Tuesday, 6 September 2011

காலை

வானத்து தேவர்களின்
வாழ்த்து
ஞாயிறின் ஒளிக்கீற்று
குயிலின் சுருதி சுத்த
கூவல்
பிராணன் சுமந்து வரும்
தென்றல்
ஜென்மம் ஏற்றி கரைகிற
காகம்
மாமி வீட்டு
கற்ப்பூர, சாம்பிராணி வாசம்
கன்னிப்பெண்ணின்
வாசல் கோலம்
பக்கத்தில்
மழலையின் சிரிப்பு
எங்கேயோ முழங்கும்
சர்ச் மணியோசை
தூரத்து
ஆம்புலன்ஸ் கதறல்
அப்பாடா விடிகிறது
இந்தியக்காலை.

No comments:

Post a Comment