Monday, 19 September 2011

உன் ஸ்பரிசம்

சுவைநிறைந்த ஒட்டு மாமரம்,
ஒட்டி நின்ற மாங்கனி சுட்டுநின்றது.

சுட்டு நின்ற உன் சுவாசம்
தென்றலையும் விட்டு வைக்கவில்லை.

விட்டு விட்ட ஆவி எட்டிவிட்ட
கனிகண்டு பந்தி வைத்து பதறியது.

பந்திவைத்த உன் இளமை கண்டு
முந்தி நின்ற நாணம் மறைந்தது.

பூக்கள் என்ன செய்யும் பாவம்
புன்னகைத்து மறைந்தே நிற்கும்.

புனிதம் அடைந்துவிட்டது உள்ளம்
உந்தன் உன்னத உணர்வுகள் உணர்ந்து.

No comments:

Post a Comment