Sunday, 25 September 2011

மறக்கமுடியவில்லை

அடிவான அமைதி முழுநிலா
பூமிக்கு வைத்த வெண் போட்டு.

உச்சந்தலை உலவும் வெண்ணிலா
பெண்ணழகை முன்னிறுத்தும் விளக்கு.

வான்னிலவினைக் கண்ணுற்றபோழுது
உன் மலர் முகம் நினைவுற மறுத்து,

அதன் கலங்கமிகு கறைகளே
கவனத்தை விழுங்கிநிற்கிறது.

உன்பற்றிய இன்பநினைவுகளில்
மூழ்கித் திளைக்கும்போழுது,

உன் சந்திப்பு மறுத்த நிலையே
 மூளையோரம் முடங்கிக் கிடக்கின்றது.

தேளாய்க் கொட்டிச் சித்ரவதை
செய்து நினைவுகளைச் சிதைக்கிறது.

முழுமதியாய் முகம் காட்டவும்
மறுத்துவிட்டாய்.

முன்னின்று கவிதைமணம் பரப்புவதையும்
நிறுத்திவிட்டாய்.

நிறம் காட்டிப் பரவசப்படுத்திப்
பின் புறம்காட்டி பரிதவிக்கவைக்கின்றாய்.

நிமிடம் நேரம் கழிய மணித்துளிகள்
நித்திரையிலும் வெற்றுத்திரையாய்.

கண் திறந்து ஒரு அசைவை
தந்து என்னைக் கவிழவைக்க மாட்டாயா.

No comments:

Post a Comment