Tuesday 11 October 2011

தேன் கலந்த மழை

கருப்பு நிலாவே,
வானில் ஒளிந்து நிற்கும் அந்த அஞ்சுனாட்கள்,
மூன்றாம்பிறையின் வளரும் தேயும் இடைத்திதிகள்

ஒத்துநிற்குமே
ஒதுங்கி நிற்கும் மலர்மாதின் மங்கிய
மனம், கொதித்துக் கிடக்கும்
அந்தச் சிவப்புனாட்கள்.

வெண்மதியே,
முழுவடிவாய், வானில் ஒய்யாரமாய்
வட்டமிடும் அந்த மூன்றுநாட்கள்,
உன் மாதத்தின் உச்ச இன்பனாட்கள்.

மங்கையின் கொங்கைகள்
ஏங்கித் தவித்து, தேகம் சிலிர்த்து
சல்லாப நடனமிடும் சந்கீதனாட்கள்.

கெஞ்சுவதினை விரும்பினதில்லை,
ஆனாலும்
விரும்பியே உன்னிடம்
கெஞ்சிக்கொண்டே இருக்கிறேன்.

கார்மேகக் கூந்தலினுள் முகம்புதைத்து,
பெயரிலும் ஒட்டி உறவாடிநிற்கும்
நிலாவே,

கட்டிய சேலை காற்றாட
கலங்கின நெஞ்சம் சேர்ந்தாட
முகம் காட்ட மறுக்கும் மல்லிகையே,

அலையாடும் தேன்குளத்தில்
துள்ளியாடும் மீன்வனத்தில்
விளையாடி, மிதந்தாடும் தாமரையே.

விழிகண்ட வினையால் மேகம்
உடைந்து, வீழ்ந்த வெள்ளியாம் மழைத்துளிகள்,
மலர்ந்து நிற்கும் நின் மேனி உரசி, தேனாக.

No comments:

Post a Comment