Monday, 19 September 2011

உனக்கான தனியிடம்

காதலை எனக்குக் கற்றுத்தந்தது,
என்மீது தைக்கப்பட்ட உன் விழியம்புகள்.

தைத்த உன் பார்வைத் தூண்டில்
சிக்கிய என் காதலினைக் கனியவைத்தது.

காதலையும் எனக்கு மறக்கடித்தது
உன் விளைந்து செழித்த மலர்கள்.

பூங்கொடி விளையாட, வளையாட
இந்தப் பூந்தோட்டத்தில் மடியுண்டு.

கலைந்தோடிக் களைப்பாற
மஞ்சத்தினில் முத்தமுமுண்டு.

நெஞ்சம் மயங்கி மலராட
உள்ளத்திலே உறைந்த உறவுமுண்டு.

No comments:

Post a Comment