Thursday, 1 September 2011

கள்ளு

ஆழாக்கே எனினும்
அத்தனையும் அமுதம்.
 படைப்பினில் உச்சமாம்
இறைவனின் அமைப்பில்,
உண்ணும் ஒவ்வொருவரின் கூற்று.
உள்ளே நுழைந்ததும்
உலகமே இன்பம்தான்.
கவலையெல்லாம்
காலைப்பனியாய்.
சிந்தித்தால் அவ்வளவுக்கும்
விடைதான்.
கேள்வியேதும் மிச்சமில்லை, .
துணிச்சலின் உச்சமாய் உன் வாசம்.
கவலை கொள்ள வழியுமில்லை.
இயலாதவை எல்லாம் முடியும்.
உன் சிரிப்புக்கும் அழகிய அர்த்தம்.
அழுகைக்கும் சுரம் பிரிக்கும் சோகம்.
ஆனாலும் உன்மீது வெறுப்புத்தான்
ஒவ்வொரு பூவைக்கும்.
உனக்கு தோல்விதான் என்னிடம்
என் காதலுக்காய்.

No comments:

Post a Comment