத்தாளர்கள் அடித்த ஜால்ராவோ அதை விட அதிகம். கருணாநிதியே இதைப் பார்த்து மிரண்டு போய் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த அப்துல் ரகுமானிடம் “என்ன இது, நம் கட்சிக்காரர்களே தேவலாம் போலிருக்கிறது; இப்படிப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்!” என்றாராம். இது பற்றிக் கடுமையான கண்டனத்தை அப்போது தெரிவித்திருந்தார் ஜெயமோகன். ஆனால் இப்போது அவர் சினிமாவில் வசனம் எழுதும் சான்ஸுக்காக எப்படியெல்லாம் சமரசம் செய்து கொள்கிறார் என்பதை நாம் கேள்விப்பட்டுக் கொண்டுதானிருக்கிறோம்.

ஞானக்கூத்தனைப் போல் தன் வாழ்நாள் பூராவும் திராவிடக் கட்சிகளையும் கருணாநிதியையும் திட்டிக் கொண்டிருந்த இன்னொரு எழுத்தாளர் நாஞ்சில் நாடன். ஆனால் அவர் சாகித்ய அகாதமி பரிசு வாங்குவதற்காக அடித்த குட்டிக்கரணங்கள் எல்லாம் குரங்காட்டி தன் குரங்கை வைத்துச் செய்யும் சேஷ்டைகளை விடவும் கேவலமானவை. ஆனால் இது பற்றியெல்லாம் எந்த எழுத்தாளனும் இங்கே பேச மாட்டான். நாஞ்சில் நாடனைப் பகைத்துக் கொள்ள முடியாதே? நாஞ்சில் நாடனைப் பகைத்துக் கொள்வது ஜெயமோகனையே பகைத்துக் கொள்வதைப் போன்றது. ஜெயமோகனைப் பகைத்துக் கொள்வதும் மதுரை அழகிரியைப் பகைத்துக் கொள்வதும் ஒரே விஷயம்தான். சாகித்ய அகாதமி பரிசு வாங்கிய கையோடு உலகத்தின் மிக கௌரவமான பரிசான கலைமாமணி விருது வாங்க நாஞ்சில் நாடன் செய்த குரங்கு வித்தைகளை எழுதினால் எனக்கும் சாதிக் பாட்சாவுக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் என்று அஞ்சுவதால் அதை எழுதாமல் விடுகிறேன்.

Tuesday, 21 August 2012

கிரிக்கெட் - ஒரு விளையாட்டு

அவனது பள்ளி வாழ்க்கை பல சோகங்களை உள்ளடக்கியிருந்தாலும் மிகவும் சுவாரஸ்யமானது.
அடிப்படையில் அவனொரு ஹாக்கி வீரன்தான். பின்னாளில்தான் கிரிக்கெட்டை விளையாடினான். அது ஒரு அருமையான கதை. அவன் பள்ளியின் டீமில் இடம்பெற்றிருந்தான். லெப்ட்டெக்ஸ் இல் தேர்ந்திருந்தான். அந்த பொசிசன்தான் முக்கியமானது ஹாக்கியில். வெற்றிக்கு வழி வகுக்கக்கூடியது. கடினமானது.
தினமும் மாலை 5 மணிக்குப் பயிற்சி. மூன்று மாதங்கள் நல்லபடியாகவே சென்றது. ஒருநாள் கோச்சுடன் லடாய். அவர் பழிவாங்கும்விதமாக செயல்படத் துவங்கினார். ஒருநாள் 5 .05 க்கு பயிற்சிக்கு வந்தான். லேட்டானதால் அவனை அவர் 10 முறை கிரௌண்டைச் சுற்றிவரும்படி தண்டனை கொடுத்தார். சாதரணமாக 2 முறைதான். அவன் ஓடச்செல்வதுபோல வீட்டுக்குச் சென்றுவிட்டான்.
பின்னாளில் ஒரு முக்கியமான கிரிக்கெட் மேட்சைக் கண்டுகொண்டிருந்தான் நண்பர்களுடன். ஒரு டீமில் ஒரு பிளேயர் வரவில்லை. வெளியே உட்கார்ந்
த அவனை சும்மா பில்டிங்குக்கு மட்டும் என்று அழைத்தனர். ஏனெனில் அவன் கிரிக்கெட் மட்டையைக்கூட அதற்குமுன் பார்த்திருக்கவில்லை. இப்பொழுதுதான் வேடிக்கை ஆரம்பமானது. அவன் மிக நன்றாக பில்டிங் செய்து நல்ல பெயர் வாங்கிவிட்டான் முதல் பாதியில். அடுத்து பேட்டிங் ஆரம்பமாயிற்று. மொத்தம் வெற்றிக்கு 80 ரன்கள் எடுக்கவேண்டும். பந்தயம் 12 கடலைமிட்டாய் பாக்கெட்டுகள். ஒன்பதுபேர்கள் அவுட்டாகி வெளியேறிவிட்டனர். ஸ்கோர் 35. ஒருவன் திவங்கிக்கொண்டு நின்று இருந்தான். அவன் அவனுக்கு எப்படி விளையாடவேண்டும் என்று அறிவுரை வேறு  கொடுத்து நின்றான். அதாவது சும்மா மட்டைபோட்டுக் கொண்டிருக்குமாறு அவனைக் கூறினான். இன்னும் 45 ரன்கள் வெற்றிக்குத் தேவையை இருந்தது.
எல்லோரும் புதியவர்கள் அவனுக்கு. இருந்தும் எந்த பயமும் எதிலும் யாரிடமும் இருந்ததில்லை அவனுக்கு.
ஹாக்கியில் பந்து தரையோடு வரும், இதில் குதித்து வருகிறது அவ்வளவுதானே வித்தியாசம் என்று நினைத்து பந்தின்மேல் மட்டும் கவனமாய் குறிவைத்தான்.
அவன் வாழ்க்கையின் முதல்பந்து. அதுஒரு short பிட்ச் ஆனா பந்து. கண்களுக்கு அழகாகத் தெரிந்தது.
ஒரே சுற்று பந்து square லெக்கில் நான்கு ரன்கள். பௌண்டரி என்பதினைக்கூட அப்பொழுதுதான் அவனுக்குத் தெரிந்தது.
அடுத்த பந்தை இப்பொழுது முழுவேகத்தில் அடித்தான். அதுவும் நான்கு, லாங்கானில்.
இப்படியாக பந்தைச் சிதைத்து, எதிராளிகளையும் துவைத்து, பார்ப்பவர்களையும் திகைக்கவைத்து,  அவனை சேர்த்துக்கொண்ட நண்பர்களையும் கொண்டாடவைத்து, 45 ரன்களையும் எடுத்து அவுட்டாகாமல், 6 கடலைமிட்டாய் பாக்கெட்டுகளைப் பரிசாகப் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்தான்.
இதுதான் அவனின் கிரிக்கெட் வாழ்க்கையின் துவக்கம்.

Thursday, 16 August 2012

தியானத்தின் அடிப்படை

மனித உடலில் ரத்த வெள்ளையணுக்கள் முக்கிய இடம்பெறுகின்றன. தியானத்தின் மையமே அவைகள்தான். முக்கியமாக 23 சுரப்பிகளுக்கும் அதனதன் திரவங்களை தயார் செய்வதற்கு உதவுகின்றன.
சாதரணமாக லௌகீக வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள், அதாவது வாரம் இருமுறை செக்ஸ் வைத்துக்கொள்பவர்களுக்கு உடலின் ரத்தத்தின் வெள்ளையணுக்களின் அளவு 20 % மட்டுமே இருக்கும். இதனால் அவர்களின் ஆன்மா ( காந்தக்களம் ) அளவும் குறைவாகவே இருக்கும். இந்தநிலையில் தியானம் மருவாது. வெள்ளையணுக்கள் கிருமிகளுடன் போராடுவதும், எலும்பை திடப்படுத்துதல், செமன், நாத உற்பத்தி, இதுபோன்றவைகளுக்கு உதவுகின்றன.
48 நாட்களுக்கு செக்ஸ் விரதம் இருக்கும் பொழுது, விந்து, நாதம் வெளியேற்றம் இல்லாததால் வெள்ளையணுக்கள் உடலில் 100 % அளவுக்கு நிறைந்திருக்கும். ( பின்னர் 15 நாட்களுக்கொருமுறை செக்ஸ் வைத்துக்கொள்ளலாம்.)
ஒவ்வொரு சுரப்பிகளிலும் +ve, -ve, காந்த முனைகள் இருக்கும். அதாவது அர்த்தநாரீஸ்வர் பிரிவு நடுச்சுவரின் முனைகள். சுரப்பிகள் முழுவதும் நிறைந்திருந்தால் மட்டுமே அவைகள் ஒரு காந்தக் களத்தை அங்கே உருவாக்கி இன்ப அதிர்வுகளை கொடுக்கமுடியும்.
அந்த நிலையில் மட்டுமே தியானமாக அந்த அதிர்வுகள் மாற்றம்பெற வழியேற்படும். அந்த இன்ப அதிர்வுகளை ஸ்திரமாக நிலைபெறச் செய்வதே தியானம்.

 

