Thursday, 1 September 2011

புரியாப்புதிர்தான்

கனிந்த காதல்
கனியவிட்டவள்  ,
கடைக்கண் காட்டி
கதை பல  சொன்னவள்,
கடைவீதியின் கண்களையெல்லாம்
கலைத்தவள்,
கவிதையாய் தன்னுள்
வாழவைத்தவள்,
கருத்தராத்திரி கைகால்களை தீண்டி,
கட்டியணைத்து முத்தமிட்டவள்,
கல்யாண வேளையில்
குடும்பம் மறுத்தபொழுது
மனமுடைந்தவள்,
காதலை உறவினர்க்காய்
காணிக்கையாக்கி,
கடைசியில் குழந்தைக்கு
பெயரைச்சூட்ட,
என்னை கைவிட்டவள்.
இப்பொழுதும் கனிவாக
சிரிப்பவள்.
காதலுக்கு கோவிலையே
கட்டிக்கொண்டிருப்பது.
எப்படி உங்களால் மட்டும் முடிகிறது.
புரியாப்புதிரே.

No comments:

Post a Comment