Wednesday, 14 September 2011

பரிணாம வளர்ச்சி

முந்தய முடிவு:
இந்த பூமியில் ஓரறிவு கொண்ட உயிர்ச்சக்தி ஆறறிவுள்ள மனதவுயிராய் வளர்ச்சிபெற்றது கொண்டு பரிணாம வளர்ச்சி என்கின்றோம். அது மனித உருவுக்குப் பின் நின்றுவிட்டதாய் நம்புகின்றோம்.
முக்கியமான கேள்விகள்:
1) பரிணாம வளர்ச்சி என்ற ஒன்று பூமியில்  ஏற்படக் காரணம் என்ன?
2) பரிணாம வளர்ச்சி இத்தனைக் காலம் நடந்து முடிந்து பின்னர் மனிதன் உருவானபின் மட்டும் நடைபெறாமல் நின்று விட்டதன் காரணம் என்ன?
இதற்கான சரியான நம்பும்படியான விளக்கங்கள் விஞ்ஞானத்தில் தரப்படவில்லை.
வளர்ந்துகொண்டிருந்த பரிணாம வளர்ச்சி மனிதவுயிர் உருவானவுடன் நின்றுபோக வேண்டிய அவசியம் என்ன?
அது மேலும் மேலும் புதிய புதிய உயிர்களை உருவாக்கிக்கொண்டேதானே இருந்திருக்க வேண்டும். அது நின்றுபோக காரணம் என்ன?
ஒரு மனித ஆண்,பெண் உறவுகொண்டபின் மனிதக் குழந்தையே பிறந்து வந்திருக்கின்றது.
அதேபோல் எல்லா உயிரினங்களும் அதனதன் இனங்களையே இனவிருத்தி செய்திருக்கின்றன.

இங்கே பூமியில் விஞ்ஞானத்தின்படி எப்படி வெவ்வேறு விதமான உயிர் இனங்கள் உருவாக சாத்தியம் இருக்கின்றது?
ஆக பரிணாம வளர்ச்சி என்பதை விஞ்ஞானத்தின் மூலம் உணர மற்றும் உறுதிசெய்ய முடியாது என்பதே உண்மை.

ஆனால் இவற்றுக்கு சரியான விளக்கம் ஜோதிடத்தில் இருக்கின்றது.

தற்போது செய்திகளில் படிக்கிறோம் "மனிதக் கால்களுடன் ஆட்டுக்குட்டியின் பிறப்பு. குட்டி பிறந்தவுடன் சிலநிமிடங்களில் இறப்பு"என்று.
இதற்குக் காரணம் மனிதன் ஒரு ஆட்டைப்  புணர்ந்ததால் வந்த வினை.
இதில் நாம் உணரவேண்டியது, இதுபோன்ற மாற்றின உடலுறவு,
கரு உற்பத்தியை நடத்துகின்றது.
கரு வளர்ந்து, கலப்பினக் குழந்தையை பிறப்புவிக்கின்றது.
வயிற்றினுள் வளரும்பொழுது உயிருடனேயே இருக்கின்றது, ஆனாலும் பிறந்த சிலமணிகளில் இறந்தேவிடுகின்றது.
அதாவது பூவுலகில் அதனால் உயிர் வாழமுடியவில்லை.

பரிணாம வளர்ச்சியின் அடித்தளம் இங்கேயே மறைந்திருக்கின்றது.

ஜோதிடம் தரும் விளக்கம்:
பூமி தன் நிலையான புவியீர்ப்புச் சக்தியால் மட்டுமே உயிர்களை உருவாக்க முடிவதில்லை.
பூமிக்கு காந்தசக்திப் பாதிப்பினை உருவாக்கும்
இறைச்சக்தி, சூரியன், சந்திரன், அருகாமையில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள், இவைகளின் காந்தத் தூண்டலில்தான் உயிர் உருவாக்கம் துவங்கியது.
இவற்றுடன் முக்கிய நாயகக் கிரகம் astroids.

astroids எனும் விண்கற்கள் கூட்டம் முழ கிரக வடிவில் இருந்தபொழுது, பூமியில் ஒரு தனிப்பட்டக் காந்தச் சுழல் இருந்தது.
அந்தசமயம் புணர்ச்சி கொண்ட மாற்று இன உயிர்கள் புதிய புதிய உயிர்களையே உருவாக்கிக் கொண்டிருந்தன.
ஒவ்வொரு இன உயிர்களும் மனம் போனபடி மாற்று இன உயிர்களுடன் உடலுறவுகொண்டு வாழ்த்தன.
அவைகளே பரிணாம மாற்றங்களை தன்னுள் கொண்டிருந்தன.
பிறந்த புதிய உயிரினமும் உயிரோடு முழுமையாய் வாழமுடிந்திருந்தன, astroids முழு கிரகமாய் இருந்தவரையில்.
மனிதனும் அந்த நிலையில்தான் உருப்பெற்றிருந்தான்.

பின்னர் astroids பல மோதல்களால் சிதறுண்டு பாறைகளாய் மாற்றம் பெற்றபின் பூமியின்மேல் அதன் காந்தச் சுழலும் மாறிவிட்டிருந்தது.
இந்த மாற்றத்திற்குப்பின் உயிரோடிருந்த உயிரினங்கள் அனைத்தும் தத்தம் இனங்களுடனே உடலுறவு கொண்டு, தத்தம் இனங்களையே பிறப்புவித்தன.
மாற்றினத்துடன்உறவு கொண்ட பொழுது குட்டிகள் பிறந்தவுடன் இறந்துவிட்டிருந்தன முழு கிரகமாயிருந்த பொழுது astroids இன் காந்தப் பாதிப்பு இல்லாததினால்.

இப்படியாகவே பரிணாம வளர்ச்சி இந்த பூமிக் கிரகத்தில் நடந்து முடிந்திருக்கின்றது.
இதுவே ஜோதிடத்தின் மூலம் உரைக்கப்படும் பரிணாம வளர்ச்சியின் காரண விளக்கங்கள் ஆகும். உண்மையின் விளக்கமுமாய்.

No comments:

Post a Comment