இன்பம் கலந்து கலையமுடியா
கனவுகள் சுமந்து காற்றினில்
மிதந்து வந்தேன், ஆனாலும்
நிதம் பெற்ற நிச்சயமில்லா
நினைவுகளில் நிம்மதியின்றி
நிலைகுலைந்தே பறந்தேன்.
வானில் வட்டமிட்டு
கீழ்நோக்குங்கால் காற்று
என்பக்கம் வீசும் என்றே நம்பினேன்.
நிலத்தினில் கால்மிதித்து
நினைவுக்குள் வந்தபின் நிலவினைக்
கலக்கத்துடனேயே கண்ணுற்றேன்.
மறைந்திருந்து மயக்கி பின்
மலர்ந்து மனம் வீசத் துடிக்கும்
மல்லிகையினைப் போல,
நிலவுமுகத்தில் நிலைபெற்ற
அமைதியினைக் கண்டு
கலவரத்திநின்று விட்டு விடுதலையானேன்.
சிறகுகளுக்கு சிரமமில்லா
சிந்தனைக்கு வழியுமில்லா
மொத்த அடிமையுமானேன்.
கனவுகள் சுமந்து காற்றினில்
மிதந்து வந்தேன், ஆனாலும்
நிதம் பெற்ற நிச்சயமில்லா
நினைவுகளில் நிம்மதியின்றி
நிலைகுலைந்தே பறந்தேன்.
வானில் வட்டமிட்டு
கீழ்நோக்குங்கால் காற்று
என்பக்கம் வீசும் என்றே நம்பினேன்.
நிலத்தினில் கால்மிதித்து
நினைவுக்குள் வந்தபின் நிலவினைக்
கலக்கத்துடனேயே கண்ணுற்றேன்.
மறைந்திருந்து மயக்கி பின்
மலர்ந்து மனம் வீசத் துடிக்கும்
மல்லிகையினைப் போல,
நிலவுமுகத்தில் நிலைபெற்ற
அமைதியினைக் கண்டு
கலவரத்திநின்று விட்டு விடுதலையானேன்.
சிறகுகளுக்கு சிரமமில்லா
சிந்தனைக்கு வழியுமில்லா
மொத்த அடிமையுமானேன்.
No comments:
Post a Comment