Wednesday, 21 September 2011

காதலின் கவிதைகள்

நாகங்களின் அற்புத நடனம்
அதன் புணர்வு ரகசியம்தான்.

கயிறு இழுக்கும் போட்டிகொண்ட
புணர்வு மிகமிக அழகு.

நீண்ட நேர கூத்துதான் ஆனையாரின்
கட்டுப்பட்டப் புணர்வு.

கலவி சுகம் முழுமை பெற்றது
குயில்களின் புணர்வு.

புணர்வுகளே வாழ்க்கையாய்க் கொண்டது
பஞ்சு முயல்களின் பள்ளியறை.

காட்டுராஜாவின் கதையே வேறு
கண்டவளுடன் காதல்.

மனிதக் கதறல்களுடனே முடியும்
காட்டுப் பூனையின் கலவி மணம்பரப்பி.

கண்ணுக்குப் புரிவதில்லை உண்மைக்
காதலின் உறைவிட்டு வந்த வாள்.

No comments:

Post a Comment