Wednesday, 21 September 2011

உன் கண்ணசைவு

எனக்காக மட்டுமே வரையப்படும்
உன் கவிதை இதழ்கள்.

உனக்காக மட்டுமே நிலைகொண்டிருக்கும்
என் காதல் கணைகள்.

வெப்பத்தினை உணர மறுத்துவிட்டாய்
தவிப்பினைத் தந்துவிட்டு.

உலையில் கொதிக்கிறேன் தேன் தந்து
பசியாற்ற வரமாட்டாயா.

காரண காரியங்கள் பலவுண்டு.
காட்சிப் பொருட்களும் இங்குண்டு
கலைக்கூத்தாட களமுண்டு.
கைத்தாளம் தட்ட மனமுமுண்டு.
கண நேரக் கைகலப்புமுண்டு.
கவிதை வழி நாணமுமுண்டு.
கண்ணில் மையிடக் கருவியுமுண்டு.
கரிசனம்கொண்ட ஜென்ம வரமுமுண்டு.


கருணைக் கண் திறக்க ஏதேனும்
வழியுண்டா? தினவுகொண்ட தோள்களே!

No comments:

Post a Comment