Thursday, 1 September 2011

வெறியன்

விஞ்ஞானி வசியின் மகன் சிவா, ias படித்த இரட்டைப்பிறவி மகன்களில் ஒருவன், இன்று பிரதமராக  பதவிப்ரமானம் எடுக்கிறார்.
அப்பா வசி, அக்கா மாலா, தம்பி ரவி, மற்றும் நாட்டின் எல்லா தலைவர்களும் இருக்கின்றனர்.
தாய் சனா கொல்லப்பட்டிருந்தார். அக்கா உச்ச நீதிமன்ற நீதியரசராக உள்ளார். தம்பி நாட்டின் ராணுவ ஜெனெரலாக இருக்கின்றார். அப்பா வயது 85 ஆகி ஓய்வில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.
 பிரதமராகி ஆறு மாதங்களுக்குப்பின் நாடு பெருமளவு மாற்றங்களுக்கு உள்ளாகியது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுப்படிப்புக்கும் இலவசக்கல்வி.
வீடு இல்லாத எல்லா குடும்பத்திற்கும் தனியாக அவரவர் படிப்புக்கு ஏற்றாற்போல் வீடு.
படிப்பு முடித்த மாணவர்கள் அனைவருக்கும் தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பு.
எல்லா குடும்பத்திற்கும் இலவச மருத்துவ வசதி.
ஒவ்வொரு குடிமகனுக்கும் முழு விபரங்களும் பதிவு செய்யப்பட்ட அடையாள அட்டை.
கருப்புப்பணம் எல்லாம் நாட்டிற்குள் வரவழைக்கப்பெற்று அதில் 50 % வரிக்காக எடுத்தபின் மீதம் வெள்ளையாக மாற்றப்பெற்றுவிட்டது.
வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போட வழிமுறைகள்.
 நல்லமுறையில் நாடு சென்று கொண்டிருக்கும்பொழுது சிபிஐ, பிரதமரை கைது செய்கிறது.flashback நிகழ்ச்சிகள்.
வசிக்கு 29 வயதில் திருமணம் நடந்தேறியது. முதலில் ஒரு பெண் குழந்தை, மாலா பிறந்தது. பின்னர் ஆண் இரட்டைக் குழந்தைகள், சிவா மற்றும் ரவி பிறந்தனர். 
இந்த நேரம், நாட்டில் உள்ள தீவிரவாத இயக்கங்கள் மற்றும் அரசியல் சக்திகள் வசியிடம் ரோபோக்கள் தயாரிப்பு பற்றிய ரகசியங்களை அறிய பயமுறுத்தின.
மறுத்ததினால் சனாவைக் கொன்று தீர்த்தனர்.
வசி, வெறியுடன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வடகிழக்கே ஒரு கண்காணா இடத்திற்கு குடிபெயர்ந்து, குழந்தைகளை வளர்த்தான்.
மாலா, சட்டம் பயின்று நீதிபதிக்கும் கற்று, நீதிபதியானாள்.
சிவா, ias கற்றுத்தேர்ந்தான்.
ரவி, ips முதல் மாணவனாக படித்து முடித்தான்.
சிவா கலெக்டராக பதவியேற்றான். ரவி ராணுவத்தில் சேர்ந்து பெரிய பதவி பெற்றான்.
இந்த சமயத்தில் அப்பா வசி, தன் கடந்தகால வாழ்க்கையின் உண்மைகளையெல்லாம் மகன்களுக்கும் மகளுக்கும் புரியவைத்தார்.
வீறுகொண்டு எழுந்தனர் மூவரும்.
நாட்டின் சாபக்கேட்டினை ஒழித்து நாடு முழுமையாக மாற்றம் பெற சபதம் பூண்டனர்.
ரவி, நேர்மையான வழியில் ராணுவத்தின் தலைமை பொறுப்பு ஏற்கவும்,
சிவா, ஊழலில் திளைத்து ஊழல் செய்யும் அரசியவாதிகள், அதிகாரிகள் மற்றும் தீவிரவாதிகள் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்த அரசியல்வாதியாக வரவும், உறுதி எடுத்தனர். 


வருடங்கள் பல கழிந்தன.
மாலா, உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறாள்.
சிவா, ஊழல் நாயகனாக நாட்டின் ராணுவ அமைச்சர் ஆகிறான்.
ரவி, நேர்மையான ராணுவ அதிகாரியாக, ராணுவ ஜெனரலாகிறார்.
எல்லா வழிகளிலும், எந்த நேரங்களிலும் மூவரும் தங்களின் பதவியின் பலத்தினைக்கொண்டு ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டனர்.
தேவையான நேரங்களில் மூவரும் ரகசியமாக சந்தித்துக்கொண்டனர்.
ஆனால் சிவாவின் அந்தரங்க காரியதரிசிக்கு மட்டும் சிவாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படுகிறது.
சிவா இப்பொழுது, நாட்டின் மோசமான அத்தனை அரசியல்வாதிகள், அதிகாரிகள் அனைவரையும் நண்பர்களாக கைக்குள் வைத்திருந்தான்.
சிவா, முடிவுசெய்தபடி தான் ஊழலின் மூலம் சேர்த்த பணத்தையெல்லாம் கொண்டு வெளிநாடு ஒன்றில் ஒரு பேங்க் ஒன்றைத்துவக்குகிறான்.
மற்ற ஒழல்வாதிகள் அனைவருக்கும் தன்னுடைய பாங்க்கை பற்றி கூறி, எல்லோரையும் அதில் பணத்தை டெபொசிட் செய்ய அறிவுரைக்கிறான்.
அதற்காக அந்த பேங்க் ஏற்ப்படுத்தப்பட்ட நாட்டிற்கு அனைவரையும் ரகசியச் சுற்றுலா அழைக்கிறான்.
ரகசியச் சுற்றுலா என்பதினால் எல்லோரும் செற்றுவர தீர்மானிக்கின்றனர்.
ஒரு வார சுற்றுலா மூன்று கப்பல்களில் சென்றுவர ஏற்பாடு செய்யப்படுகிறது. 
சின்னச்சின்ன ஊழல்வாதிகள் அனைவரும் வாலண்டியர்களாக ஏற்ப்பாடு செய்யப்பட்டு கப்பல்கள் கிளம்புகின்றன.
மறுகரையில் செல்லவேண்டிய நாடு நெருங்கும்  பொழுது கப்பல்கள் குண்டுகளால் பொடிப்பொடியாக தகர்த்து எறியப்படுகிறது.
நாட்டில் தற்பொழுது நன்மை செய்யக்கூடிய தலைவர்களும், அதிகாரிகளும் மட்டுமே மிஞ்சுகிறார்கள்.
நல்ல சந்தர்ப்பம் அமைந்து சிவாவையே எல்லோரும் பிரதமராக தேர்ந்தெடுக்கிறார்கள்.
சிவாவின் p.a  வுக்கு மட்டும் சந்தேகம் ஏற்பட்டு சிபிஐ ன் மூலம் கண்காணிக்கிறான்.

No comments:

Post a Comment