கடவுள் ஒரு கல் - 3

இப்படியாக ஒரேயொரு ஏலக்ட்ரோனைக் கொண்டு அமைக்கப்பட்ட அணு - மூலங்களின் கட்டிடம், ஆண் என்று கொள்ளப்பட்டது. ப்ரோடான் பெண் எனக் கொள்ளப்பட்டது.
23 சுரப்பிகளின் மூலமாக அவன் முழுமையடைந்தான். அவனுக்குள் சேமிக்கப்பட்ட தனித்தனி எலக்ட்ரோன்களை ஒவ்வொன்றாக அவனின் 23 குரோமோசோம்களால் அதனுள் நிரப்பி சிறு அணு-மூலக்கூறு, அதாவது விந்துக்களைக் கோடிக்கணக்கில் உருவாக்கத் துவங்கினான்.
அதுபோல பெண், ப்ரோடான்ஐக் கொண்டு முட்டைகளை உருவாக்கினாள்.
இப்பொழுது ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். 23 குரோமோசோம்கள் என்பது, 23 சுரப்பிகள். அவைதான் மனிதனின் அங்கங்கள் எல்லாம் எப்படியெப்படி அமையவேண்டும், என்பதினை சுருக்கி முடிந்துவைத்து முடிவு செய்கின்றன. வழிநடத்துகின்றன.
இவற்றில் 7 சுரப்பிகள் முக்கியமானவை. 7 சக்கராக்கள் என்று சொல்லப்படுகின்றன. அவற்றில் சகஸ்ராரம், ஆக்னை, விசுத்தி, இவை தெய்வ சக்ராக்கள்.
அனாகாதா சக்ரா மட்டும் ஆவிநிலை.
மற்ற மணிப்புரா, ஸ்வாதிஷ்டானம், மூலாதாரம் இவைகள் மனித உடல் சக்ராக்கள்.
பிறக்கும் நிலையில் சகஸ்ராரம் சுரப்பி நிறைந்திருக்கும். அது கிருஷ்ணாவின் சக்ரா.
குழந்தை வளர்ந்து ஒவ்வொரு சுரப்பியாக நிரம்பி முடிந்து, மூலாதாரம் நிரம்பும்போழுது மனிதன் வயதுக்குவந்து முழுமையாகி தன்னின் வடிவமாக்க வல்ல விந்துவினையோ, முட்டையினையோ உற்பத்திசெய்யத் துவங்குகிறான்/ள்.
இதன்பின் பிறப்பு பற்றின அனைத்து படித்திருப்போம். சிற்றின்பம்.
இனி தியானம்,பேரின்பம் பற்றி.
விந்துக்களோ, நாதமோ மூலாதாரத்தில் ( ஒரு கலவிக்குப்பின் ) முழுமையாய் நிரம்ப ஒரு மண்டலம், 48 நாட்கள் ஆகின்றன. இதுதான் தியானத்திற்கு மிகமுக்கியம். அதாவது நம்மின் எல்லா 23 சுரப்பிகளும் அதனதன் திரவங்களால் இப்பொழுது இந்த 48 நாட்களில் நிரப்பப்பட்டிருக்கும். ஆன்மா என்கிற ஆரா பெரிதாகியிருக்கும்.
இப்பொழுது தியானங்கள் பலவகைகளில் உங்களில் நிகழ்ந்துவிடலாம்.
நல்ல இசையை கேட்கும்பொழுது, இயற்கை அழகை ரசிக்கும்போழுது, விளையாடும்பொழுது, கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கும்பொழுது ஒரு நடனத்தில் இப்படி, ஐம்புலன்களில் ஏதாவதொன்றில் நீங்கள் ஐக்கியம் ஆகிவிடும்பொழுது அது நிகழலாம்.
வெள்ளை ரத்தம் அழிவில்லாததால் அது உங்களின் ஆன்ம எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும்.
உங்கள் பாதியைக் கண்டுகொண்ட, அதாவது ஆதியில் நீங்கள் இறைச்சக்தியிலிருந்து ஏலேக்ட்ரோனாகவும் ப்ரோடோனாகவும் பிரியும்பொழுது உங்களிலிருந்து பிரிந்துசென்ற
காதலனை ( அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்த ஆணை ) உங்களருகில் இருப்பதைப் போல கற்பனை செய்துகொள்ளுங்கள். அவன் உங்களுடன் ஊடலில், உடலுறவில் திளைத்திருப்பதாய் நினைத்துக்கொள்ளுங்கள். உடலின் அத்தனை திசுக்களும் அசைவற்று இறந்தநிலையில் கிடக்கட்டும். இப்பொழுது உங்களின் உடலிலுள்ள அணுக்களத்தனையும் இன்ப அதிர்வுகளால் துடிக்கும். அதை உடல் முழுவதும் பரவவிட்டு அனுபவிக்கவிடுங்கள். மெதுவாக கற்பனையில் உங்கள் காதலனுடன் அவன்மேலேறி அவன் ஆன்மாவுடன் உங்கள் ஆன்மா ஒருமித்துக் கலப்பதுபோல் கொள்ளுங்கள். இப்பொழுது உங்களின் ப்ரோடோனின் ஆன்மா, காதலனின் ஏலேக்ட்ரோனின் ஆன்மாவில் ஐக்கியமாகி, ஆதிநிலையின் அளவில்லா இன்பம் உங்கள்மீது பரவிநிற்கும். முடிவில்லாத அந்த இன்பத்தை அசையாமல் அள்ளியள்ளிப் பருகுங்கள். இதுதான் இறைவனுடன் கலந்துகிடக்க இருக்கும் முயற்சி. நம் வாழ்வின் இலக்கு, லட்சியம், குறிக்கோள் எல்லாம்.
தியானத்தை விளக்க எடுத்துக்கொண்ட ஒரு முயற்சியே இது. முழுமையாய் உணரவைக்க முயன்றிருக்கிறேன். முடியவில்லை. திருப்தியுமில்லை.

Tuesday, 14 August 2012

கடவுள் ஒரு கல் - 2

பிரபஞ்சம் இப்படியாக ப்ரோடான், எலேக்ட்ரோன், நியுட்ரான் இவைகளால் நிரப்பப்பட்டு, பின் சிலபல, ஒழுங்கினுள் வந்து அணுவாகி, பின் இரசாயன மூலங்களாகின்றன.
இறைத்தன்மையிலிருந்து ( அர்த்தநாரீஸ்வரர் ) பிரிந்தவற்றுள் அணுவாக மாற்றம்பெறாமல் தனித்தனியே பறந்து கிடக்கும் ஏலேக்ட்ரோனும் ப்ரோடானும் மட்டுமே உயிர் உற்பத்திக்கு பெரும் பங்காற்றுகின்றன.
எலேக்ட்ரோன் -ve காந்தத்துகள். ஆண் சக்தி, சிவம். துடிப்புடன் விண்ணில் பரவிக்கிடப்பது. இது தன்னைப் பாதிக்கும் வெளிக்காந்த சக்தியினைக் கொண்டு அணுக்களால் ஒரு கட்டுமானம் அமைக்கிறது. இதுவே X க்ரோமோசோம்.
விந்துசக்தி, X க்ரோமோசோம் ஒன்றையும் Y க்ரோமோசோம் ஒன்றையும் தாங்கிநிற்கிறது.
ப்ரோடான் +ve காந்தத்துகள். பெண் சக்தி. சவமாக கிடப்பது. அணுக்களின் கட்டுமானத்தால் Y க்ரோமோசோம் ஆகிறது.
நாதசக்தி, 2 - Y க்ரோமோசோம்களை தாங்கிநிற்கிறது.
விண்ணில் மிதந்து கிடக்கும் ஒரேயொரு தனி எலேக்ட்ரோன் தன்னைத்தானே அணுக்களாலும் இராசாயன மூலங்களாலும் இறைக்காந்த உதவியுடன் உரு அமையபெற்று ஒரு ஆணுயிராய் அவதரிக்கிறது.
அதுபோல ப்ரோட்டன்கள் ஒரு பெண்ணுயிராய் அவதரிக்கிறது.
( விண்ணில் கோடானுகோடி பிரிந்த எல்க்ட்ரோனும் ப்ரோடோனும் பரவி இருக்கின்றன.)
ஆதியில் பிரியும்பொழுது உண்டான எல்க்ட்ரோனும், ப்ரோடோனும் சரியாக ஒன்றுடன் ஒன்று இணையும்போழுதே ஜென்ம முடிவு நிகழ்கிறது.
அதுவே நம்மின் உண்மையான பாதி.
மற்ற பாதிகளுடன் இணையும்பொழுது பலபல ஜென்மங்கள் உருவாகி ஈடேருகின்றன.
உண்மையான நம் பாதியைக் கண்டுகொண்டு ஆத்மார்த்தமாக இணையும்பொழுது ஜென்மமுடிவு ஏற்பட்டு, இறைவனுடன் ஐக்கியமாகிவிடுகிறோம்.
இதுவே மறுபடியும் இறைவனை ஐக்கியமாகிக் கலக்கமுடியும் வரம்.

ஒரு ஆண்மகனிடம் அணுக்களின் மூலங்களைத் தவிர ஒரேயொரு ஏலேக்ட்ரோனை மட்டுமே அதிகமாகப் பெற்றிருப்பான். அந்த ஒரேயொரு எலேக்ட்ரோன்தான் அவனின் அடிப்படை ஆன்மா. அவனுக்கு ஆண்தன்மையினைக் கொடுத்துநிற்பது.
அதுபோல பெண்ணுக்கு ஒரேயொரு ப்ரோடான்.
வேறெந்த வகையிலும் எந்த ஒரு வித்தியாசமும் உடல் கட்டமைப்பில் கிடையாது.
எல்லா வகை உயிரினங்களுக்கும் இது பொருந்தும்.


Saturday, 11 August 2012

கடவுள் ஒரு கல்

ஆகாயம், ஆண்டவன், பரம்பொருள், பாற்கடல், ஆதிமூலம், அமுதம், கிருஷ்ணா, மகாசிவம், நிர்வாணா, வெற்றுவெளி, வெளி, ஒன்றுமில்லாமை. கற்பனையில் அளவிடமுடியாதது, வரைமுறையற்றது, எங்கும் பரவியிருப்பது, அளப்பறிய உள்வாங்கும் மின்காந்த சக்தியைக் கொண்டிருப்பது, எதிலும் அடங்காதது, இப்படியெல்லாம் அதைப் புரிந்துகொள்ளலாம்.
அது தன்மாற்றம் பெற்றபின் பிரபஞ்சம், (நஞ்சு, அமுதம்,) தோன்றியது.
அது தன்னுள், எலெக்ட்ரான்கள், ப்ரோட்டான்கள், நியுட்ரான்கள் இவைகளாகப் பிரிந்து முழுவதுமாய் நிரப்பிக்கொண்டு ஒரு எல்லைக்குள் மிதக்கவிட்டிருக்கின்றன.
அதாவது ஒரு இலையினில் ஒரு கூட்டுப்புழு தொங்கிநிற்பதுபோல். இங்கு இலை ஆகாயம். கூட்டுப்புழு பிரபஞ்சம்.
இணைக்கும் நுனி கேது.
அதனின் மையம் ராகு. (கேது-ராகு : பாம்பு, அதாவது அதுபோன்ற அமைப்பு)
எலெக்ட்ரான் - ஷிவம்.
ப்ரோடான் - ஷக்தி.
நியுட்ரான் - விஷ்ணு.
ஆக நம் பிரபஞ்சம் இப்படியான அடிப்படைச் சக்தியினாலேயே அமையப் பெற்றிருக்கின்றது.
இவற்றிலிருந்தே உலகின் அனைத்தும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
எலெக்ட்ரான், ப்ரோட்டான், நியுட்ரான், இவைகளின் தன்மாற்றக் காந்தச் சுழற்சி ஒழுங்கினால் அணு உருவானது.
அணுக்கள் இணைந்து ரசாயன மூலங்கள் தோன்றின.
ரசாயன மூலங்கள் இணைந்து கிரகங்கள் ஆயின.
உலகில் தற்பொழுது காணும் பொருட்கள், கல்  அனைத்திற்கும் இதுவே மூலம்.
உயிர் உருவானதற்கும் ஆதாரம் இதுவே. 
பிள்ளையார் - எல்லா ஐந்தறிவு வரையிலான உயிரினங்கள்.
முருகன் - ஆறறிவுள்ள மனிதன்.
இவ்வளவுதான் இந்துமதம்.

Friday, 10 August 2012

hallo mr. manushyaputthiran sir, listen...

