உன் எழுத்து வடிவ ஆறுதல்கள்
கிடைக்கப்பெறாத நாள்,
ஒரு முடிவுறாத நாளின் தன்மையையே
தனக்குள் கொண்டதாய் முடிகின்றது.
மறுநாளின் விடியல்கூட அர்த்தமற்ற
வாழ்வையே உணர்த்திநிற்கின்றது.
ஒரு சிறு கவிதை வரியைக்கூட
கனியவைக்க முடியவில்லை உன்னால்.
கல்லான மனம் கொண்டு
சிலை செதுக்க முனைகின்றாய்.
கதவு திறந்தே இருக்கின்றது
நீ என் மூச்சுக் காற்றை சுவாசிக்க.
கிடைக்கப்பெறாத நாள்,
ஒரு முடிவுறாத நாளின் தன்மையையே
தனக்குள் கொண்டதாய் முடிகின்றது.
மறுநாளின் விடியல்கூட அர்த்தமற்ற
வாழ்வையே உணர்த்திநிற்கின்றது.
ஒரு சிறு கவிதை வரியைக்கூட
கனியவைக்க முடியவில்லை உன்னால்.
கல்லான மனம் கொண்டு
சிலை செதுக்க முனைகின்றாய்.
கதவு திறந்தே இருக்கின்றது
நீ என் மூச்சுக் காற்றை சுவாசிக்க.
No comments:
Post a Comment