Monday 31 October 2011

உறுத்திய உன் மனம்

நிற்கமுடியாமல் சிதறிக் கொட்டும் நீர்விழுது
கொண்ட கணத்த கார்மேகமாய்,

இன்பம் நிறைந்த அன்பு மழையை எனக்குள்
நித்தம் கொட்டித்தீர்க்கும் எனதன்பே!

அம்பு எய்திய மனம் விம்மி வீழ்ந்தபின்னும்
வம்பு செய்த மனம் கொண்ட என் ஆருயிரே,

கற்பனையில் காதலுக்கான கற்பை உரசிப்
பார்க்கும் கண்ணான என் கண்மணியே,

வேவு பார்க்க வந்த வெண்மதியின் வெள்ளைச்
சட்டையினில் கறையிட்டு அனுப்பியுள்ளேன்,

மறுபடியும் அது வான்வெளியில் 
தொலைந்துவிடக்கூடாது என்பதற்காக அல்ல.

நீ அதன் மயக்கத்தில் என்னைத்
தொலைத்துவிடக்கூடாது என்பதற்காக.

உன் உலகத்தினுள்ளே உறைந்து கிடக்கும்என்னை
கடைந்து கண்டெடுக்க நீ அனுப்பிய கறை நிலா,

உறுத்தி நிற்கும் காதலில் முழுமை பெற்றுத்
திரும்பவந்து சேர்ந்துவிட்டாளா?

இல்லை, திரும்ப வெட்கப்பட்டு திசை மறந்து
தினவெடுத்த தோள்களுடன் ஓடிவிட்டாளா?

No comments:

Post a Comment