Saturday 1 October 2011

ஒரு உடையின் வாழ்க்கை

என் நண்பன், எஜமான் உன் காதலன்
அந்த உரிமை தந்த இனிமை இது.

பருத்திநான் காற்றில் பறந்து விதைந்தேன்,
அவன் நீர் நிறைந்த அன்புத் தோட்டத்தில்.

அவனின் அரவணைப்பால் காய் வெடித்துப்
பஞ்சாய் முதிர்ந்து விளைந்தேன்.

விற்ற பொழுதில் சிறிது வருத்தம்,
பிரிய மனமில்லை பிரிதொரு ஏக்கம்.

பாசம் நேசம் கொண்டவனாதளாலும்,
தினம் கண்ணுற்ற காதலினாலும்.

விதவிதமாய்க் கைமாறிக் கடைசியில்
உருமாறினேன் நூலாயும் துணியாயும்.

கைவண்ணம், கலைவண்ணம் கலந்து
நிறவண்ணம் விரும்பும் உடையானேன்.

கடை பரப்பி உந்தன் விழிநுழைந்து
உன் உடலோடு உறுப்பும் ஆனேன்.

நெருப்பைச் சுட்ட ரத்தம் கண்டு நெருங்கி
பொறுப்பு கொண்ட அங்கம் பட்டுநின்றேன்.

பாடுபட்டு ஏறின உடல் இரவினில்
கூறுபட்டுக் கசங்கிக் களைந்து,

உளையப்பட்டபின் களைந்தவன்
முகம் நோக்கி வியந்தேன்,

கண்ணாளன் உன் மணவாளன்
என் நேசத்தின் திருவாளன்,

நின் மார்பினில் முகம் புதைத்து
இடைதனில் கரம் வளைத்து,

உன்னைச் சூடிக்கொண்டு சுகம் பாடும்
என் எஜமானன், உன் காதலனே என்று.

நிம்மதியுடனே தரை விழுந்துகிடந்தேன்
ஊடல் நாடகங்களைக் கண்டுகொண்டே.

No comments:

Post a Comment