Thursday 29 September 2011

நம் இறைவன் ஒரு விளக்கம்

மிகமிகச் சிறியாதாகவே சிவா,
இயற்கையின் கொள்ளளவில்.

இருப்புநிலையில் மிகப் பெரிதாயே கிருஷ்ணா,
வான்வெளியின் மொத்த அளவில்.

அனுபவிப்பில் இருவரும் ஒருவரே
உருவமற்ற தியான உலகத்தினில்.

காணும் பருப்பொருட்கள் அனைத்தும்
சக்தியின் உருவ வெளிப்பாடே.

உலவும் உயிர்பொருள் உருவில் சிறிதாய்,
பெரிதாய் வாழும் எல்லாம் ஆனைமுகனே.

வலியுணர்வு அற்ற உயிர்த் துடிப்புகள்
இயற்கையின் இனிய உணவுகளே.

மின்காந்த துண்டிப்பில் துடிப்பின்
அசைவமாயே அதன் அணுக்கள்.

மாறிவிழுந்த உயிர்த்துளியாய் மனிதம்
ஆறாம் அறிவுசுமந்த ஆறுமுகமே.

எல்லாமும் தெய்வமாகவே கொண்டாடும்
மரபே இறைக்கலப்பு இந்திரியம்.

No comments:

Post a Comment