Wednesday, 7 September 2011

எல்லாம் இறை

எல்லை கட்டமுடியா வெளி,
கிருஷ்ணா.
அருவம் காண முடியா துடிப்பு,
ஷிவா.
உருவம் மறைக்க முடியா மெய்,
ஷக்தி.
ஆறாம் அறிவு அற்ற உயிர்ப்பொருள்,
விநாயகா.
சாதி மறுக்க முடியா மனிதம்,
முருகா.
வாழ வழி அறியா முட்டாளாய்,
குரு.
விலை பேச முடியா அன்பு,
தாய்.
கரை தாண்ட முடியா கடல்,
தாசி.
சொல்லி அழ முடியா மங்கை,
காதலி.
எல்லாம் இன்பமாய் முடியும்
ஒரு குழந்தையாய் கிருஷ்ணா கிடைத்தால்.

No comments:

Post a Comment