"புனித முகமூடிகள்" என்று அழகாக வர்ணித்து எழுதிவிட்டீர்கள் என்பதற்காக நீங்கள் கூறுவதையெல்லாம் ஏற்கமுடியாது. இந்திய நாட்டின் நிலையறியாமல், லட்சணம் புரியாமல் உங்கள் இஷ்டத்திற்கு எழுதிவிட்டீர்கள்.
வருமான வரி வரம்பு 2 லட்சம். சென்னையில் ஒரு சராசரியான வீட்டின் வாடகை, 12000 . மீதியிலும் நீங்கள் வாழ்வதற்காக உள்ள பணத்திற்கே வரி கட்டித்தான் நிற்கவேண்டும். கிராமத்துமக்களும் நகரத்தில் வாழும் ஏழைகளும் மாதம் 2000 ல் கூட வாழ்கின்றனர். அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர எந்த அரசியலும் உதவிடவில்லை. ஒரு பெட்டிக்கடை வைத்திருப்பவனே தினமும் மாமூல் கொடுத்துத்தான் வாழவேண்டியதிருக்கிறது. அதுபோலவே எல்லா வியாபார நிறுவனங்களும் தங்களின் தொழில் அளவைப்பொறுத்து லஞ்சம் தரவேண்டியதிருக்கிறது. விரும்பிக்கொடுப்பதில்லை.
நம் நாட்டில் இருக்கும் அத்தனைத் தவறுகளுக்கும் அடிப்படையே லஞ்சமும் மாமூலும்தான். மற்ற அத்தனை பிரச்சனைகளும் அதிலிருந்து விளைந்த பாதிப்புகள்மட்டுமே. ஆகவே ஊழலையும் லஞ்சத்தினையும் ஒழித்தாலே தலையாயக் கடமை.
ஊழல் செய்யும், எந்த அரசியவாதிக்கும், அரசு ஊழியர்க்கும் தண்டனை என்பதே இல்லை.
இப்பொழுது நம் நாட்டின் சிறந்த வியாபாரமே அரசியலும், அரசாங்க உத்தியோகமும்தான் என்றாகிவிட்டது. அதிகாரம், ஊழல் பணத்திற்கு எந்தவரியுமில்லாமை, வழக்கு என்று வந்தால் கோர்டில் கேஸ் முடிய 10 வருடங்கள் என்ற கால தாமதம், ரௌடிகளை வளர்ப்பது, இப்படி எல்லா அடிப்படை தன்மைகளையும் தங்களுக்குள் வைத்திருக்கிறார்கள். ஏன்? எந்த தண்டனையும் இல்லை. மக்களால் ஒட்டுமட்டுமே போடமுடியும். அடுத்த 5 வருடத்தின் பட்டா அது. கேட்கமுடியாது.
நீங்கள் ஒரு வருடம் வரிகட்டாமல் இருந்துவிடுங்கள் பார்ப்போம், அறுத்து எறிந்துவிடுவார்கள்.
சாலை வரி கட்டுகிறோம், பின்னர் ஹைவேஸ் சாலைகளுக்கு டோல் கலெக்ஷன் வேறு. கேட்க நாதியில்லை இந்த நாட்டில்.
உண்மையைச் சொல்லப்போனால், நாட்டு மக்கள் தங்கள்தங்கள் பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்கள். அரசாங்கமும் அரசாங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் முற்றிலும் மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல், வெவ்வேறு பாதைகளில் சென்று மொத்த பணத்தையும் சுருட்டி வெளிநாடுகளில் பதுக்கிவிடுகிறார்கள்.
ஊழல் நாட்டில் அளவுகடந்து சென்றுகொண்டிருக்கிறது. நம் போன்ற தனி மனிதனாலோ, குழுக்களாலோ எதுமே தட்டிக்கேட்க முடிவதில்லை. சோ போன்ற நல்ல பெரியமனிதர்கள், நொட்டை சொல்வதற்கு மட்டுமே பயன்படுகிறார்கள். எதனினையும் துவக்கி, முடித்துவிடும் தைரியம், துணிவு இல்லை.
அரசியல் வியாபாரமாக மாறிக்கொண்டிருக்கிறது. வைக்கோ போன்றோர், மனித உரிமை பற்றின விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நிற்கின்றார்கள்.
ஒரு ஊழலை ஒழித்திடத் துவங்கிநிற்கும் புரட்சியாளர்களாய் அண்ணா ஹசாரே திகழ்கிறார். அவரின் பாதையில் சிலபல தடைகளும் தவறுகளும் இருக்கலாம். அடிப்படையினை மட்டுமே கருத்தில் கொள்ளவேண்டும். அவருடைய இந்த போராட்டம் வெற்றியடைந்தால் மக்களுக்கே நன்மை.
வலிய தண்டனை என்ற ஒரு சட்டத்தினைத்தவிர ஊழலினை குறைத்திட வழியில்லை.
கலாம் சொல்லியதுபோல, பிள்ளைகள் ஊழல்வாதித் தந்தைகளைத் திருத்திடவேண்டும் என்பனவற்றுக்கு நடைமுறை சாத்தியங்கள் இல்லை.
ஆகவே அண்ணா ஹசாரேயினை, நல்ல இந்தியாவினை அமைக்க விரும்பும் நெஞ்சங்கள் வாழ்த்தி தங்களால் முடிந்த ஆதரவினைத் தரவேண்டும்.
நான் லஞ்சமும் மாமூலும் கொடுத்திருக்கின்றேன் என்பதற்காக நான் லஞ்சம் வாங்கிநிற்கும் அரசியல்வாதிகளையும் அரசு அதிகாரிகளையும் ஒன்றும் கேட்கக்கூடாது என்பது சரியல்ல.
இப்படித்தான் காங்கிரஸ் மக்களைக் குழப்புகிறது.
தெருவில் நிற்கும் ஆயிரம் பேருக்காகவேல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்கிறது அமைச்சர்கள் கபினெட்.
அவர்கள் என்ன நூறு கோடிமக்களும் தெருவுக்கு வந்து போராடவேண்டும் என்று நினைக்கிறார்களா? எதற்குமே ஒரு துவக்கம் வேண்டும் என்பதினை புரிந்துகொள்ளுங்கள் நண்பரே. நீங்களும் நொட்டை சொல்லி நிற்கவேண்டாம் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

என்ன நடந்திருக்கிறது இதுவரை?

அண்ணா ஊழலை ஒழிக்க போராடத்துவங்கினார். அவரையும் அவரது ஆதரவாளர்களையும் அவதூறுகள் சொல்லி அடக்க முயன்றது அரசு.
அரசு எந்திரத்தின் சக்திகளை அதற்காக உபயோகித்தது.
அளவுக்கதிகமாக காலம் தாழ்த்தியது.
பின்னர் சமரசமானது மாதிரி காட்டிக்கொண்டு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
பின்னர் தெருவில் நின்று போராடிநிற்க்கும் ஆயிரம் பேர்களுக்காகவேல்லாம் சட்டம் போடமுடியாது, எங்களை ஆட்சிக்கு அனுப்பிய நூறு கொடிமக்களைக் கருத்தில் கொண்டுமட்டும் முடிவுசெய்வோம் என்றது.
இப்படியாக அரசு கடுப்பேற்றிமுடித்து iac குழுவினை ஆத்திரமூட்டி மக்களிடமிருந்து அந்நியப்படுத்த முயன்றது.
இப்பொழுது அண்ணாவின் செயல்பாடுகளை மட்டுமே மக்களை சிந்திக்கவைத்து, கொள்கைகளை மக்களிடமிருந்து மறக்கடித்திருக்கிறது.
இதற்கு மனிஷ்யபுத்திரன், சோ போன்ற அறிவு ஜீவிகளும் ஜால்ரா தட்டி நிற்கிறார்கள்.
இப்பொழுது மக்கள்மனதில் குழப்பத்தினை ஏற்படுத்தி வெற்றியடைந்தார்கள் அரசியல்வாதிகள்.
அண்ணா ஹசாரே நல்லவரா? செயல்த் திறமையுடையவரா? குழப்பவாதியா என்பதுபோன்ற அரட்டையரங்கம் நடந்து கொண்டிருக்கிறது. கொள்கையினை மறக்கடித்தேவிட்டனர் செய்திச் சேனல்கள்.
ஊழல்களைஎல்லாம் செய்துவிட்டு, அவை வெளியில் தெரிந்தபின்னும் ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும், காந்தி உருவாக்கின ஒரு தேசியக்கட்சிக்கு, இதைவிடவும் ஒரு அவமானத்தினைத் இருந்துவிடமுடியாது.
கொள்ளைக்குக் கொள்ளையும் அடித்து அரசு எந்திரங்களை துஷ்ப்ரயோகம் செய்து மக்களைக் குழப்பும் காங்கிரஸ் அடுத்த தேர்தலில் சவுக்கடி படாமல் தப்பமுடியாது.
ஒன்றுமட்டும் நிச்சயம், இதுபோன்ற ஒரு துவக்கம் இனி வரப்போவதில்லை. இப்பொழுது இல்லைஎன்றால் எப்பொழுதும் நம்மால் முடியாமல் போய்விடும். எல்லாவற்றையும் சரிசெய்திட உதவுங்கள். குழம்பிவிடாதீர்கள்.

