Tuesday, 6 September 2011

உண்மை

கால அவகாசம் தேவை,
எத்தனை எலெக்ட்ரான், ப்ரோடான் உள்ளது
இந்த அண்டசராசரத்தில் என சொல்வதற்கு.
சொல்வதற்கு முடியாதது,
வானத்தின் உயரம், கொள்ளளவு,
எண்களின் முடிவு எண்,
ஒரு கோட்டின் புள்ளிகள்,
பூஜ்ஜியத்தின் தன்மை,
தாயன்பின் அளவு,
கால முடிவு,
எதனால் செய்யப்பட்டவை
நிறம், சுவை, சுகந்தம், இசை, தீ,
எலெக்ட்ரான், ப்ரோடான், நியுட்ரான்,
என்ற அறிவு.
பரம காந்தமையமாய் சிவாவும்,
எங்கும் வியாபித்திருக்கும் கிருஷ்ணாவும்
அல்லாமல் வேறேது.
மொத்த உலகின் பரப்பளவின்
மிகப் பெரியதாய் கிருஷ்ணாவுமாய் 
மிகச் சிறியதாய் சிவாவுமாய்.

No comments:

Post a Comment