Wednesday, 21 September 2011

அடிமையாகாத நீ

அளவு வடிவம் பெற்ற உன் அழகிய
தோள்களுக்கு நான் அடிமை.

நிமிர்ந்த நேர்மையான உன் கூறிய
பார்வைத் தோற்றத்திற்கு அடிமை.

என் விழிகளை காணமாட்டாயா என் ஏங்கும்
உன் என்னோக்கா விழிகளுக்கும் அடிமை.

தெருக்கோடியில் நின்று வாதிட்டு மகிழும்
உன் கம்பீரக் குரலுக்கும் அடிமை.

நம்பி வந்தவர்க்கு இல்லையெனா
உன் கொடை உள்ளத்திற்கும் அடிமை.

என்மீது காதல் என்றுரைத்த வாலிபக்
கூட்டங்களருகே முகம் காட்டவே மறுத்து,

உன் மீது அளவில்லா காதலில் துடித்தும்
கண்டுகொள்ளாத மாசற்ற மனதிற்கு அடிமை.

மாலை ஆதவனின் மறைவு பொறுக்காமல்
கன்னம் சிவந்துகிடக்கும் மேகங்கள்போல்,

மணமுடித்துச் செல்கிறேன், என் காதல்
உணர்த்தமுடியாத சங்கடங்கள் சுமந்தே.

No comments:

Post a Comment