Thursday, 9 August 2012

இரண்டாம் சுதந்திரப்போர்


எல்லோரும் என்ன நினைக்கிறார்கள், அன்ன ஹசாரேயையும் ராம்தேவையும் பற்றி?
அவர்கள் குழப்பவாதிகள், ஸ்திரமான முடிவு எடுக்கமுடியாததினால் அரசியல்வாதிகளை கேள்வி கேட்க யோக்கியதை இல்லை என்று.
ராம்தேவ் தொழிலில் கோடிகளை சம்பாதித்திருக்கிறார், அதனால் அவரும் எதுவும் பேசிவிடக்கூடாது என்று. முதலில் தொழில் செய்து சம்பாதிப்பது தவறில்லை. மற்றும் இவ்வளவு நாட்கள் வாயை மூடியிருந்துவிட்டு இப்பொழுது அவர் கேள்வி கேட்கிறார் என்பதற்காக அவரை அவதூறாக பேசிவிட அவசியமில்லை.
இவர்களைப்போன்றவர்கள்கூட முன்னிற்கவில்லை என்றால் நம் கதி என்ன? கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு 5 வருடப்பட்டா கொடுத்திருக்கிறோம். நான் இங்கு நாட்டுக்கு நன்மை செய்துநிற்கும் அரசியல்வாதிகளைப் பற்றி சொல்லவில்லை. கொள்ளையடிக்கும் ஜென்மங்களைப்பற்றி சொல்கிறேன். தவறு செய்யும் அமைச்சர்கள் பதவிவிலகுவதில்லை.
இன்னும் இரண்டு வருடங்கள் அவர்களுக்கு சம்பாத்திய வாய்ப்புகள் இருக்கின்றன. கூட்டணிக்கட்சிகளும் சரியான முறையில் ஜால்ரா அடிக்க அவர்களுக்கும் பங்கு கிடைக்கிறது. வெளியிலிருந்து எந்த நாய் எப்படிப்பேசினால் என்ன என்றே நினைக்கிறார்கள். 5 வருடங்கள் அவர்களை அசைக்கமுடியாது. எல்லாம் கூட்டாக நடக்கும் கொள்ளை. வாயை மூடிக்கொண்டு மக்களுக்குள் கருத்து வேறுபாடுகளைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்
நினைத்துப்பாருங்கள் ஒவ்வொரு முறையும் அவர்கள் யாருடன் போராட்டம் செய்பவர்களை ஒப்பிடப்படுகிறார்கள் என்று. காந்தியுடன். உண்மையிலேயே காந்தி உயிரோடிருந்து, இப்பொழுது ஏதாவது உண்ணாவிரதம் என்று துவங்கியிருந்தால் என்ன கதியாகி இருப்பார் என்று கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். முதலில் அவரை உள்ளே தள்ள என்ன வழி என்றுதான் சிந்தித்திருப்பார்கள். அவருக்கும் வருமானவரி நோட்டீஸ் போயிருக்கும்.
அடுத்து ஞாயம் கேட்டுப் போராடும் அவர்களை காந்தியளவுக்கு நேர்மையாய் இருந்தால் மட்டும்தான் அவர்கள் கேள்வி கேட்க வேண்டுமா? மற்றவர்கள் எவரும் கேள்வி கேட்கக்கூடாதா?
ஓட்டுப்போட்டுவிட்டு வாயையும் விரையும் பொத்திக்கொண்டு எல்லாவனும் கொல்லையடிப்பதைப் பார்த்து நிற்கவேண்டுமா?
நன்றாக யோசியுங்கள், இப்படி ஒரு போராட்டம் துவங்காமல் இருந்திருந்தால் நாளைய நம் இந்தியாவின் நிலை என்ன? இங்குள்ள ஏழை மக்களின் கதி என்ன? நேர்மையானவர்கள் என்று உறுதிப்படுத்தினால் மட்டுமே இந்த கொள்ளையர்களை கேள்வி கேட்க முடியுமா என்ன?
முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார்களாம் அவர்கள், அதனால் நம்பமுடியவில்லையாம்.
அப்படியானால் கொள்ளையர்களை நம்புவீர்கள் இவர்களை நம்பமுடியாதா?
புதிதாக ஒரு இயக்கம் வரும்பொழுது இப்படித்தான் கருத்து முரண்பாடுகளும் குழப்பங்களும் உருவாகிவிடும். அதையெல்லாம் வென்று கடந்து வர நாம் முனையவேண்டும். அதைவிடுத்து நொட்டை சொல்லி மக்களை திசைதிருப்ப முயலவேண்டாம்.
100 % யோக்கியத்தனமாய் உள்ளவன்தான் கேள்வி கேட்கவேண்டுமெனில் யார் கேள்வி கேட்பது. மறுபடியும் காந்தியைத்தான் பிறப்புவித்து கொண்டுவரவேண்டும்.

Monday, 30 July 2012

அய்யாப்பா என்ற தனிப்பிறவி

அவரின் வாழ்க்கையின் இந்த ஒரு நிலையினை இன்றுவரை என்னால் கற்பனை செய்துகூட பார்க்கமுடிந்ததில்லை.
ஒரு ஏழை தன் வாழ்க்கையில் பணக்காரன் ஆகி மறுபடியும் ஏழ்மைக்கு தாழ்ந்துவிடலாம். அது ஒரு பிரச்சனையுமில்லை. ஆனால் ராஜவாழ்க்கை வாழ்ந்தவன் ஒருவன் ஏழ்மையினை சுவைத்திடல் கூடாது. அது கொடுமை.
கொஞ்சமாவது நினைத்துப்பாருங்கள், பள்ளி செல்ல குதிரைபூட்டிய சாரட் வண்டிதான், தினமும் பட்டுச் சொக்காய்தான், இப்படியொரு ஆர்ப்பாட்டமான ராஜவாழ்க்கை 13 வயதில். அதாவது ரெண்டுங்கெட்டான் வயது. அப்பொழுது ஒருநாள் அவரின் அம்மா (பச்சையாத்தா) சொன்னாள், நாம் நாளையிலிருந்து வேறு வீட்டுக்கு சென்றுவிடவேண்டும் மற்றும் இனி பள்ளிக்கு நடந்துதான் செல்லவேண்டும்.
எப்படி இருந்திருக்கும் அந்தவயதில் அவனுக்கு. முந்தின நாள் ராஜா, மறுநாள், இன்று ஆண்டி. அதன்பின் அவரின் மனம், 80 வயதுவரை அதனினால் ஏற்பட்ட வடுவினை மறக்கத்தயாரில்லை.
இப்படியான என் அய்யாப்பாவின் வாழ்வு, எந்த எதிரிக்கும்கூட அமைந்துவிடக்கூடாது என்பது என் பிரார்த்தனை.
45 வது வயதில் வந்த நோயினால் இறந்துவிடுவோமோ என்ற அஞ்சியேதான் தன் மூத்தமகனுக்கு திருமணம் முடித்துவைத்தார்.
யாரிடமும் தேவையில்லாமல் பேசமாட்டார். முகம், பார்க்க சிடுமூஞ்சி போல தோன்றும், கோபம் விடுக்கென்று கொப்பளிக்கும். ஆனாலும் ஆழ்மனத்தில் அவர் ஒரு ஏக்கமுள்ள அமைதிமனிதன், குழந்தை. என் அய்யாம்மாவுக்கு அது தெரிந்தேயிருந்தது.
காலை 4 மணிக்கே விழுத்துவிடுவார். பலசரக்குக் கடைக்கு சென்றுவிடுவார். வீட்டிலிருக்கும் சமயம் அவரிருக்கும் இடத்திற்கு அவர் முன் யாரும் நின்றதில்லை. அவர் அடிமைபோல் இருந்தது அவரின் 2 ஆம் மகனிடம் மட்டும்தான். நேர்மை, சொன்னசொல் மாறாமை, நேரம் தவறாமை, நடப்புகளை உணரும் தன்மை, இதுதான் அவர். அவரின் ஒரேயொரு முடிவு மட்டுமே எனக்கு ஒப்புதலில்லை (என் தாயின் நகைகளை திருப்பித்தர நகை தருவதற்க்குப்பதில் பணம் கொடுப்பதாக சொன்னார்). அவருக்கும் என் தாயினை எந்த சந்தர்பத்திலும் பிடித்ததில்லை.
என் அய்யாம்மா இறந்ததினை அவரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. என்னிடம் இப்பொழுது மிகவும் அன்புடன் இருப்பார். வெளியே எங்கேயாயினும் செல்லவிரும்பினால் என்னையே அழைத்துச் செல்வார்.
நல்ல முருக பக்தர். திருச்செந்தூருக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை செல்லவில்லைஎன்றால், மனம் இருப்புக்கொள்ளமாட்டார். விடியலில் புறப்பட்டுச் சென்றவுடன் ஒரு சிங்கிள் ரூம் போடுவார். பேரனுக்குக் கடலில் குளிக்க மிகவும் பிடிக்கும் என்பதால் கடலில் குளிப்பார். அவன் மூன்று மணிநேரம் கடலில் ஆட்டம்போடுவதை தூரத்தில் இருக்கும் ஒரு திண்டில் அமர்ந்து கண்கொட்டாமல் ரசிப்பார். பின்னர் அருமையான இறைதரிசனம் முடித்து திவ்வியமாக இரண்டு இட்டிலி உண்பார். இப்படியே மறுநாளும் தொடரும். இப்படி ஒரு 15 முறையாவது அவருடன் அவன் சென்றிருப்பான்.
சிலநேரம் வீட்டில் திடீரென்று அவனைக்கத்தி அழைப்பார். தன் வாழ்க்கையின் சிறந்த, இன்பமான, விரும்பிய நினைவுகளை அவனிடம் சொல்லி ஆணந்திபார். இப்பொழுது சிலநேரங்களில் சிறுகுழந்தையினைப்போல அழவும் செய்வார். விளக்கம் சொல்லமாட்டார். வீட்டிற்குள் என் அல்லது பாலனின் கையைப் பிடித்துக்கொண்டுதான் நடப்பார். பின்னர் ஒருநாள் தானாக பாத்ரூம் சென்று கீழே விழுந்துவிட்டார். கால் முறிந்துவிட்டது. நடக்கமுடியவில்லை. பகலில் பாலன் பணிவிடை செய்வான். இரவில் நான். மற்றவைகளுக்கு அம்மா.
அவர் தன் பழைய வாழ்க்கையில் இனிப்பு என்ற ஒரு சுவையை அறிந்திருக்கவில்லை. காப்பிக்குகூட கசப்பாய்த்தான் சாப்பிடுவார். ஒருநாள் இரவு 2 மணிக்கு மிட்டாய் வேண்டுமென்று கேட்டார். கொடுக்கப்பட்டது.
ஒவ்வொருநாள் இரவும் இது நடந்தது. திடீரென ஒருநாள் படுக்கைப்புண் வந்துவிட்டது. மகன்கள் அதைத்தடுப்பதற்குரிய ஒரு படுக்கையை வாங்கிக்கொடுத்திருக்கலாம். மற்றும் வெளியே அவர் செல்ல ஒரு தள்ளும் சேர் ஏற்பாடு செய்திருக்கலாம். செய்யவில்லை, அப்படியெல்லாம் நினைத்துக்கொண்டிருக்க முடிவதில்லை யாருக்கும். அவரவர் குடும்பம் அவர்களுக்கு. டிவி வந்திருந்த பொழுது அது. டிவி பார்க்கும் ஆசையும் அவருக்கு இருந்தது. தலையைச் சாய்த்துத்திருப்பி கவனிப்பார். கண்ணுக்குத் தெரியாது. அந்த சமயம் அந்தளவுக்கு வசதிவாய்ப்புகள் மகன்களுக்கு இருந்தது. செய்யவில்லை.
டாக்டர் புண் வந்ததால் மிட்டாய் சாப்பிடுவதை நிறுத்தச் சொல்லியிருந்தார். ஓர் இரவு நான் மிட்டாய் கொடுக்கமுடியாது என்று சொல்லி, பின்னர் கொடுத்துவிட்டேன். அதை அவர் குழந்தைகள் அவரைச் சந்திக்க வந்தபொழுதெல்லாம் சொல்லித்தீர்த்தார்.
ஒருநாள் டாக்டர் பல்ஸ் குறைந்ததை உணர்ந்து ஒருநாள் கூட தாங்காது என்றார். அவரை உடனே ஒரு கார் பிடித்து சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர் மகன்கள், அவரின் இறப்பை எதிர்நோக்கி. ஊர் எல்லையைத் தொடும் சமயம் அவர் எழுந்து உட்கார்ந்தேவிட்டார். அவருக்கு இறப்பதற்கு பயம் இருந்ததில்லை. ஆனால் அவருக்கு இறக்க விருப்பமில்லை கடைசிவரை. கொண்டுசென்ற மகன்களுக்கோ கோபம். அது அவர்களின் வார்த்தைகளில் நன்றாகவே வெளிப்பட்டது. தந்தை பிழைத்துவிட்டதில் எந்த மகனுக்கும் சந்தோசமில்லை.
இப்படியொரு வாழ்க்கையும் எவருக்கும் அமைந்துவிடக்கூடாது என்பதுவும் என் விருப்பம்.
அதன் பின் அவர் ஆறு மாதங்கள் வரை இறந்த வாழ்க்கை வாழ்ந்தார். அப்பொழுதும் அவர் எனக்கும் பாலனுக்கும் மட்டுமே நண்பர்களாய் இருந்தார்.
அவர் இறந்த பொழுது, நான் அவரின் அருகினிலில்லை. மாலையில் அவர் ஊருக்குச் சென்றார். மறுநாள் காலையில் ஒரே தலைவலி எனக்கு. இதுநாள்வரை அப்படியொரு தலைவலி எனக்கு வந்ததேயில்லை. ஒரு பதினோரு மணியளவில் பட்டென தலைவலியில்லை. மறைந்துவிட்டிருந்தது. ஆனால் அந்த போன் வந்தது, அவரின் இறந்த செய்தியினை ஏற்றிக்கொண்டு.
மாமனிதர் அவர்.

