Monday 29 August 2011

மறப்பதெப்படி

விட்டுவிட்டால் தேன் சொட்டிவிடும்
ரத்தச் சிவப்பு இதழ்கள்.

கன்னங்களின் வண்ணங்கள்
அஞ்சும், பஞ்சு மெத்தைகள்.

கலைந்த நிலை, முகம் மறைக்கும்
கரிய கார்மேகக் கூந்தல்.

விலகிய இடைவெளியில்
கலைந்த உயிரை உறிஞ்சி
இழுக்கும் கருவிழிகள்.

வளைந்து தெளிந்த அழகிய
மலை முகடுகள்.

இடை, உடைந்த கானகவெளியின்
காட்டாற்று அருவி.

அவைகள் செய்யப்பட்ட நிலம்
கடவுளின் கருணை மனம்.

சந்தன வயல்களில் நட்டுவைத்த
கதிர்கள் நின் உடல் கருமயிர்கள்.

மொத்தத்தில் நான் கண்ட ஓர்
உன்னத உயிரோவியம் நீ.

உன்னை மறப்பதெப்படி?

No comments:

Post a Comment