Wednesday 31 August 2011

கடைத்தெரு ஜாடை

உன் கண் தழுவிய
என் கண்.
காணவில்லை என்ற
உன் எண்ணம்,
கண நேரத்தில்
தவிடுபொடி.

கண்ட என் மனம்
கனவின் மிதப்பில்.

விதைத்த காதல்
சுமந்த காதலி,
விதைப்பு உடை, நகைகளில்.
அழகுதான் எல்லாமும்.

கண்களால் அமைந்த
உரைகள்,
நாணம் தடவிய
பசையினால்,
ஒட்டித்தடுமாறின
வார்த்தைகளில்,
அருகினில் வரும்பொழுது.

மன இடைவெளியில்
முத்தாய்ப்பாய், ஆட்சிகொண்ட
நாகரீக நண்பன் மௌனம்.

நீர் விழுதுகள் கொண்ட
மேகமோ,
உன் காதல் விழுதுகள்
கொண்ட கண்கள்?

என் ஈரல் சுவர்
பூசப்பட்ட நேசம்,
உன் மூச்சிகாற்றின்
ஈர சுவாசம்.

ஒற்றை நொடியினில்
ஓராயிரம் மின்னல்கள்
உன் விழியோர உரசலினால்.

மற்ற எதுவும் நினைவில்லை,
உற்ற நண்பன்கூட மறைந்தநிலை.

சென்ற வாழ்க்கை தேவையில்லை
நின்ற பொழுது போதும் எனக்கு,

உன்றன் விழி எனை
தீண்டி நின்ற
நிழல் நீடிக்கும் வரைக்கும்.

No comments:

Post a Comment