Wednesday, 18 July 2012

அய்யாம்மா

என் வாழ்க்கையில் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாத விஷயம் இது ஒன்று.
என் சித்தப்பா என் அயாம்மாவின் கடைசிக் குழந்தை. அதாவது எனக்கு ஒரு வயது கம்மி.
என் அய்யாம்மாவுக்கு 12 குழந்தைகள்.
ஒரு மூத்த பேரன் என்று எனக்குக் கிடைக்கவேண்டிய அன்பு என் அய்யாம்மா மற்றும் அப்பாவிடமிருந்து (எங்களூரில், அய்யாவைப்பெற்றவரை அப்பா என்றுதான் அழைப்பார்கள், உண்மையில் அய்யாப்பா) எனக்கு கிடைத்ததேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

என் அய்யாம்மாவும் அப்பாவும் சண்டையிட்டு, கருத்து வேற்றுமையுடன் இருந்து என் வாழ்நாளில் நான் பார்த்ததேயில்லை.
அதுபோல அவர்கள் உறங்கியும் பார்த்ததில்லை.
வீட்டில் நான்கு பசுக்கள், இருபது கோழிகள் ஆறு வான்கோழிகள், அதனால் பால் விற்பனை, முட்டை விற்பனை எல்லாம் நடந்துகொண்டிருக்கும்.
நாங்கள் எங்களூருக்கு கோடைவிடுமுறை இருமாதங்கள் முழுமையாய் சென்று களிப்போம்.
எங்களின் வேலை, கறந்தபாலைக் குடிப்பது, இட்டவுடன் பச்சை முட்டைகளை உடைத்துக் குடிப்பது, இவைகள் முக்கியமாக அடங்கும். ஒருநாள் காலையில் சாப்பிட உட்கார்ந்ததும், முட்டை தோசை வேண்டுமா என்று கேட்டார்கள். மூன்று முட்டை தோசைகள் சாப்பிட்டாயிற்று. வழக்கம் என்னவென்றால் பேத்திகளுக்கு (சித்தியின் வழி தங்கைகள்) முட்டையே கொடுப்பதில்லை. கொடுத்தாலும் ஒன்றேயொன்று மூன்று மாதங்களுக்கொருமுறை. இப்பொழுது பிரச்னை என்னவெனில் அவன் நான்காவது முட்டை கேட்டான். அவர்களால் கொடுக்காமலும் இருக்கமுடியாது, மூத்த பேரனாயிற்றே! கொடுத்தால் சித்தி ஏதும் சொல்லிவிடவும் கூடாது. அடுத்து ஐந்தாவது முட்டையைக் கேட்டபொழுது ஒருமாதிரியான கோபச் சிணுங்கள் சிணுங்கிவிட்டு (சந்தோசம்தான் ஆனாலும் வெளிக்காட்டமுடியாது.) சொன்னார்கள் ஜாடையாக, சித்தியின் காதுகளில் விழும்படியாக, "அவங்க அம்மா நாலு கோழிய கொடுத்துவிட்டிருக்காங்கள்ள அதான். ஒம்பிள்ளைக்கும் ஒரு முட்டைய ஊத்திக்கொடு." என்று.

பம்பரம் சுழல்வதைப் பார்த்திருக்கின்றீர்களா! பட்டாசில் தரைச்சக்கரம், பற்றவைத்துவுடன் சிறிதாகச் சுழலத்துவங்கி பின் அப்படியே மேலே பறந்துசெல்லத் துடிப்பதுபோல் சுழலும். அப்படியாக வேலை செய்வார்கள் என் அய்யாம்மா. அந்தக்காலத்தில் எந்த மிக்சி போன்ற உபகரணங்களும் நடைமுறையில் இருந்ததில்லை.
காலையில் எல்லோருக்கும் எழும்பொழுது காப்பி போட்டுட்டு வைத்துக்கொண்டு காத்திருப்பார், பின் சட்னியரைத்து காலையுணவு தயார் செய்வது, மாடு, கோழிகளைக் கவனிப்பது, மதிய உணவு செய்து முடிப்பது, மாட்டுக்கு பருத்திவிதை புண்ணாக்கு உணவை தாயார் செய்வது, மாவாட்டுவது, மாலை மார்கெட் சென்று காய்கறிகள் வாங்கிவருவது, எல்லோரும் பள்ளிசென்று வந்ததும் அவர்களைக் கவனிப்பது, இதனிடையில் கணவனுக்கு பணிவிடைகள் வேறு, பேரன் பேத்தி மற்றும் தன் குழந்தைகள் எல்லோரையும் கவனித்துக்கொள்வது,
பின் இரவு உணவினை உண்டபின் நாங்கள் சுவர்க்கம் சென்றுவிடுவோம் என்பதால் எங்களின் நாள் முடிந்துவிடும்.
வீட்டின் செலவுகளனைத்தும் பால், தயிர்,முட்டை, விற்கும் வரவுகளிலேயே ஓடிவிடும். மிகவும் சிக்கனமாக வாழ்ந்தவர்கள்.
நம் அம்மாக்கள், அவரின் திறனின் அருகில்கூட நிற்கமுடியாது. படுத்துவிடுவார்கள், பின் ஒருவாரம் ஒன்றுமே வீட்டில் நடக்காதநிலை ஆகிவிடும்.
சமையலிலும் சரியான கில்லாடி. அவர்களின் மண்சட்டி விரால்மீன் மற்றும் கெளுத்திமீன் குழம்புக்கு நான் அடிமை. இப்பொழுது நான் அசைவத்தை நிறுத்திவிட்டிருக்கிறேன், முப்பது வருடங்களாகின்றன.
எல்லோரிடமும் சமமான அன்பு காட்டுவார்கள். எந்த முக்கிய விவகாரங்களிலும் தலையிடமாட்டார்கள்.
ஏனோ யாருக்குமே என் தாயை மட்டும் பிடிக்காமலேயே போய்விட்டது. முகத்திற்கு நேரேயே பேசிவிடுவதாலா? என்று தெரியவில்லை.
சரி அய்யாம்மாவுக்கு வருவோம். என் காசியக்காவின் மரணம், சபரியக்காவின் குழந்தைப்பிறப்பின் பொழுது ஏற்பட்ட மரணம், இவைகளை அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஏன் ஏற்றுக்கொள்ளவே முடியாமல் கடவுளிடம் அரற்றுவார்கள். அதன்பின் கடமைக்கே வாழ்வதுபோல தோன்றியது அவர்களின் வாழ்க்கை.
முதல்முறையாக தன் மகனின் வீட்டிற்கு திருச்சி சென்றிருந்தார்கள்.
ஒருநாள் திருச்சியிலிருந்து சித்தப்பா கூறினார், அய்யாம்மாவுக்கு புற்று என்று. வயிற்றின் பக்கம் உணவுப்பாதையில்.
டாக்டர்களும் உறுதிசொல்லிவிட்டனர். காப்பாற்றுதல் அரிதென்று. என்னென்னவோ முயற்சித்தும் பலனில்லை. ஆறு மாதங்கள் இருப்பார் என்றும் கேடு வைக்கப்பட்டது.
எங்கள் வீட்டில்தான் பின்னர் வாழ்ந்தார். டாக்டர் முன்னெச்சரிக்கையாய் பல விஷயங்கள் சொன்னார். வலியால் நாலு தெருக்கள் கேட்கும்படி கத்துவார்கள் என்றும்.
நாங்கள், எங்கள் படை எப்பொழுதும் அவர்களிடம் பேசும்பொழுது சிறுவயதிலிருந்தே ஜோக்கும் நையாண்டியுமாயே பேசிக்கொண்டிருப்போம். எங்களை ஒவ்வொரு நிமிடங்களிலும் நன்றாக ரசிப்பார்கள். அகத்தின் வலி சிறிதுசிறிதாக முகத்தில் தெரியத்துவங்கியது.
நாங்கள் கல்லூரிநாட்களில் இருந்தபொழுது அது, அவர்களை இந்தசமயம் நெருங்குதலை குறைத்துக்கொண்டிருந்தோம்.
ஒருநாள் அய்யாம்மா என்னிடம் கேட்டார்கள், "செத்துப்போகப் போகிறவள்தானே என்று என்னோடு பேசமாட்டேன் என்றிருக்கின்றாயா?" என்று.
ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன். அதன்பின் அவர்களுடன் மிகுந்த அன்புடன், ஒரு மூத்த பேரன் என்கின்ற வகையில் மிக அருகிலேயே இருந்தேன்.
ஆனாலும் ஒருநாளும் வலியென்று யாரிடமும் சொன்னதேயில்லை. டாக்டரே வியந்து சொன்னார், "என் வாழ்நாளில் இப்படியொரு வைராக்கியமான பெண்ணைக் கண்டதேயில்லை."
இறந்தபின், அவர்களுக்குரிய ஒரு இறந்தநாளில் அவர்களுக்காக செய்யப்பட்ட படையல்களை, படைக்காமல் சென்றுவிட்ட குற்றத்திற்காக, தனக்கு எப்பொழுதுமே பிடிக்காத என் தாயையும் தன்னோடு எடுத்துக்கொண்டார்கள்

