Monday 29 August 2011

நீ வருவாயென

காட்டு மரங்களின் அடர்த்திபோல்
விதைத்திருந்தது கனவுகளை எனக்குள் .

காட்டுத்தீயின் கலைந்த வக்கிரம் போல்
சுழண்டிருந்தது கலவித்தீயின் கனல்கள்.

வாழ்வு முழுமையும் இனி தனக்குமட்டுமே
என்று மத்தளம் தட்டிநின்றது மனசு.

உச்சமாம் உலகத்தின் அத்தனையும் தன்
பின்னேதான் என்ற எக்காளம் உடலுக்கு.

புடைத்த அத்தனை நரம்புகளும் ஒரு
சல்லாப நாடகமே நடத்திமுடித்திருந்தன.

மஞ்சம் நினைத்த பஞ்சு நெஞ்சம், உன்
வஞ்சம் புரிந்துகொண்டு மாண்டு மிஞ்சும்.

சலிந்த தேகம் சரிந்து வீழ்ந்து, மலந்து,
மீளும் மருஜென்மமாய்.

No comments:

Post a Comment