Wednesday 21 September 2011

விதித்த தடை

வலைந்த பாதைவழி கடக்கும்
உன் நடனமிடும் இடை.

அத்தனையையும் அனுபவிக்கத் துடிக்கும்
நாட்டமுடனே என் நடை.

அங்குமிங்கும் அசைந்தாடி அழைக்கும்
உன் பின்னலிடப்பட்ட ஜடை.

உள்ளிருக்கும் ரகசியங்களை உலகுபரப்பும்
உன் மெல்லிய ஜன்னல் உடை.

படை திரண்டு நிற்கும் உன்
விழியம்புகளின் ஊர்வலம்.

கடை பரப்பிக் குழப்பி நிற்கும்
உன் மயக்கும் முகத்தழகு.

ஊஞ்சலாட்டத்தில் ஆடிமகிழும்
உன் நெஞ்சம் உதிர்த்த தேன் அடை.

உளுந்து வடை அதற்கு ஏன் துளை,
நடுவினில் ஓர் கருமுத்து பொட்டு.

சுற்றிப் பார்ப்பின் சுழலும் சுற்றம்
சுத்தமாக விதித்த சுகத் தடை.

No comments:

Post a Comment