Saturday, 14 July 2012

அக்கா என்ற அத்தை

அவனின் வாழ்க்கையில் அவனை மிக அதிகம் பாதித்தவள் அவள்தான்.
அத்தை, அக்காள், அல்லது அம்மா என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால் அத்தை முறைதான் உண்மைநிலை.
அவனின் மூன்று வயதில் என்று நினைக்கிறேன். அப்பொழுது அவளுக்கு 12 வயதிருந்திருக்கும். இன்னும் பசுமையாகவே நினைவுகளின் ஓரத்தில் ஒட்டிக்கிடக்கின்றது இந்த நிகழ்வு.
ஒரு அழகிய குருவிக்குஞ்சு அவனருகில் அமர்ந்திருந்தது. அதற்குப் பறக்க முடியவில்லை.
அப்பொழுது அவள்தான் அந்தக்குஞ்சினை எடுத்து அதன் கூட்டினுள்விட்டாள். மற்றும் அதற்கு தினமும் உணவுவைப்பாள் பறக்கப் பழகுவரை. அது ஒரு இறக்கம் கொள்ளும் தன்மை. அன்பு.
காசிமணி என்பது அவளின் பெயர். பெயருக்கேற்றவாறு ஒரு தெய்வம் அவள்.
என்னின் மானசீகத் தோழி. எங்களுடன்தான் சிலகாலம் வாழ்ந்தாள். உரிமையோடு என் தாயுடன் சண்டையிடுவாள். என் தாய்க்கும் மகளாகவே வாழ்ந்தாள்.
என் 6 வது வயதில் என் பெற்றோர் வெளியூர் சென்றிருந்த ஒருசமயம், நான் அவளின் பொறுப்பில் இருந்த ஒரு நாளில் என்னை அதிகமாகத் திட்டிவிட்டாள். காரணமென்னவென்று ஞாபகமில்லை. நானும் மிகுந்த  கோபத்துடன் அவள் வேலையாய் இருந்த நிமிடம் அடுக்கப்பட்டிருந்த தலையனைக் குவியலினுள் புகுந்த நினைவு மறந்து உறங்கியேவிட்டேன்.
என்னைத் தேடினவள், நான் கோபப்பட்டு வெளியே சென்றுவிட்டேன் என்று எண்ணி கிட்டத்தட்ட ஊர்முழுக்க தேடிநின்றாள். நான் கிடைக்கவில்லை. எப்படிக் கிடைப்பேன், நான்தான் தலையனைக் குவியலினுள் வெளியே தெரியாமல் உறங்கிகிடக்கிறேனே.
ஒரு 2 மணிநேரம் கழித்து நான் விழித்து வெளிவந்தேன். அங்கு என் அக்கா அழுதுகொண்டிருக்கிறாள். அருகில் பக்கத்து வீட்டார்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
என்னைக் கண்டவுடன் வாரியெடுத்து அணைத்துக்கொண்டாள். இப்பொழுது அழுகை இன்னும் தீவிரமாக இருந்துகொண்டிருந்தது.
நான் என்ன நடந்ததென்று புரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். மறக்கவேமுடியாத நிகழ்வாக அது மாறிவிட்டது.
படிப்பு முடிந்தபின் எங்களின் கிராமத்திற்கே சென்றுவிட்டாள் தாத்தாவுடன்.
பின்னர் அவளுக்கு விருப்பமில்லாத ஒரு இடத்தில் திருமணமும் முடித்துவைக்கப்பட்டது. யாரிடமும் கருத்துக்கள் கேட்கவில்லை என் தாத்தா. அந்தக் கணவன் என்னவெல்லாம் என் அக்காவிடம் கேட்டான் என்பதல்ல இந்தக்கதையின் சாராம்சம். கேட்டால் அந்த இறந்துவிட்டவனை தொண்டிஎடுத்துக் கொல்லநினைப்பீர்கள்.
ஒரு உன்னதமான உயர்ந்த அன்பினையும், கரிசனத்தையும் அடிப்படையாக்கி பதியப்பட்டிருக்கின்றது இந்தக்கதை.
புகுந்த வீட்டிலும் இருந்த அனைவரும் (கணவனைத்தவிர) அவளை அன்பாகவே நடத்தியிருந்தார்கள். ஆனாலும் அவளுக்கு வாழ்கை கசந்துவிட்டது.
என் தாயையும் தன் தாயாகவே மதித்துவிட்டிருந்தமையால், மனம்விட்டு இங்குவந்து பேசுவாள். மற்றவர்களின் வார்த்தைகளை மதிக்கமாட்டாள்.
ஒரு தினம் இங்கு வந்திருந்தபொழுது, இரவு முழுவதும் என் தாயிடம் கதறியிருக்கிறாள், \"இனி இங்கேயே உங்கள் மகள்போல இருந்துகொண்டு வாழ்ந்துவிடுகிறேன், கணவனிடம் செல்லமாட்டேன்\" என்று பிடிவாதமாக சொல்லியிருக்கின்றாள்.
நம் சமூகம்தான் எப்பொழுதும் இதுபோன்ற குரல்களுக்கு மதிப்பளிப்பதில்லையே.
அறிவுரைகள் பல அள்ளி வழங்கப்பட்டன.
கடைசியில் ஊருக்குச் செல்ல கிளம்பினபொழுது சொன்னாள், என் காதுகளில் இன்றும் 42 வருடங்கள் கழித்தும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது, \" நான் போகிறேன், இனி உங்களிடம் வரவேமாட்டேன்\" என்று விரக்தியான ஒரு தாழ்ந்த குரலுடன். அந்த வார்த்தைகளை யாரும் பெரிதுபடுத்திக்கொண்டதாகத் தெரியவில்லை. இதுதான் விதி.
ஆனால் இந்தகாலங்களில் இப்படி நடந்துவிடுவதில்லை. மதியினை பயன்படுத்தி விடுகின்றனர், மக்கள்.
பத்து நாட்களுக்குப்பின் எங்களூரில் எங்களின் தாத்தாவின் அறுபதாம் திருமணம் தடபுடலாக நடந்தேறியது.
அன்றுகூட என் அக்காவின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவள்தான் ஏற்கனவே என் தாயினை கண்டுவந்தபின் முடிவு செய்துவிட்டாளே, என்ன எப்படி அதை நடத்தவேண்டுமென்று. எல்லோரும் விடைபெறும் சமயமும் ஒரு வார்த்தையை விட்டாள், \"அடுத்தவாரம் சந்திப்போம்\" என்று.
சில நேரங்களில் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை நாம் தவற விட்டுவிடுகிறோம்.
பொங்கல் திருநாள் என்றால், படிக்கும் பிள்ளைகளைக் கொண்டுதான் வீட்டுவேலைகள் அனைத்தையும் செய்யவைப்பார்கள் நம் பெற்றோர்கள். இது இங்கு தமிழகத்தின் வழக்கம்.
அப்படித்தான் அவனும் தன் பெற்றோருக்கு கட்டுப்பட்டு வீட்டுக்கு வெள்ளையடித்துக் கொண்டிருந்தான்.
ஒரு தந்தி வந்தது.
அந்தக் காலத்தில் எல்லாம் தந்திதான்.
தந்தி என்றால் ஏதோ செய்தி, கவனித்தான் எல்லோரையும்.
படித்தவுடன் தந்தையின் தலைகவிழ, தாய் கதரிக்கதரியழ, விஷயம் தெரிந்தபின்னும் அவன் அழவில்லை.
அதுதான் இன்றுவரை அவளை நினைக்கும் பொழுதெல்லாம் அழுதுகிடக்கின்றானே.
அவள் விஷமருந்தி இறந்துவிட்டிருக்கிறாள்.
ஊர் செல்லும்வரை எந்த எண்ணமும் தீண்டவில்லை.
அவளை அமரவைத்திருந்தார்கள்.
அவளின் முகத்தழகு அவள் இறந்ததினை உணர்த்திட முடியவில்லை. சிரித்துக் கொண்டுதானிருந்தாள். உறவினர்கள்தான் ஒவ்வொரு நிமிடமும் உணர்த்திக்கொண்டிருந்தனர் அவள் இறப்பை.
அவள் இறந்த அறையினுள் அந்தக் கட்டிலில் சென்று அவனும் படுத்துக்கொண்டான். சிந்தனையேதும் இல்லை. எல்லாமும் நின்றுவிட்டிருந்தது. ஓடாத கடிகாரம்போல்.
அவள் அவனுக்குள் தன்னை முழுவதுமாய் பரப்பிக்கொண்டு இருந்திருந்தாள். அது அந்தப்பொழுதில் அவனால் உணர முடியவில்லை. இந்தநிமிடம்வரை இப்பொழுதும் அவளிருப்பை அவனுள் உணரமுடிகிறது.
வெளியில் சொன்னால் முட்டாள் என்று பட்டம் கட்டிவிடுவார்கள்.
நாட்கள், வருடங்கள் கடந்துவிட்டிருக்கின்றன.
இன்றும் அவள் போட்டோவினுள்ளும் எனக்குள்ளும் சந்தோசமாய் சிரித்துக்கொண்டுதான் இருக்கின்றாள். சில நேரங்களில் என் மகளின் சிரிப்பினூடே அவளை காணமுடிகிறது. கொஞ்சம் மாற்றிக் கொண்டிருப்பாளோ தன்னை.

பெண்மை

குயிலின் ஆனந்தப் பாட்டு,
கூவிநின்ற திசை நோக்க,
பாடினவன் பறந்தேவிட்டான்.

விரட்டிநின்ற தென்றல் வலிமை,
விட்டோடிப்பறந்த, அலையலையாய்
தவன்ற மேகக்கூட்டங்கள்போல்.

என்னிம்சை போதுமென்று
மௌனமொழி காட்டிநின்றாள்
மந்திரப்புன்னகைக்காரி இமசையரசி.

கண்ணழகிருந்தென்ன, கன்னம்
கிண்ணமாய் அமைந்தென்ன,

எண்ணம் இனிமையாயிருந்தென்ன,
எழுதி வைத்த மை கருத்தென்ன,

சங்கீதமொழி உரைத்தென்ன,
சந்திரனை முகம் கொண்டென்ன,

கள்ளமில்லா அன்பு பொழிந்தென்ன,
கருணைக் கடலாயிருந்தென்ன,

கசக்கிப் பிழியத்தான் பெண்மை.
அடிமைப்படுத்தத்தான் ஆண்மை.

பூமியினை பூத்தே நிற்கும் கடப்பாரைகள்,
பொறுமைகொண்டு அடங்கிக் கிடப்பதால்.

Sunday, 8 July 2012

பச்சையாத்தாவின் பசுமை நினைவுகள்

அவன் வேலைகளிலிருந்து ஓய்வுபெற்று சரியாக நூறு நாட்கள் முடிந்திருந்தன. 
ஒய்வு என்றதும் அரசுவேலை என்று நினைத்துவிடாதீர்கள். அவனின் வயது 55 . சுயதொழிலில் அளவுகடந்த மன உளைச்சல். தானாகவே ஒய்வு பெற்றுக்கொண்டான். 

சொந்தஊருக்கு செல்லலாம், கொஞ்சம் மன அமைதி கிடைக்கும் என்று கிளம்பினான். அது ஒரு அழகிய குக்கிராமம். 
கல்லூரிநாட்களில் கோடைவிடுமுறை என்றால் அந்த கிராமமே அவனுக்கு கதி. 
அவன் அத்தைமகள், காதலி. மிகுந்த அழகானவள். அவளுக்குக்கூட அவள் உதட்டில் ஒரு அழகான........ சரி அதுவல்ல முக்கியம், தோல்விக்கண்ட காதல். 

அந்தக்கிராம வீடு, ஊருக்குள் செல்லும் பாதைகளனைத்தும் கொஞ்சம் மாறிவிட்டிருந்தன. அங்கிருந்துதான் இந்த மரப்பலகையினாலான பெஞ்ச் என் தந்தையின் பங்குக்காக கிடைக்கப்பெற்றது. தேக்கினாலானது. 
குடும்பம் மிகவும் பெரியது. எங்களின் தாத்தாவின் சகோதரர்கள் குடும்பங்கள் பற்றிகூட நாங்கள் அறிந்துகொண்டிருக்கவில்லை. 

பள்ளிநாட்களில் செல்லும்பொழுது என் பத்து வயதில் என் பாட்டி, அதில் படுத்திருப்பாள். 
பச்சையாத்தா, அவள் பெயர். அப்பொழுது வயது தொண்ணூறு. ஆனாலும் காலையிலும், மாலையிலும் அந்தக்கூனுடன் வீட்டை முழுவதும் கூட்டிப்பெருக்கிவிடுவாள். வேறு யாரையும் செய்யவும் விடமாட்டாள். 
எங்கள் இளையபட்டாளம் அவளின் பின்பலம் அறியாமல், மேம்போக்காக அவளைச் சீண்டிநிற்போம். அவள் தூங்கும்பொழுது மூக்கினுள் மாத்துக்குச்சியை நுழைத்து உசுப்பேற்றுவோம். கோபம்கொள்ள மாட்டாள். அதுதான் சிறப்பு. மேலும் மிகவும் அன்பானவள். 

அவள் ஒருநாள் இறந்தேவிட்டாள். நாங்களும் எந்த எதிர்பார்ப்புமின்றி காலையில் கிளம்பி மாலையில் வந்துசேர்ந்தோம். இந்தக்காலத்தில் கிராமத்திற்குச்செல்ல 2 மணிநேரம் ஆகின்றது. 
அங்கு வீட்டின்முன் ஏகக்கூட்டம் கூடிநின்றது. திருமணவிழாவினைப்போல. 
முதல்முறையாகத் திகைத்துவிட்டிருந்தேன். அப்புறம் விசாரித்ததில் தெரியவந்தது, எனக்குப் பெரியதாத்தாக்கள் மட்டுமே பத்துபேர் என்பது. அதுவரை அவர்களெல்லாம் என் உறவுக்காரர்களேன்று தெரிந்துகொண்டதில்லை. மேலும் எந்தநாளும் அவர்களை நான் கண்டதுமில்லை. 
அவர்கள் பெரும்பணக்காரர்கள். சொல்லப்போனால் என்தந்தையே ஒரு பெரியதாத்தாவிடம்தான் வேலை . பார்த்துக்கொண்டிருந்திருக்கின்றார் .
மற்றவர்களுடன் இருக்கமாட்டேன் என்றுதான் பாட்டி என் தாத்தாவீட்டில் இருந்திருக்கின்றாள். 
அந்த பலகைக்கட்டிலில் இதுவரை எத்தனையோமுறை நான் படுத்திருந்திருக்கிறேன். ஆனாலும் அவள் நினைவு வந்ததில்லை. 
வீடு என்னை அவளின் நினைவுகளில் கரைத்துவிட்டது. 
தாத்தாதான் ஒருநாள், கடைசி நாட்களில் அவளைப்பற்றி கூறினார். 
மிகவும் நல்லவள். 
கேட்டவற்கெல்லாம் உதவுபவள். 
கெட்டவர்களை பார்க்க மறுத்துவிடுவாள். 
அப்படித்தான் மற்ற தாத்தாக்கள் அனைவரையும் 15 வருடங்களாக சந்திக்க அனுமதித்ததே இல்லை. 
நல்ல ஞாபக சக்தி. 
நான் பிறந்த சமயம், இவன் தொழிலில் சிறப்பாக வருவான், என்று வாழ்த்தினவள். 
சமையலில் கில்லாடி. 
மாடுகள் கட்டி பால் விற்பாள். அது அவளின் பொழுதுபோக்கு. 
வீட்டிற்கு வரும் யாருக்கும் விருந்தளிக்காமல் அனுப்பியதில்லை. 
பணத்தை மதித்ததில்லை. அன்புக்கு மட்டுமே மரியாதை. 
பாட்டா திடீரென்று பணத்தையெல்லாம் இழந்து நின்றபொழுது, ஆறுதல்சொல்லி அவளின் சம்பாத்தியத்தில் அவருக்கு சோறு போட்டவள். பாட்டா இறந்தபின்னும் குடும்பப்பொருப்பினை கையிலெடுத்து, எல்லோரையும் கரையேற்றினவள். 

அந்த வீட்டினுள் இன்னும் அவள் இருந்துகொண்டுதான் இருக்கிறாள். இல்லையானால் அவள்பற்றின சிந்தனைகள் இந்தநிமிடம் எனக்குத் தோன்றுதலேன். 

அவளுக்கு சிறுவயதில் நாங்கள் கொடுத்த சில்மிஷ விளையாட்டுகளை எண்ணி வெட்கமாக இருந்தது. 

வெளிவரும்வேளை ஒரு இனம்புரியாத நிம்மதி. அவள் படுத்துறங்கின பலகைக்கட்டில் இப்பொழுது என்னிடம்தான் உள்ளது. 
வீட்டினுள் நுழைந்தவுடன் அந்தக்கட்டிலில் படுத்தேன். கண்களில் சில நீர்த்துளிகள். என்னவாக இருக்கும், என்னை ஆசீர்வதித்திருப்பாளா.

Saturday, 7 July 2012

காதலை மறந்துநின்ற கிளி

உன்னை .............நினைக்க மறக்கவில்லை ..........

எத்தனை முறை என்னைஉனக்கு
காண்பித்தும்,
உன்பித்தும், என்பித்தும்
குறையப்போவதில்லை.

நீ குடித்து கடல்நீரினை வத்தடிக்கமுடியுமா?
அல்லது
நான்தான் வடித்த முத்தத்தால் உனை நிரப்பிடமுடியுமா.

சேர்ந்தபின்
நம்மைப் பிரித்திடத்தான் முடியுமா.
சேர்த்துவைத்த
நட்புக்காதலைத்தான் மறைத்திடல் முடியுமா.

இலங்கையின் மடியினில் தவழ்ந்து,
இளங்கையின் மணம் ருசித்து,
கலங்கலில் கவிதைகள் படித்து,
கணங்களை காற்றினில் பறக்கவே விட்டு,

சிக்காகோவினுள் புகப்போகும்
திருவிளக்கே, சிறுனகையே,
சிற்றிடைச் செந்தாமரையே,
வருக வருக நிலா மனம்கனிந்து.

குயிலின் ஆனந்தப் பாட்டு,
கூவிநின்ற திசை நோக்க,
பாடினவன் பறந்தேவிட்டான்.

விரட்டிநின்ற தென்றல் வலிமை,
விட்டோடிப்பறந்த, அலையலையாய்
தவன்ற மேகக்கூட்டங்கள்போல்.

என்னிம்சை போதுமென்று
மௌனமொழி காட்டிநின்றாள்
மந்திரப்புன்னகைக்காரி இமசையரசி.

Sunday, 27 May 2012

மயங்கின மலர்

புதிய மஞ்சளாடையில் புதிய காலை,
அதில் புத்தம்புதிதாய் ஆதவன்,

புதிய ஒளிக்கதிரினுள் ஒளிந்துகொண்டு
ஓடித்திரிந்த உயிருள்ள புதிய தென்றல்,

தென்றலின் ஸ்பரிச உரசலில்
புத்துயிராய் மலர்ந்த புது மலர்.

தேனுண்ட வண்டு மயங்கக்
கண்டோம் இவ்வன உலகத்தில்,

வண்டுண்ட தேனால் மலர் மயங்கக்
கண்டதென்னவோ இந்நிலவொளியில்தான்.

கவிதை எழுதுவாயா என்றேன்.
விழிகளில் விருத்தம் எழுதிநின்றாள்.

உதட்டசைவினில் சொக்கும்படி
இனிய குரலில் பாட்டுப் பேசினாள்.

அழகிய ஒடிந்த இடைநடையில்
நடனமும் ஆடிக்காட்டிவிட்டாள்.

நா நனைய சுவையாய் சமைப்பாயா?- கேள்வி.
ஒட்டின உதடுகள் சுவையாக்கின கொட்டிய நா.

நடைபயிலும் குழந்தைக்கு வயிறு புடைக்க
உணவூட்டி மகிழும் தாய் போல்,

கவிதையுலகில் என் எண்ணங்கள்
அனைத்தையும் விரவிக் கரைத்துவிட்டும்,

மலர்த்தேனுண்ட வண்டினைப்போல்
என்னுள் தேடித்தேடிக் குடிக்கின்றாயே,

போதவில்லையா இந்த போதை, மீள
மனமில்லையா உன்னின்ப மூளைக்கு.

காதலும் கவிதைகளும் மட்டுமே

இந்த அறிமுகம் கூட நன்றாகத்தான் இருக்கிறது,........................

அறிமுகம் நன்றுதான். அதற்காக
நரிமுகம் காட்டிவிடாதே!

சரிமுகம் காட்டி கண்ணுக்குள் வைத்து என்னைக்கட்டிவிடாதே.

சிரிமுகம் காட்டி சிருச்சிருக கொன்று
வதைத்துவிடாதே.

பரிமுகம் காட்டி உன்னுள் என்னைப் புதைத்துவிடாதே.

மௌனங்களால் விலங்கிடப்பட்டு,
விலகிக்கிடந்த குழம்பின வாழ்க்கைதான்.

பயமறியாத கபடமில்லாத மனங்களின்
துணையுடன் கட்டப்பட்ட வீடுதானிது.

இருந்தும் முகம் பழகின சமயம்,
முடிந்து நிற்கின்ற காதல் நிலைதான்.

வஞ்சங்களும், வம்பு வார்த்தைகளும்
நெஞ்சை உருக்கிச் சிவப்பான நினைவுகளும்தான்.

நிஜங்களை உணரமறுக்கும், பணம்
தின்னும் பிணப் பேய்களையும் உணர்ந்தபின்,

விடுதலையாகி வாழ்ந்துகிடப்பது என்னுள்,
கரைந்து விழுந்துகிடக்கும் இக்கவிதைகளே

இம்சையரசிதான் நீஎனக்கு

மழை பெருகி வழியும் ஓடைகள் நூறு,
சேர்ந்து வளைந்து நெளிந்து ஓடிடும் ஆறு.

அளவு மிகுந்து ஆடிட அணைகட்டி,
அடங்கிட்ட, ஆழ்ந்த அமைதியாய் நினைவு.

பெருகிட்ட கனவலைகள் ஏற்பட்டதுன்னால்,
அடைக்கமுடியவில்லை, ஆணவநிலை.

நினைவலைகள் இட்ட குஞ்சுகளாய்
நீந்திக் கணக்கும் கனவலை மீன்கள்.

கட்டி வைத்திருந்த கண்கள்,
விட்டு வைக்க முடியாத விரல்,
சுட்டு சுருண்டு விழுந்த மேனி,
பட்டுச் சிக்கிச் சிதைந்த மனம்,

ஒட்டியிருக்கும், ஊசலாடும் உயிர்,
விட்டுவிட துடித்து முடியாமல்,
வெட்டிவிடவும் வகையில்லாமல்,
கட்டிவைத்துக் காத்திருக்கும் காதல்,

சட்டையினை உரித்து, உதிர்த்து,
உடல் வெளிவந்து உலகையே
அதிரவைக்கும், உயிர் உறையவைக்கும்,
கொடியநஞ்சினைக்கொண்ட நாகம்போல்,

என்னினின் துன்பம் தொலைத்து,
எண்ணின வன்மம் புதைத்து,
இன்பம் விதைத்து, உலாவந்தது,
உன்னின் கடை விளைந்த காதல்.

இந்த நிமிடமும் எந்த இடையிலும்
நொந்த நடையிலும் இன்பமே பயக்கும்
என்னின்ப இதயராணி, இம்சையரசி,
உன்னின்ப உணர்வு விழியசைவால்.

முத்தம் ஒன்று தா

அசந்து மறந்தால் இறுக்கி,
மூச்சை அழுத்தி நெருக்கி,

உயிரை உருவி உருக்கி,
உடல் விழுங்கியுடல் பெருக்கி,

நிலைமறந்து கிறங்கி,
உறங்கி, கிடக்கும் மலைப்பாம்பு.

அது உயிர் துறத்தி
உடல் பெறுவது.

காதலி,

அன்பு முகம் இறுக்கி,
அனைத்த முத்தம் நெருக்கி,

உயிர் கலந்து உருகி
உறிஞ்ச, உடல் மருகி,

உறைந்து கிடக்கும் உயிர்
பருகி, உடல் கலப்பது.

உன் வான்மழை உதிர்த்த
கனவு, வார்த்தைத்துளி,

வழிந்ததும், என் முகம்
ஏங்கிக்கிடக்குது அடுத்ததுளி.

அண்ணாந்து நோக்குது தினம்
மறுதுளி எப்பொழுதுவருமென்று.

பொய்யுரைப்பதூவும், களவுசெய்து
கண்ணுரைப்பதூவும்

கலங்காத காவியக்
காதலில் நற்கருப்பஞ்சாரே

இதையத்தின் துடிப்பிலும்
நீ லப்பை ஒலித்தால்
எனக்கு டப்பைக் கேட்குமாறு
செய்விக்கின்றாயே.

இரவுகளின் துடிப்புகள்
மூன்றாயினும் உயிரின்
துடிப்புகள் ஊன்றி நிற்கின்றதே,
கலக்கவே துடிக்கின்றதே!

காத்திருக்க முடியாமல்
ஒடியலையும் மேகங்களைபோல,
தேடித்தேடி நுழைகின்றதே!
நட்பினுள் இன்பக்காதலினை.

கனவினில் நீந்தி நீண்டுகிடக்கும்
நம் முத்தமே முடிந்திட மறுக்கும்,

இந்நிலையில், சந்திக்கும் நிமிட
உயிர்முத்தக் காலளவு உணர்தலேப்படி?

அதன் மொத்தசுவை முடிதலேப்படி?
ஆதவனின் ஒளிவெள்ளம் நிற்பதேப்படி?

அந்தச் சுவையென்ன, இனிப்பா?
இன்பம்கொள்ள இறைதந்த மோட்சமா?

உயிர் உரசலுக்கு நடக்கும்
உதட்டுரசல், ஒத்திகையோ?

உன்னையும் என்னையும்
ஒட்டக்கொடுத்த உயிர்பசையோ?

காலம் மறந்திடக் காமன்
காட்டும் கைவரிசையோ?

கலந்த சர்க்கரை பிரியமுடியா நீரினை
நினைவுறுத்தும் சுவைபிரியா நினைவலையோ?

காதலுக்கு வாழ்த்து

வான் மழைக்காக ஏங்கி,
வானம் பார்க்கும்
வறண்ட நிலமாக
இருக்கும் நான்,

புதிதாய் என்னுள்
வேர்விட துடிக்கும் நாற்றுக்கு
எப்படி
உயிர் கொடுக்க முடியும்...?

கேட்கமட்டுமே முடியும்
இந்தக்குயிலின் கீதத்தை,

காணமட்டுமே இயலும்
இந்தமயிலின் ஆட்டத்தை,

வீசுதென்றல் தனக்கான
இன்பம் நினைத்து வீசுதலில்லை.

வானமழையும் ஒவ்வொரு
நாற்றையும் வளர்க்கப் பொழிவதில்லை.

எல்லாப்பூக்களும் கனி
கொடுத்து நிற்பதில்லை.

சில முரண்பாடுகள் இன்றி
எவருக்கும் வாழ்க்கையில்லை.

எல்லையில்லா ஆகாயம்
அளவில்லா இன்பம்
நிரந்தரம், காதல்போல்.

ஈர்த்த கடலினை கோர்த்து,
எல்லைகட்டின மேகங்கள்
உருமாறும் தரிசனம்.

அற்ப ஆயுள் கொண்ட மேகம்
சொற்ப ஒளிகொண்ட வானை
அசுத்தப்படுத்தமுடிவதில்லை.

நிலை மாற்றம் கொண்டிருக்கும்
அவை, நிறைக்கமுடிவதுமில்லை.
அதுவே காமமும் காதலினைப்போல்

உயிரே......,

உன்னை நினைத்து
உனக்காக உயிர் வாழ,
ஆயிரம் பேர் இருப்பினும்.......,
எனக்கு மகிழ்ச்சியே......,

ஏனெனில் .......,

உன்னை நினைத்தே வாழ்ந்து......,
உனக்காகவே
உயிர் விடும் ஒரே ஜீவன்.......,
நாந்தானடா என் அன்பே.!

எனக்குள்............

கரைந்தே கலந்து கிடக்கும்
உன்னை இரும்பென எங்ஙனம்
பிரித்துப் பிய்த்தெடுக்க இயலும்.
அல்லது தேய்த்துக் கொல் எறும்பென.

தேடித்தேடி தழுவவந்த
வீசுதென்றல் தவழும்போழுது
தவற விட்டுவிட்டு அனுபவிக்காமல்,
ஜன்னலைக் குறை சொல்கிறேன்.

கனிந்த காதல் களிப்புற்று
கவலைமறந்து, கைக்குழந்தை
தாயிடம் பிதற்றி கைவைக்குமே
கைகள் கண்டவிடமெல்லாம்,

அதனினைப்போல் மனம்
நினைத்தவாறெல்லாம்
தினம்தினம் உளறித்திரிகின்றேன்,
உளம்முழுதும் உனையே நினைத்து.

காதலை வாழ்த்த விரும்பினேன்,
விழைவு ஒரு இனிய முத்தமாற்றம்
ஆன்மாவினுள் கொண்டாடினது.

இனிய அந்த முத்தத்தின்
கால அளவு, உறைந்த
ஒரு மணித்துளி, உணரமுடிந்ததா?

படத்தோற்றத்தின் சொத்துக்களின்
அளவு கூடிவிட்டமையால்,
சொத்துக்குவிப்பு வழக்காகியது.

Wednesday, 16 May 2012

நேர்மையாய் வாழும் மனநிலை கொண்ட இன்றைய இந்தியன்


1) வரிகட்ட மலைக்கிறான்.
ஏனெனில், அரசு செய்யவேண்டிய
மருத்துவ உதவி, நகராட்சி சாலைகள் பராமரிப்பு, குடிநீர், விலைவாசி கட்டுப்பாடு, கொசு ஒழிப்பு, ஏழைகள் மாதவருவாய் 15000 க்கு உயர்த்தும் முயற்சிவிவசாயத்திற்கு உதவும் தன்மை, தடையில்லாத மின்சாரம், ரௌடிகளை அடக்குதல், அரசு எந்திரம் மாமூல், லஞ்சம்  இல்லாத துரித நடவடிக்கைகள்,
இவைகளை செய்யவோ அல்லது கட்டுக்குள் வைக்கவோ எந்த முயற்சிகளும் மேற்கொள்வதில்லை.
2 ) நிலம் வாங்கும், விற்கும் பொழுது பத்திரப் பதிவுத் தொகையை குறைந்த மதிப்பில் பதிவு செய்கிறான். ஏனெனில் பதிவுக் கட்டணம் அதிக சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது.
3) தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் கொடுக்கிறான்.
தன்னுடைய நிலத்தை அரசியல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க மிகவும் கவனமாயிருக்க வேண்டியதிருக்கிறது.
கோடிகளை கொள்ளையடித்தவன் அதிகாரிகளை கையில் எடுத்து இஷ்டம்போல் செலவிடத் துணிகிறான். மேலும் பட்டா மாற்றம் துரிதமாக நடப்பதில்லை. பணம் இல்லையெனில் வாழவே முடியாத நிலையை உருவாக்கிவிடுகிறார்கள்.
4) வருமான வரிகள் கட்டும்பொழுது எப்படிக் குறைத்துக் கட்டுவது என்றே ஆராய்கிறான்.
நாம் கட்டும் வரிப்பணம் எப்படியும் நல்வழியில் அரசினால் செலவிடப்படாது என்ற கவலை.
வாடகை மட்டுமே 15000 வரை இருக்கும் பொழுது, வருமான வரையறை மிகமிகக் குறைவாய் இருப்பது.
 
கோடிகோடியாய் கொள்ளையடிக்கும் அதிகாரிகளும், அரசியவாதிகளும் வரியே கட்டாமல் வலம்வரும் பொழுது நாம் மட்டும் கட்டவேண்டுமே என்ற நிலை.
எப்படியும் எல்லாவித லஞ்சத்திற்கும் பணம் செலவளித்தேயாக வேண்டிய நிலையில் கறுப்புப் பணத்தின் உருவாக்கம் அவசியத் தேவையாகிறது.
5) அரசியல், அதிகாரிகள்  அராஜகத்திற்கு அடிபணிகிறான்.
தவறே செய்யாவிடினும் லஞ்சத்திற்காக ஏதாகிலும் குற்றம் கண்டுபிடித்து, தொழிலே செய்யவிடாமல் அதிகார துஷ்ப்ரயோகம் செய்து தொந்தரவு கொடுப்பது.
 கோர்ட், கேஸ்கள் முடிக்க 10 வருடங்கள் ஆகும் என்றநிலையை சாதகமாக்கி துணிந்து தப்பு, அராஜகம் செய்வது.
 
ஒரு கேள்வி: தொழில் செய்வோர்கள் எல்லா வகைகளிலும் தவிர்க்கமுடியாமல் அதிகாரிகளுக்கு லஞ்சமோ மாமூலோ கொடுத்தே வாழவேண்டியுள்ளது.
ஆனாலும் அவர்கள், வருமானவரி அதிகாரிகளையும் மற்ற அரசு அதிகாரிகளையும் சந்திக்கும்பொழுது பணம் கொடுத்த கணக்குகளுக்கும் விளக்கமளிக்க வேண்டியுள்ளது.
உண்மைகளையும் கூறமுடியாத நிலைமை.
அரசு, மக்களின் நல்வாழ்வுக்கும் வழிவகுக்காமல், தொழில் செய்வோரையும் வாழவும் விடுவதில்லை.